ஞாயிறு, ஜனவரி 19, 2014

சந்திரனை தொட்டது யார்



சாய்ந்து சாய்ந்து தான்
பார்த்துக் கொண்டிருக்கிறது
அந்த நிலவை...
#இந்த பூமி...
(23.5டிகிரியில்)

பூமியின் நிழலில்
ஒளிந்து கொண்டே
வெட்கத்துடன் எட்டிப்பார்க்கிறது
பூமியை....
#அரைநிலா...

கவிதை என்ற பெயரில் கிறுக்கி கொண்டிருக்கும் நான் முதல்
உண்மையாகவே கவிதை எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் முதல்
நிலாவை தொடாதவர்கள் யாவரும் இலர்.


ஆனால் உண்மையாகவே நிலாவை முதன்முதலில் தொட்டவர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்.
(கடுப்பாகாதிங்க.. ப்ளீஸ், இனிமே தான் படமே ஆரம்பிக்கவிருக்கிறது)

1961
அமெரிக்கா வெள்ளை மாளிகை.
(ஒரு தடவ கண்ணை மூடி, திறந்திங்கனா வெள்ளை மாளிகை முன்னாடி நிற்பிங்க. தேவயாணி மாதிரி விசா வாங்க தேவையில்லை.)

கென்னடி(அதிபர்): நிலவிற்கு முதன்முதலில் ஒரு நாடு மனிதனை அனுப்பும் என்றால் அது அமெரிக்காவாகத் தான் இருக்கும்.

ஏதோ சொல்லியாச்சி... ஏதாவது செய்யணுமே...
ஒட்டுமொத்த அமெரிக்க மானமும் அவர் கூறிய இந்த வார்த்தையில் அடகு வைக்கபட்டுவிட்டது.. யாராவது (விண்வெளி) கப்பல் ஏறி சென்றால் தான் அந்த மானம் திரும்ப வரும்.

மானத்தை பின் தள்ளி மனதில் பயம் முண்னணி வகித்தது.
‘தென்னை மரம் அளவிற்கு புதைமணல் இருக்குமாமே
‘பயங்கர புதை குழிகள் இருக்குமாமே
‘இறங்க இடமில்லாமல் வெறும் கூரமையான பாறைகள்
என ஏகப்பட்ட வதந்திகள் அங்கும் வாக்கிங்க் போயிக் கொண்டிருந்தன..

ஆனால் மானத்தை காப்பாற்றியே ஆகணும்... அண்ணன் அமெரிக்காவுக்கு.

1966
ரஷ்யா
லூனா-9 என்ற ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக நிலாவிற்கு அனுப்பியது.
ஆளில்லா விண்கலம் அழகாக நிலவை படம் பிடித்து ரேடியோ சிக்னல்களாக பூமிக்கு அனுப்பியது.
வெட்கமில்லா அமெரிக்கா அழகாக அதை திருடியது இங்கிலாந்து உதவியுடன்.
ஒரு வழியாக பயத்தை பின்னுக்கு தள்ளி மானம் வென்றது.
திருடிய அந்த படத்தின் உதவியால் அந்த வதந்திகள் அனைத்தும் பொய் என தெளிந்தது அமெரிக்கா. துணிச்சலாக களத்தில் இறங்கியது.

1967 அக்டோபர்,11
மீண்டும் அமெரிக்கா
அப்பலோ-1 என்ற விண்கலம் நிலவை நோக்கி செல்ல தயாராக இருந்தது. ஒரு சிறிய மின்சார கோளாறு. கிளம்பும் சற்று நேரத்திற்கு முன்பு வெடித்து சிதறியது.
விர்ஜில் கிம்சம், எட்வர்ட் வோய்ட், ரோஜர் ஸாஃப் என்ற மூன்று அப்பாவி வீரர்கள் இறந்தார்கள். ஆம், அவர்கள் நிலவில் முதன் முதலில் காலடி வைப்பதாக இருந்தவர்கள். ஆனால் அவர்கள் பயணம் தொடங்காமலே முடிந்தது.

1969 ஜூலை16
அதே அமெரிக்கா
அப்பலோ-11, நீல் ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் விண்வெளிகப்பலில் கிளம்பினர். அதில் ஈகிள் என்ற விண்வெளி வாகனமும் இருந்தது. நான்கு நாள் நீண்ட பயணத்திற்கு பிறகு niniநிலவு வந்தது.(ஆமா, மூணு நாள் நைட்டும் வந்துருக்கும்ல) காலின்ஸ் டிரைவர் போல. ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின் இருவரையும் ஈகிள் வாகனத்தின் மூலம் இறக்கிவிட்டு விண்வெளிகப்பலில் நிலாவை(அந்த நிலாவைத்தாங்க) சுற்ற கிளம்புவிட்டார். ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின் இருவரும் ஈகிள் மூலம் இறங்கினர். சுமார் 2 மணிநேரம் 31 நிமிடம் நிலவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். நிலவில் ஆம்ஸ்ட்ராங்க்  தன்னை ஒரு புகைபடம் கூட எடுக்கவில்லை. நாம் பார்ப்பது எல்லாம் ஆல்ட்ரின்  புகைபடம் தான். பின் காலின்ஸ்காக காத்திருந்தனர். காலின்ஸ் வந்ததும் அந்த கப்பலில் ஏறி அமெரிக்காவின் மானத்தை காப்பாற்றினர்.

சுபம்....


விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...