ஞாயிறு, ஜனவரி 19, 2014

சந்திரனை தொட்டது யார்



சாய்ந்து சாய்ந்து தான்
பார்த்துக் கொண்டிருக்கிறது
அந்த நிலவை...
#இந்த பூமி...
(23.5டிகிரியில்)

பூமியின் நிழலில்
ஒளிந்து கொண்டே
வெட்கத்துடன் எட்டிப்பார்க்கிறது
பூமியை....
#அரைநிலா...

கவிதை என்ற பெயரில் கிறுக்கி கொண்டிருக்கும் நான் முதல்
உண்மையாகவே கவிதை எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் முதல்
நிலாவை தொடாதவர்கள் யாவரும் இலர்.


ஆனால் உண்மையாகவே நிலாவை முதன்முதலில் தொட்டவர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்.
(கடுப்பாகாதிங்க.. ப்ளீஸ், இனிமே தான் படமே ஆரம்பிக்கவிருக்கிறது)

1961
அமெரிக்கா வெள்ளை மாளிகை.
(ஒரு தடவ கண்ணை மூடி, திறந்திங்கனா வெள்ளை மாளிகை முன்னாடி நிற்பிங்க. தேவயாணி மாதிரி விசா வாங்க தேவையில்லை.)

கென்னடி(அதிபர்): நிலவிற்கு முதன்முதலில் ஒரு நாடு மனிதனை அனுப்பும் என்றால் அது அமெரிக்காவாகத் தான் இருக்கும்.

ஏதோ சொல்லியாச்சி... ஏதாவது செய்யணுமே...
ஒட்டுமொத்த அமெரிக்க மானமும் அவர் கூறிய இந்த வார்த்தையில் அடகு வைக்கபட்டுவிட்டது.. யாராவது (விண்வெளி) கப்பல் ஏறி சென்றால் தான் அந்த மானம் திரும்ப வரும்.

மானத்தை பின் தள்ளி மனதில் பயம் முண்னணி வகித்தது.
‘தென்னை மரம் அளவிற்கு புதைமணல் இருக்குமாமே
‘பயங்கர புதை குழிகள் இருக்குமாமே
‘இறங்க இடமில்லாமல் வெறும் கூரமையான பாறைகள்
என ஏகப்பட்ட வதந்திகள் அங்கும் வாக்கிங்க் போயிக் கொண்டிருந்தன..

ஆனால் மானத்தை காப்பாற்றியே ஆகணும்... அண்ணன் அமெரிக்காவுக்கு.

1966
ரஷ்யா
லூனா-9 என்ற ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக நிலாவிற்கு அனுப்பியது.
ஆளில்லா விண்கலம் அழகாக நிலவை படம் பிடித்து ரேடியோ சிக்னல்களாக பூமிக்கு அனுப்பியது.
வெட்கமில்லா அமெரிக்கா அழகாக அதை திருடியது இங்கிலாந்து உதவியுடன்.
ஒரு வழியாக பயத்தை பின்னுக்கு தள்ளி மானம் வென்றது.
திருடிய அந்த படத்தின் உதவியால் அந்த வதந்திகள் அனைத்தும் பொய் என தெளிந்தது அமெரிக்கா. துணிச்சலாக களத்தில் இறங்கியது.

1967 அக்டோபர்,11
மீண்டும் அமெரிக்கா
அப்பலோ-1 என்ற விண்கலம் நிலவை நோக்கி செல்ல தயாராக இருந்தது. ஒரு சிறிய மின்சார கோளாறு. கிளம்பும் சற்று நேரத்திற்கு முன்பு வெடித்து சிதறியது.
விர்ஜில் கிம்சம், எட்வர்ட் வோய்ட், ரோஜர் ஸாஃப் என்ற மூன்று அப்பாவி வீரர்கள் இறந்தார்கள். ஆம், அவர்கள் நிலவில் முதன் முதலில் காலடி வைப்பதாக இருந்தவர்கள். ஆனால் அவர்கள் பயணம் தொடங்காமலே முடிந்தது.

1969 ஜூலை16
அதே அமெரிக்கா
அப்பலோ-11, நீல் ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் விண்வெளிகப்பலில் கிளம்பினர். அதில் ஈகிள் என்ற விண்வெளி வாகனமும் இருந்தது. நான்கு நாள் நீண்ட பயணத்திற்கு பிறகு niniநிலவு வந்தது.(ஆமா, மூணு நாள் நைட்டும் வந்துருக்கும்ல) காலின்ஸ் டிரைவர் போல. ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின் இருவரையும் ஈகிள் வாகனத்தின் மூலம் இறக்கிவிட்டு விண்வெளிகப்பலில் நிலாவை(அந்த நிலாவைத்தாங்க) சுற்ற கிளம்புவிட்டார். ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின் இருவரும் ஈகிள் மூலம் இறங்கினர். சுமார் 2 மணிநேரம் 31 நிமிடம் நிலவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். நிலவில் ஆம்ஸ்ட்ராங்க்  தன்னை ஒரு புகைபடம் கூட எடுக்கவில்லை. நாம் பார்ப்பது எல்லாம் ஆல்ட்ரின்  புகைபடம் தான். பின் காலின்ஸ்காக காத்திருந்தனர். காலின்ஸ் வந்ததும் அந்த கப்பலில் ஏறி அமெரிக்காவின் மானத்தை காப்பாற்றினர்.

