கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 29, 2020

ஐங்குறு ஹைக்கூ...!


என் செல்பேசியின் சுவர்சித்திரமானாய் நீ...
அன்று முதல்
என் செல்பேசியும்
என் சொல்பேச்சு
கேட்க மறுக்கிறது...!


******


அவசரநிலை பிரகடனம்,
அருகில் நீ வந்தாலே...
என் மனதிற்குள்...!


******


என் இதயத்தின் மெளனம் மட்டுமல்ல
உன் இதழின் மெளனம் கூட மரணம் தான் எனக்கு...!


******


வானவில் வண்ணம் தானே?
இங்கு மட்டும் என்ன
இரு வானவில்கள் கரு நிறத்தில்
கண்ணை பறிக்கின்றன...!

******

என் இமைகளுக்குள்
விழிநீரால் வரைந்த சித்திரமா நீ?
இமை முடியும் தெரிகிறாயே...!


சனி, ஏப்ரல் 02, 2016

அந்த சின்ன தேவதை!



ஆயிரம் சிற்பங்கள்
சுமந்தும் கிடைக்காத அழகை
அசையும் சித்திரமாய்
நீ சுற்றி திரிகையில் பெற்றது
அந்த கோவில்!

கல்லில் உறங்கி கிடக்கும்
அந்த சாமியை எழுப்ப
இத்தனை மணிகள் வேணாமே.
உன் கால் கொலுசின் ஓசை போதுமே!

உன் பிஞ்சு விரல்கள் கோர்த்து
கும்பிடும் அழகில்
நாத்திகனான எனக்கும்
தெய்வ தரிசனம்!

உன் நெற்றியில் குங்குமம்
இரு புருவங்களுக்கிடையில்
உதித்த செங்கதிராய்
இன்னும் கொஞ்சம் பிரகாசம்!

கோவில் யானையை
பார்த்ததும் பயப்படும் உன் விழிகள்.
உன் உச்சிதனை முகர முடியா
வருத்ததில் அந்த யானை!

குளத்தின் படிக்கட்டில்
உன் ஈரபாதம் பதித்த தடயத்தில்
என் காலடி நனைத்து கொண்டேன்!

கோபுரங்களை அண்ணாந்து பார்த்துவிட்டு
கோவிலை மீண்டும் கட்டிடமாக்கி
புறப்பட்டுச் சென்றாள்
அந்த சின்ன தேவதை!

காதல்&தேர்தல்


பதின்ம வயதில் காதல்
உரிமையா? கடமையா?
தெரியவில்லை எனக்கு.

இருந்தும் மனுத்தாக்கல்
உன் பெயர் பட்டியலில்
என் பெயர் பின் இணைக்க.
எப்போது ஆரம்பிக்க போகிறாய்
மன'தாக்கல்.

ஓயாமல் பிரச்சாரம்
செய்யும் உன் நினைவுகள்.

அழகாய் இருக்கும்
அனைத்தும் உன் சின்னங்களாக
என் மனச்சுவரில் ஓவியமாக
பதிந்துகொண்டே போகிறது.

என் விரலோடு
உன் விரல் சேர்த்து
உன் காதல் வாக்கை
செலுத்திவிடு.

காதல் ராணியாய்
என் இதய கோட்டையில்
அமர்ந்துவிடு.

திங்கள், மார்ச் 02, 2015

குறுக்கு வழிகள்...!

அலை என்னும் சிறகால்
பறக்க துடிக்கும் கடல்...

ஆதவனையும் அடக்கிவிட்ட இறுமாப்பில்
நிமிர்ந்து நிற்க்கும் மலை...

பசுமையான நினைவுகளை என்றும்
அசைபோட்டு கொண்டிருக்கும் காடு...

சொர்க்கத்திற்கு செல்லும் குறுக்கு வழிகள்...!

புதன், ஜனவரி 21, 2015

சற்றுச்சூழல்

ஆம்...
சற்று தான் சூழ்ந்துள்ளது
சுற்றுச்சூழல்...

நம்மைச் சுற்றிச் சூழ்ந்த சுற்றுச்சூழல்
இன்று தொலைவில் தனியாய் சுருண்டு கிடக்கின்றதே....

