‘தொட்டில் பழக்கம்
சுடுகாடு மட்டும்’ என்பார்கள்...
ஆனால் இன்றோ தொட்டில்
(கட்டும்) பழக்கமே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
‘தொட்டில்-
குழந்தைக்கு கிடைத்த
இரண்டாம் கருவறை’.
மாறிவரும்
நாகரிகமாக்கல் பல குழந்தைகளின் இரண்டாம் கருவறையை கலைத்துவிட்டது. தொப்புள் கொடி
துண்டிக்கப்பட்டாலும், தொட்டிலில் தொடரும் தாய் சேய் உறவு. பொதுவாக தொட்டிலை
தாயின் தன் சேலையில் தான் கட்டுவாள். அதனால் இந்த புதிய உலகத்திலும் குழந்தை தன்
தாயின் பரிசத்தையும், வெப்பத்தையும் உணர முடியும். தொட்டில் பொதுவாக 6 பக்கங்களில்
அலைவுறும் தன்மை கொண்டது. அவ்வாறு தொட்டிலை ஆட்டும் போது குழந்தைக்கு ஆகாயத்தில்
பறக்கும் உணர்வை கொடுக்கும். இது குழந்தையின் பய உணர்வை இது குறைக்கிறது. தொட்டிலில்
போடப்படும் குழந்தை சில நிமிடங்களில் உறங்கும் இரகசியம் இதுவரை யாரும் அறியார். அதிலும் மரத்தடியில் கட்டப்படும் தொட்டில் சொர்க்கத்திற்கும்
ஒரு அடி மேலே. எந்தவொரு கவலையும் இல்லாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கலாம்
தாய். பொதுவாக தொட்டில் குழந்தையின் முகத்தை மூடி மூச்சி விட சிரமப்பட கூடாது
என்பதற்காக நடுவில் ‘தொட்டில் கட்டை’ என்ற ஒன்றும் இருக்கும். இது பொதுவாக தாய்மாமனின் சீராக இருக்கும். அந்த
தொட்டில் கட்டையில் சில விளையாட்டு பொம்மைகள் தொங்கவிட பட்டிருக்கும். இன்று ஒரு
சில கடைகளில் மட்டுமே கிடைக்கப்பெருகின்றது அந்த ‘தொட்டில் கட்டை’. அதுவும் மரத்தினால் செய்யப்பட்ட கட்டை
கிடைப்பது அரிதிலும் அரிது.
சமீபகாலமாக
தொட்டில்களை பார்க்க முடிந்தது இரயில் பயணங்களில் தான்.
இரண்டு பெர்த்களின்
நடுவில் கட்டப்படும் தொட்டிலில் உறங்க்கும் குழந்தைக்கு, அந்த இரயிலே தாலாட்டு
பாடி ஆட்டிவிடும்.
அமெரிக்காரன் இதை
கண்டுபிடித்தான், ஜப்பான்காரன் கடலில் இரயில் விட்டான் என பொறாமைபடும் நாம் ஏன் குழந்தைக்கு
பாதுகாப்பான, சுகாதாரமான, இயற்க்கையான ஒரு படு(இரு)க்கையை கண்டுபிடித்தோம் என
பெருமைபட தவறிவிடுகிறோம்?
தொட்டில் மட்டுமல்ல.
தொட்டிலுடன் கூடிய தாலாட்டும் தலைமறைவாகி வருகிறது.
தாலாட்டு-1
“ஆரரோ அரிரோ அராரோ அரிரரோ
யார் அடிச்சா நீ அழுர,
அத்தை அடிச்சாலோ, அரளி பூச்செண்டால,
சித்தி அடிச்சாலோ செம்பந்தி பூச்செண்டால,
யார் அடிச்சா நீ அழுர,
அத்தை அடிச்சாலோ, அரளி பூச்செண்டால,
சித்தி அடிச்சாலோ செம்பந்தி பூச்செண்டால,
மாமா அடிச்சாரோ மல்லிகை பூச்செண்டால,
தாத்தா அடிச்சாரோ தாமரை பூச்செண்டால,
கண்ணம் சிவக்குதடா... கண்ணீரு பெருக்குதடா...
யாரடிச்சி நீ அழுறா... கண்ணே நீ கண்ணுறங்கு....”
கண்ணம் சிவக்குதடா... கண்ணீரு பெருக்குதடா...
யாரடிச்சி நீ அழுறா... கண்ணே நீ கண்ணுறங்கு....”
தாலாட்டு-2
“ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!”
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!”
தாலாட்டு-3
ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மானே மரகதமே - என் கண்ணே
மாசிலாக் கண்மணியே!
ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அப்பா வருவாரே – என் கண்ணே
ஆசமுத்தம் தருவாரே!
ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மாமன் வருவாரே – என் கண்ணே
மாங்கனிகள் தருவாரே!
ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அத்த வந்தாக்கா – என் கண்ணே
அல்லிப்பூ தருவாளே!
ஆராரிரோ ஆரிரரோ
மானே மரகதமே - என் கண்ணே
மாசிலாக் கண்மணியே!
ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அப்பா வருவாரே – என் கண்ணே
ஆசமுத்தம் தருவாரே!
ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மாமன் வருவாரே – என் கண்ணே
மாங்கனிகள் தருவாரே!
ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அத்த வந்தாக்கா – என் கண்ணே
அல்லிப்பூ தருவாளே!
இன்னும் பல சொந்தங்களை இணைத்து தாலாட்டு பாடுவர். என் காதை அடைந்தவை இவை மட்டுமே. இவ்வாறு சொந்தபந்தங்களை தாலாட்டியே தன் குழந்தைக்கு அறிமுகபடுத்தி வைப்பாள் அன்னை.
இன்றோ ஸ்கைப்பிலும், வைப்பரிலும்
தான் உறவுகளை அறிமுகம் செய்துவைக்க வேண்டியுள்ளது.
தமிழர்திருநாளான இந்த தைத்திருநாளில் நாம் தமிழர்களின்
சிறப்பை கொஞ்சம் திரும்பி பார்போம். முன்னேறிச் செல்லும் இந்த தொழில்நுட்பத்துடன்
நாமும் வீரநடை போடுவோம். அதே நேரம் நம் தமிழ் மரபில் உள்ள நல்ல விஷயங்களையும் தூசி
தட்டி கையில் எடுத்துச் செல்வோம்...
அனைவருக்கும் இனிய தமிழர் தின
வாழ்த்துக்கள்........