சுபம்....


புதன், ஜனவரி 15, 2014

யார் என்று தெரிகிறதா???




  • மகாராஷ்டிரா மாநிலம், அஹமதுநகரில் ஒரு சிறிய கிராமத்தில் கூலித் தொழிலாளின் மகனாய் பிறந்தார்.

  • குடும்பத்தின் வறுமை அவரை 7ம் வகுப்பு வரை படிக்க மட்டுமே அனுமதித்தது. அதற்க்குபின் அவர் அத்தை வேலைக்காக மும்பைக்கு அவரை அழைத்து சென்றுவிட்டார்.

  • அதன்பிறகு இந்திய இராணுவத்தில் ஓட்டுநராக சேர்ந்தார்.1965ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் ‘கெம்கரன் எல்லையில் பணியில் அமர்த்தப்பட்டார். போரின் போது இவர் நண்பர்கள் அனைவரும் இறந்தனர். இவர் மட்டும் காயங்களுடன் தப்பிப் பிழைத்தார்.
  • 1978ல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். சிக்கிம், ஜம்மூ, அஸ்ஸா என பல மாநில எல்லைகளில் பணிபுரிந்திருந்தார்.
  • ஓய்வுக்கு பின் ‘பிரசார் விரோடி ஜன் அண்டோலன் என்றோ சமூக சேவை அமைப்பை தொடங்கினார். இவரின் சமூக சேவையை பாராட்டி ‘பத்மஸ்ரீ ‘பத்ம பூசன் விருதுகளை வழக்கி அரசு கௌரவித்தது.
  • தான் பிறந்த கிராமத்திற்கு பல நல்ல திட்டங்களை பெற்றுத்தந்துள்ளார். ‘ரிலிகன் சித்தி என்பது தான் இவர் பிறந்த அந்த கிராமம்.
 

  • முழுக்க முழுக்க மாற்று எரிசக்தியையே பயன்படுத்துகின்றனர் இக்கிராம மக்கள். ‘சூரிய, காற்று, இயற்கை எரிவாயு என எல்லாவிதமான ஆற்றலையும் பயன்படுத்துகின்றனர்.
  • மரம் நடுதல், ஏரி, குளம், குட்டைகளை தூர்வாருதல் இங்குள்ள அனைவரின் பகுதிநேர தொழில்.
  • ‘உலக வங்கி சுற்றுச் சூழல் பேணுதலில் இக்கிராமத்தை மாதிரி கிராமமாக அறிவித்துள்ளது.

  • 1995ல் மாகராஷ்டிரா மாநில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. தனது தீவிர போராட்டத்தால் அவர்களை பதிவியில் இருந்து விலகச் செய்தார்.
  • தன் கிராமத்தில் உள்ள சிறு கோவிலில் தான் தன்னுடைய ஓய்வூதியத்தில் வசித்து வருகிறார் 1940, ஜனவரி15ல் பிறந்த இந்த பிரமச்சாரி.....
  • நமக்கெல்லாம் 2011ல் ‘ஜன் லோக்பால்காக உண்ணாவிரதம் இருந்தபோது தான் இவரை தெரியும். ஆனால் 1995 லிருந்தே ஊழலுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறார் இந்த இரண்டாம் காந்தி.
  • முதல்தடவை(2011ல்) ஏதோ உணர்ச்சி பெருக்கில் மிகப்பெரும் ஆதரவை அளித்த இந்திய இளைய இரத்தமும், முகநூலும் & ஊடகங்களும், 2013ன் இறுதியில் இவர் நடத்திய உண்ணாவிரதத்தை சற்றும் பார்க்கவில்லை.
கிசன் பபாட் பாபுரோவ் ஹசாரே.....



திங்கள், ஜனவரி 13, 2014

தொட்டில் பழக்கம்




‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள்...
ஆனால் இன்றோ தொட்டில் (கட்டும்) பழக்கமே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

தொட்டில்-
குழந்தைக்கு கிடைத்த
இரண்டாம் கருவறை’.