அறிவை கொஞ்சம் வளர்த்ததில்
பசுமையும் மங்கலாய் தெரிகின்றதே...

கடவுளின் இரு கை இயற்றிய இயற்க்கையை
மனிதனின் செயற்க்கை சிதைக்கின்றதே....

சிறு அணுவிலிருந்து ஆயிரம் ஆற்றல்
எடுக்கத் தெரிந்த மனிதா...
சிறு விதையிலிருந்து ஆயிரம் காய் கனி மலர்களை
எடுக்கத் தெரியுமோ???

நம் விஞ்ஞான விரல் தீண்டியதில்
பனியும் நாணத்தில் உருகுகி
கடலுடன் கள்ளத் தொடர்பு கொள்கிறது...
பாவம் பனிக்கரடி...
பனியின்றி தனியாய் தவிக்கிறது...

10000 மைல்களுக்கு அப்பால் உருகும் பனிக்கட்டி
என் வீட்டு வாசலை நனைக்காது
என்ற மெத்தனம் சில ஆண்டுகள் வேண்டுமானால் பலிக்கலாம்.
...

வேலி பயிரை மேய்ந்தால் கூட பரவாயில்லை...
இங்கு பயிரே வேலியை மேய்கின்றதே...
ஓசோன்!!!

பருவம் மாறிய பருவநிலை
உருவம் மாறிய நீர்நிலை
தண்ணீருக்கும் விலை பெற்று தந்தது....

பாலிஎத்திலீன் பையை கண்டுபிடித்த
பாவிப்பையனை தேடுகின்றேன்...
மஞ்சப்பை என்றாலே நாகரீகமில்லாதவன் என
படம் வர அவனே முன்னோடி....

அனாதையாக குழந்தை வாழலாம்
ஆனால்
தனியாக மனிதால் வாழ முடியாது.
..

தமிழும், சுற்றுச்சூழலும் வெறும் தேர்ச்சி பெற தான்...
கணிதமும், அறிவியலும் தான்
மதிப்பை(¡) தரும் மதிப்பெண் பெற
என்றிருக்கும் கல்வி இருக்கும் வரை
பெயரவில் தொடரும்
சுற்றுச்சூழல் தினம் :-( :-( :-(

புதன், ஜனவரி 01, 2014

ஸாரி பிரம்மா....

இந்த பிரம்மனுக்கு தலைக்கணம் அதிகம்
நான்கு தலைகள் இருப்பதனால் அல்ல
இவ்வளவு அழகாய் உன்னை படைத்ததினால்...!

*********

பிரம்மனின் ரெஸ்யூமேவை பார்த்தேன்

சாதனைப் பட்டியலில் உன்பெயர்...!
உன் பெயர் மட்டுந்தான்...!


********

இன்னும் அழுது கொண்டிருக்கிறான் பிரம்மன்...!

அழகாய் ஒருத்தியை படைக்க நினைத்து
எத்தனையோ தேவதைகளை படைத்தான்...!

யாரும் இல்லை
அவன் நினைத்த அழகில்...!

விண்ணிலேயே வைத்திருந்தான்
எல்லா தேவதைகளையும்

ஒருத்தியை மட்டும்
தெரியாமல் தொலைத்துவிட்டான்

நினைத்ததை படைத்தும்
தொலைத்தாதால்

இன்னும் அழுதுகொண்டிருக்கிறான் பிரம்மன்...!
 

சனி, ஜூலை 27, 2013

மரம் மாதிரி...



உயிர் மட்டும் தான் தந்தாள் தாய்
உயிர்மூச்சு தந்து கொண்டிருக்கிறாய் நீ


காகிதம் தந்தாய்
எழுதினோம் "மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்"
"காடுகளை காப்போம். நாட்டை காப்போம்" என்றெல்லாம்
மதிப்பெண்கள் பெற்றோம்
மதி மட்டும் மாறலையே

நிழல் தந்தாய்
நிழலை மட்டும் பெற்றுக் கொண்டோம் நாங்கள்
நிஜமாகிய உன்னை மறந்து விட்டு

நாங்கள் வாழ நீ வேண்டும்
நீ வாழ நாங்கள் மாற வேண்டும்
உன் நண்பனாக...!


சின்ன வயசில இருந்தே மரம் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜன தருதுனு மட்டும் சொல்லியே ஏமாத்திதாங்க. ஆமாங்க மரம் நாம் சுவாசிக்க இந்த ஒரு வேலைய மட்டும் செய்யல. மரம் ஒரு வடிகட்டியாகவும் செயல்படுகிறது. காற்றிலுள்ள சிறிய துகள்கள், ஓசோன், NO2, SO2,அம்மோனியா என அனைத்தையும் எடுத்துக்கொள்கிறது.
தரைக்கு மேல காற்ற வடிகட்டுதுனு பார்த்த தரைக்கு கீழேயும் வேல செய்யுது இந்த மரம். மரத்தின் அசுத்த நீரையும் வடிகட்டுகிறது. நீர் மாசுபாட்டையும் குறைக்கிறது.
இப்படி நின்னுகிட்டே காற்று, நீர் என இரண்டையும் சுத்தமாக்கிறது இந்த மரம். (ஆனா நாம கொஞ்ச நேரம் நின்டா, ஏன்டா மரம் மாதிரி நிக்கிரனு கேக்குராங்க
·         வெறும் 4 மரங்கள் சுமார் 50கிலோ மாசுத்துகள்களை அழிக்கிறதாம் ஒரு வருடத்தில்
·         வெறும் 400 மரங்கள் ஒரு வருடத்தில் 530லி மழைநீரை சேமிக்கிறது.
·         வெறும் 4000 மரங்கள் போதும் ஒரு வருடத்தில் வெள்ளத்தினால் ஏற்ப்படும் சேதங்களில் 70கோடியை மிச்சப்ப்டுத்த.
·         கடைகளுக்கு அருகில் மரங்கள் இருந்தால் பொருட்கள் வாங்குபவர்கள் 11% அதிகமாக செலவு செய்வார்களாம்(அவர்கள் மனம் மகிழ்ச்சியாய் இருப்பதால்)
·         கரண்ட் பில்லில் வருடத்திற்க்கு 3000ரூபாய் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது.
·         உங்கள் வீட்டின் மதிப்பு ஒரு 15% அதிகமாகும் மரங்கள் சூல இருந்தால்
·          மரம் கேட்டால் நீங்கள் வருடத்திற்க்கு 31000ரூபாய் கட்ட வேண்டியிருக்கும. அது தரும் ஆக்ஸிஜனின் மதிப்பு.
·         சுத்தம் செய்யும் வேலைக்கு தனியாக 62000ரூபாய் தர வேண்டியிருக்கும்


வியாழன், ஜூலை 25, 2013

ஆங்கிரி பேர்டாம்...

 
தரையில் விளையாடிய காலம் போய்
திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம்
பம்பரம்
கோலிக்குண்டு
கிட்டிப்பிள்ளை
தட்டாங்கல்
பல்லாங்குழி
தாயம்
என அத்தனையும் இரையானது
இந்த சின்னஞ்சிறு செல்லிடப் பேசின் கோரப்பசிக்கு
கையளவு திரையில் காரே ஓட்டலாம்
கைவிரலை தவிர வேறெதும் ஓடலையே
ஆங்கிரி பேர்டாம்...
மோதினால் கட்டிடமே இடியுமாம்
எப்படியெல்லாம் விளையாடிராங்க!!!
சில நிமிட பேருந்து பயணங்களில்
சில நிமிட காத்திருப்புகளில்
வேலையேதும் இல்லாத வேளைகளில்
எல்லாம் விளையாடுகிறோம்
-விளையாடுகிறோம் என்னும் பேரில்
போன தலைமுறை
விளையாடியது....மறந்தது
வரும் தலைமுறை
அறியாது....வருந்தாது
இந்த தலைமுறை
விளையாடியது....விளையாட முடியாமல் போனது
அதான் இந்த ஏக்கமும் வருத்தமும்...!