மாறிவரும் நாகரிகமாக்கல் பல குழந்தைகளின் இரண்டாம் கருவறையை கலைத்துவிட்டது. தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டாலும், தொட்டிலில் தொடரும் தாய் சேய் உறவு. பொதுவாக தொட்டிலை தாயின் தன் சேலையில் தான் கட்டுவாள். அதனால் இந்த புதிய உலகத்திலும் குழந்தை தன் தாயின் பரிசத்தையும், வெப்பத்தையும் உணர முடியும். தொட்டில் பொதுவாக 6 பக்கங்களில் அலைவுறும் தன்மை கொண்டது. அவ்வாறு தொட்டிலை ஆட்டும் போது குழந்தைக்கு ஆகாயத்தில் பறக்கும் உணர்வை கொடுக்கும். இது குழந்தையின் பய உணர்வை இது குறைக்கிறது. தொட்டிலில் போடப்படும் குழந்தை சில நிமிடங்களில் உறங்கும் இரகசியம் இதுவரை யாரும் அறியார்.  அதிலும் மரத்தடியில் கட்டப்படும் தொட்டில் சொர்க்கத்திற்கும் ஒரு அடி மேலே. எந்தவொரு கவலையும் இல்லாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கலாம் தாய். பொதுவாக தொட்டில் குழந்தையின் முகத்தை மூடி மூச்சி விட சிரமப்பட கூடாது என்பதற்காக நடுவில் ‘தொட்டில் கட்டை என்ற ஒன்றும் இருக்கும். இது பொதுவாக தாய்மாமனின் சீராக இருக்கும். அந்த தொட்டில் கட்டையில் சில விளையாட்டு பொம்மைகள் தொங்கவிட பட்டிருக்கும். இன்று ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைக்கப்பெருகின்றது அந்த ‘தொட்டில் கட்டை. அதுவும் மரத்தினால் செய்யப்பட்ட கட்டை கிடைப்பது அரிதிலும் அரிது.

சமீபகாலமாக தொட்டில்களை பார்க்க முடிந்தது இரயில் பயணங்களில் தான்.
இரண்டு பெர்த்களின் நடுவில் கட்டப்படும் தொட்டிலில் உறங்க்கும் குழந்தைக்கு, அந்த இரயிலே தாலாட்டு பாடி ஆட்டிவிடும்.
அமெரிக்காரன் இதை கண்டுபிடித்தான், ஜப்பான்காரன் கடலில் இரயில் விட்டான் என பொறாமைபடும் நாம் ஏன் குழந்தைக்கு பாதுகாப்பான, சுகாதாரமான, இயற்க்கையான ஒரு படு(இரு)க்கையை கண்டுபிடித்தோம் என பெருமைபட தவறிவிடுகிறோம்?
தொட்டில் மட்டுமல்ல. தொட்டிலுடன் கூடிய தாலாட்டும் தலைமறைவாகி வருகிறது.
தாலாட்டு-1
ஆரரோ அரிரோ அராரோ அரிரரோ
யார் அடிச்சா நீ அழுர,
அத்தை அடிச்சாலோ, அரளி பூச்செண்டால,
சித்தி அடிச்சாலோ செம்பந்தி பூச்செண்டால,
மாமா அடிச்சாரோ மல்லிகை பூச்செண்டால,
தாத்தா அடிச்சாரோ தாமரை பூச்செண்டால,
கண்ணம் சிவக்குதடா... கண்ணீரு பெருக்குதடா...
யாரடிச்சி நீ அழுறா... கண்ணே நீ கண்ணுறங்கு....”
தாலாட்டு-2
ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!
தாலாட்டு-3
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மானே மரகதமே - என் கண்ணே
மாசிலாக் கண்மணியே!
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அப்பா வருவாரே என் கண்ணே
ஆசமுத்தம் தருவாரே!
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மாமன் வருவாரே என் கண்ணே
மாங்கனிகள் தருவாரே!
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அத்த வந்தாக்கா என் கண்ணே
அல்லிப்பூ தருவாளே!

இன்னும் பல சொந்தங்களை இணைத்து தாலாட்டு பாடுவர். என் காதை அடைந்தவை இவை மட்டுமே. இவ்வாறு சொந்தபந்தங்களை தாலாட்டியே தன் குழந்தைக்கு அறிமுகபடுத்தி வைப்பாள் அன்னை.
இன்றோ ஸ்கைப்பிலும், வைப்பரிலும் தான் உறவுகளை அறிமுகம் செய்துவைக்க வேண்டியுள்ளது.
தமிழர்திருநாளான இந்த தைத்திருநாளில் நாம் தமிழர்களின் சிறப்பை கொஞ்சம் திரும்பி பார்போம். முன்னேறிச் செல்லும் இந்த தொழில்நுட்பத்துடன் நாமும் வீரநடை போடுவோம். அதே நேரம் நம் தமிழ் மரபில் உள்ள நல்ல விஷயங்களையும் தூசி தட்டி கையில் எடுத்துச் செல்வோம்...

அனைவருக்கும் இனிய தமிழர் தின வாழ்த்துக்கள்........







விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...