வியாழன், ஜூலை 18, 2013

என் நண்பனின் கவிதை

நமது நான்காண்டின் கையெழுத்து புத்தகம்
இந்த கவிதை...!
இதன் வார்த்தை என்னுடையது
வாழ்க்கை நம்முடையது
முதல்நாள் பெயர்களை பகிர்ந்து கொண்டதாக
ஞாபகம்...அன்றிலிருந்து
உணவு, உடைமை, உணர்வு என்ற பரிமாற்றங்களால்
நமது உறவு நட்பு என்னும் உறுமாற்றமானது

காந்தங்களில் துருவ பாகுபாடு உண்டு
ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள
கல்லாரி நட்பில் எந்த பாகுபாடும் இல்லை
இதயங்கள் இணைந்து கொள்ள
கேலிவதை சட்டங்கள் எங்களுக்கு தேவையில்லை
கேலி செய்வதுதான் எங்கள் நட்பின் விதை

விளையாட விடுமுறை விரும்பும் மாணவர்கள் மத்தியில்
விளையாட விடுமுறை தவிர்த்தவர்கள் நாங்கள்...!
இடைவேளைகள்...
பெண் பார்க்கச் செல்லும் ஐதீகம்
அரங்கேறும் நேரங்கள்

கோவில்...
கோவிலில் இருப்பது என்னவோ விநாயகர்தான்
நாங்கள் தரிசிக்க செல்வதோ சில லெட்சுமிகளை...!

வரலாற்று புத்தகங்களில் இடம்பெறும் போர்களையெல்லாம்
முதல் ஆண்டிலேயே முடித்தவர்கள்-நாங்கள்

பேருந்தைக்காட்டிலும் பேருந்து நிறுத்தங்களில் அதிகம்
நின்றவர்கள் நாங்கள்தான்
காதலுக்காக சிலர்...காரணங்களுக்காக சிலர்
நட்பிற்காக எல்லோரும்...!

படிப்பது என்னவோ இயந்திரவியல் துறை...துறைதோறும்
தோழிகள் இல்லா தோழர்கள் எனக்கில்லை

இந்தக்காலத்தில்
சில்லறை சப்தங்களைவிட சிரிப்பு சப்தத்திற்குதான் பஞ்சம்
எங்கள் சிரிப்பொலிக்கு இவ்வுலகே இரவல்கேட்டு கெஞ்சும்

செய்முறை வகுப்புகள்
பேனாவை சண்டையிடவைத்து
நாங்கள் சிரித்த நினைவு தொகுப்புகள்...!

கல்லூரி முழுவதும் எங்கள் காலடி படாத இடமில்லை
எங்களுள் காதலில் அடி படாதவர்களும் இல்லை

வார்த்தையால் சொல்ல இயலாத
நினைவுகள் என்னோடு...
அவையெல்லாம் நான்
இருந்த காலங்கள் உன்னோடு...

தேர்வுகள்...
கவிதைக்கு காகிதங்கள் இலவசம்...

farewell
இதுதான் கடைசி நாள்
கடைசி விளையாட்டு
கடைசி சந்திப்பு என்று சொல்லும்
ஒவ்வொரு முறையும், ஒரு தூக்கு கைதியின்
கடைசி இரவுபோல நிமிடங்களில் கழிகின்றன...ஆறுதல்

மேகங்களில் ஒன்றாய் இருந்தோம்...
இன்று மழைத்துளியாய் பிரிய போகிறோம்
கல்லூரிக்கூட்டில் சிறகு வளர்த்தோம்...
இன்று வானம் நோக்கி பறக்க போகிறோம்...

என்றும் நம் நினைவுகள், மலை போல
காலம், கடக்கும் காற்று போல
காற்று மலையை கடந்து செல்லலாம்
கரைத்துவிடுவதில்லை...!

 Specially for hostellers 

கிராமத்திற்குள்..... குக்கிராமத்திற்குள் ஓர்
நகரம் இந்த கல்லூரி..... அந்த
நகரத்திற்குள் ஓர் சொர்க்கம்
எங்கள் விடுதி....!

அயல்நாட்டு ஆசையுள்ள
இவ்வூர் மக்கள்.... இந்த
கட்டிடங்களை அன்னாந்து பார்த்து
அவா தீர்த்து கொள்கின்றனர்…!

இக்கல்லூரி முதல்வர்
எங்கள் விடுதி தலைவர்......
காற்று பூக்களில் தவழ்வது போல….. இவரது
கன்னங்கள் புன்னகைக்க தவறியதில்லை…!

விடுதிகாப்பாளர்கள்...... இவர்களை
இந்தக் கூட்டத்தில் விட்டுப்பாருங்கள்
அடையாளம் காண உங்களுக்கு அரைநாள் வேண்டும்
தோற்றத்தால் அல்ல... இவர்கள்
தோழர்கள் என்பதால்.....!

இதயங்களை இணைக்கும் உலகப்பொதுமொழி
இந்த விளையாட்டு...,
விடுதி என்றாலே உடன் வந்துவிடும்
மெல்ல வழிகேட்டு....!

விளையாட்டிற்கென்றே ஒருவிழா…. இது
என் நண்பர்கள் கொண்டாடும் திருவிழா…!

இங்கே வந்த முதல்பொழுது என் நாட்காட்டியில்
விடுமுறை நாட்களே விருப்பம்
இப்பொழுது என் நாட்களெல்லாம்
விடுதியிலே தான் இருக்கும்…!

மாணவனுக்கும் கல்லூரிக்கும்
இடைவேளை இந்த இரவு
கிடைத்த இடைவேளையெங்கும் நிரம்பிவழியும்
நண்பன் என்ற உறவு…!

இக்காலத்தில்…..
சில்லறை சப்தங்களை விட
சிரிப்பு சப்தத்திற்குதான் பஞ்சம்
எங்கள் சிரிப்பொலிக்கு
இரவே இரவல் கேட்டு கெஞ்சும் …!

எதற்காக விழித்தோம்… எதற்காக சிரித்தோம் …
என்றே தெரியவில்லை
இவையாவும் துக்கம் தொலைத்த
தூங்கா இரவுகள் …!

விடுதி துறந்த மாணவர்கள்………
இந்த கல்லூரிக் கிரிக்கெட்டில்
கல்லூரிக்கும் வீட்டிற்கும் ரன்கள் எடுத்தே
ரணமாய் போகிறார்கள்….
எங்களுக்கோ கல்லூரியும் வீடும் வேறுவேறு இல்லை
காலம் பற்றிய ஒரு வேதனையும் இல்லை…!

உணவு விடுதி……..
உலகம் காணாத COMPOSITE MATERIAL எல்லாம்
கணநேரத்தில் உருவாக்கிவிடும் ஓர் அதிசய இடம்…!
இந்த காலத்தில் ஒரே குடும்பமாயினும்
உணவுநேரம் என்பது வேறுவேறு…
ஒரே குடும்பமான எங்களுக்கு
உணவு நேரம் வேளை மாறாது ….!

இதே தொலைக்காட்சியை
வீட்டில் பார்க்கும் போது கார்கில் யுத்தமே வெடிக்கும்… எங்கள்
விடுதியில் வெறும் சத்தம் மட்டுமே கேட்கும்…!

சங்கீதத்தோடும் எங்கள் சட்டைகளோடும்
சடுகுடு ஆடும் சலவை இயந்திரம்…. எங்கள்
உடை அழுக்கை அதன்
உடலுக்குள் பூட்டிக் கொள்ளும்…!

புறாவிடுதூது…
இந்த நெரிசலில் இறக்கை விரிக்க இடமேது…!
தபால் விடுதூது….
தபால்தலைகள் பல தலைமறைவாகிவிடுகிறது…!
தோதான ஒரே தூது
மின்னஞ்சல் விடுதூது… இங்கே
தளமெங்கும் இணையதளம்
அது எங்கள் பக்கபலம்….!

ஒரே அறையில் இருந்து கொண்டு
உலகைச் சுற்றி வர வேண்டுமா
கையில் ஒரு புத்தகமும்
கடுகளவு கற்பனையும் இருந்தாலே போதும்
உலக அறிவின் தூதகம்
எங்கள் விடுதி நூலகம்…!

அவசரமென்றால் அர்த்த சாமத்திலும்
அக்கறையாய் வரும் உதவி இது
விண்மீனுக்கடுத்து விடியல் வரை
விழித்திருக்கும் அவசர ஊர்தி அது…!

தனியறையென்ற வசதியுண்டு
அந்த அறைதான் தனிமையில் வாடுகிறது
உடமைகளுக்கு மட்டும் உரித்தானது
உறங்கமட்டும் என்றானது…!

கல்லூரி எமக்கு வானம் தந்திருக்கலாம்
விடுதி எமக்கு சிறகு தந்திருக்கலாம்
பறக்க கற்று கொடுத்தது என்னவோ
என் தோழர்களே……. இங்கே
எங்கள் இதயங்கள் இணைக்கபடவில்லை
தைக்கப்பட்டிருக்கின்றன……..

தேர்ச்சி பெற்ற ஆசிரியரின்
மூர்ச்சியடையச் செய்யும் வகுப்புகள் கூட தோற்று போகும் தேர்வின் முதல் நாள்
எங்கள் கூட்டுப்படிப்பு முன்னால் ……….!

என் நண்பர்களும் ஆன்மீகவாதிகளே …… கீதாசாரத்தை கிருஷ்ணருக்கு கற்றுகொடுத்தவர்களே இவர்கள்தான்
உதாரணம்….
இன்று எது உன்னுடையதோ
அது நாளை மற்றவனுடையது
எதை கொண்டு வந்தோம்
அதை இழப்பதற்கு……!

நட்சத்திரங்கள் இல்லாத வானம்… என்
நண்பர்கள் இல்லாத இந்த வளாகம்
இரண்டுமே ஒன்றுதான்…!

நிலா உடைந்து போனாலும்
பாலைவனத்தில் பூக்கள் பூத்தாலும்
தங்கம் விலை மெலிந்தே போனாலும்
நண்பர்கள் மாறுவதில்லை எங்கள்
நட்பு மறைவதுமில்லை….!


இந்ந கவிதைக்கு முற்றுபுள்ளி வைக்க
என்னைப் போலவே என் பேனாவும் தயங்குகிறது
இந்த கரவொலியோடு என்
கல்லூரி வாழ்க்கையும் கரைந்துவிடப்போகிறதா…..இல்லை
நட்புக்கும் பிரிவிற்கும் சம்பந்தமே இல்லை….!

மழைகொண்ட மேகங்கள் நாங்கள்
மேகங்களில் ஒன்றாய் இருந்தோம்…. இன்று
மழைதுளிகளாய் பிரியப் போகிறோம் …. இருந்தாலும்
எங்கள் ஞாபகங்கள் மலை போல
காலம் கடக்கும் காற்று போல
காற்று மலையை கடந்து செல்லலாம்
கரைத்து விடுவதில்லை...!
தேடலுடன்

#தீபன்#
 

 

சனி, ஜூலை 13, 2013

வைரமுத்துவின் வைர வரிகள்...

இந்தியா உயர்ந்த தேசம். ஆனால் தேசத்தின் உயரத்தில் எல்லா மக்களும் இல்லை.

யார் இல்லையென்றாலும் வாழமுடியும் என்றாலும் நீ இல்லையென்றால் நான் வாழமுடியாது என்று கருதச் செய்வதே காதல்

“மனசு பின்னாடி மனுசன் போனான்னா அவன் மிருகம்; மனுசன் பின்னாடியே மனசு வந்துச்சுன்னா அவன் தெய்வம்“

சத்தியமான பொழப்பு எந்தச் சோதனை வந்தாலும் தாங்கும்; சாமர்த்தியமான பொழப்பு சின்னச் சோதனை வந்தாலும் தாங்காது.

இந்தியாவில் கவலை தருவன கங்கையும் லஞ்சமும். கங்கை குறைந்து கொண்டேபோகிறது; லஞ்சம் கூடிக்கொண்டே போகிறது.

விவசாயம் ஒரு தர்மம். அதில் உழைப்பவன் மட்டுமா பசியாறுகிறான்? உலகமே பசியாறுகிறது. 

உலகப்போரில் கொல்லப்பட்டவர்கள் 60லட்சம்; இன்று பட்டினிச்சாவு 130லட்சம். இப்போது ஆண்டுக்கு 2 உலகப்போர்கள்.

அனுபவிக்கிறது மட்டும்தான் காசு. அதுக்கு மேல பதுக்கி வைக்கிறதெல்லாம் வெறும் நம்பர்னு தெரியாமப் போகுது பலபேருக்கு.

*****

இக்கவிதைகள் யாவும் கவிப்பேரரசின் 'மூன்றாம் உலக போர்' என்னும் நூலில் இடம் பெற்றவை.
உலவெப்பமயமாதல், உலகமயமாக்கல் ஆகியவற்றால் நம் இந்திய விவசாயிகள் சந்திக்கும் மூன்றாம் உலக போரே இந்த நூல்.
இதில் கவிதை இருக்கும்
இதில் காதல் இருக்கும்
இதில் அறிவு இருக்கும்
இதில் உண்மை இருக்கும்
கண்டிப்பா படிங்க.......



சனி, ஜூன் 08, 2013

கண்டுபிடி... கண்டுபிடி...

நீலக்கூரையில் இருந்து
பச்சைக்கம்பளத்தில் விழுந்த
ஒளிரும் விண்மீன் நான்...
குளிர்காலத்தின் குழந்தை
பனிக்காலத்தின் மடியில்தான்
எனக்கு தாலாட்டு...
விடியற்காலை-தென்றலுடன் கைகோர்ப்பு
விடியலை வரவேற்க
அந்திமாலை-பறவைகளுடன்
அந்நாளை வழியனுப்ப...
மதுப்பழக்கம் உண்டு எனக்கு
காலையிலேயே அருந்திவிடுவேன் பனித்துளிகளை
பறவைகளின் பாட்டுக்கு, புற்கள் தலையசைக்க
நானோ போதையில் ஆடிவிடுவேன்...
காதலில் காதலர்கள் கைமாற்றும் முதல் பரிசு
 கல்யாணத்தில் தம்பதிகள் கைபிடிக்கும் முதல் வாரிசு
கற்றுக்கொள்ளுங்கள் என்னிடமிருந்து
உயரே தெரியும் வெளிச்சத்தை மட்டுமே பார்பேன்
கீழே தெரியும் நிழலே பார்க்கமாட்டேன்...

~கலீல் ஜிப்ரான்
 (தமிழாக்கம்-உதயா)

சனி, ஜூன் 01, 2013

அதிசயம்!!!!

படித்திருக்கின்றேன்
மாயன்கள் கட்டிய சிச்சென் இட்சா
காட்டின் நடுவே மீட்பர் கிறிஸ்து சிலை
50000பேருக்கு மடியில் இடம் கொடுக்கும் கொலோசியம்
அரசரின் எஸ்டேட்டான மச்சு பிச்சு மலை
80% அழிந்த பின்பும் அதிசயமாய் பெட்ரா
படையெடுப்புக்கு பயந்து கட்டிய சீனப்பெருஞ்சுவர்
கல்லறையை கூட அதிசயமாக்கும் காதலுக்கு எ.கா தாஜ்மஹால்

இவைகள் தான் அதிசயம் என்று
நம்பியும் விட்டேன்
உன்னை பார்க்கும் முன்!!!

கவிதைக்கு பொய் அழகுதானாம்...!

யுரேனியம் கூட வெறும் தூசு தான்
சிறிய நீயுட்ரான் தாக்காத வரை...!
அதுபோல தான் என் கவிதைகளும்
உன் விழிகளின் பார்வை விழாத வரை...!

கவிதையில் கூட பொய் பேசாதவன் நான்...
காரணம்
கற்பனைக்கு செல்லவிடாமல் தடைபோட்ட உன் நிஜ அழகு...

பெண்ணே...
நீ தாராளமாக பொய் பேசு
கவிதைக்கு பொய் அழகுதானாம்...!

உண்மையான சொர்க்கம் விண்வெளி தான்
எவ்வளவு துன்பம் வந்தாலும் அழ முடியாது...!


ஞாயிறு, நவம்பர் 11, 2012

வேலிடிட்டி

அழகை பார்த்து வரும் காதல்- make up கலையும் வரை
பணத்தை பார்த்து வரும் காதல்- purse காலியாகும் வரை
பார்த்ததும் வரும் காதல்- இன்னொருவனை(ள) பார்க்கும் வரை
பார்க்காமல் வரும் காதல்-முதன்முறை பார்க்கும் வரை
பள்ளியில் வரும் காதல்-12ம் வகுப்பு வரை
சொந்ததில் வரும் காதல்-குறிப்பிட்ட வயது வரை

அன்பினாலே வரும் காதல்-உலகம் அழியும் வரை(Not 21/12/12)

--
Have a nice day
**Udhay**

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...