தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 14, 2015

அதிகாரம் : அதிசயம்

1) நமக்கு கிடைத்தது மட்டும் ஆயிரத்து
    முன்னூற்று முப்பது பாக்கள்.

2) இவரையும் குறளையும் வாழ்த்த புலவர்பலர்
    இயற்றினர் திருவள்ளுவ மாலை.

3) தமிழில் உலகை எழுதினாலும் தமிழை
    எழுத வில்லை எங்கும்.

4) அ'வில் ஆரம்பித்து ன்'ல் முடித்து
    தமிழ் நீலகலம் அளந்தார்.

5)  ஐந்து குறளில் பேசினார் உதடுகளுக்கு
    இடையில் உரசல் இல்லாமல்.

6) நூற்றி நாற்ப்பதை தாண்ட வில்லையெந்த
    குறளும் டிவிட்டர் போல.

7) ஒரு நாட்டையோ மொழியையோ கூறாமல்
    உலகபொது மறையாக்கி தந்தார்.

8)  சண்டை போடுவது முதல் சமையல்வரை
     கற்றுதந்த சகலகலா வள்ளுவர்.

9) இரண்டடி ஏழு சீர் பத்து குறள்
    என் கட்டமைத்த வல்லுனர்.

10) அதிகாரமாக சொன்னாலும் அதிகாரமாய் சொல்லாமல்
     அன்பாக சொல்லிய அறிஞரவர்.

மட்காத தமிழ் நாள்காட்டி

பஞ்சாங்கம்-பஞ்ச்(ஐந்து)+அங்கம்
அந்த ஐந்து அங்கங்களாவன
1) கிழமை
2) திதி
3) நட்சத்திரம்
4) யோகம்
5) கரணம்

கிழமை
ஒரு சூரிய உதயத்திற்க்கும் அடுத்த சூரிய உதயத்திற்க்கும் இடைப்பட்ட காலம். இது முழுவதும் சூரியனை மட்டுமே வைத்து கணக்கிடப்படுவது. ஆங்கில காலாண்டர் போல இரவு 12 மணிக்கு புதிய கிழமை பிறப்பதில்லை. 365நாளுக்கும் சூரிய உதயம் கண்க்கிடப்பட்டிருக்கும். அதன்படி அந்த சூரிய உதயத்தில் தான் புதிய கிழமை பிறப்பதாக அர்த்தம்.

திதி

திதி முழுவதும் சந்திரனின் நிலையை வைத்து கணக்கிடப்படுகிறது(ஆங்கில காலாண்டர் சந்திரனை கண் எடுத்து பார்ப்பதில்லை) மொத்தம் 30 திதிகள் உள்ளன. சந்திரன் ஒரு முறை பூமியை சுற்றிவர 27 நாட்கள் எடுத்து கொள்கின்றன. ஒவ்வொரு திதியும் 19 முதல் 26 மணிநேரம் கொண்டிருக்கும். நிலவு சுற்றும் ஒவ்வொரு 12 டிகிரிக்கும் ஒரு திதி வரும். மேலும் வளர்பிறைக்கு 15 திதிகளும் தேய்பிறைக்கு அடுத்த 15 திதிகளும் வரும்.

நட்சத்திரம்
27 நட்சத்திரம் என நாம் அனைவரும் அறிந்ததே. நிலவின் ஒரு முழு சுழற்சிக்கு இந்த 27 நட்சத்திரங்களும் வரும். 13டிகிரி சுழற்சிக்கு ஒரு நட்சத்திரம்.

கரணம்
இது சூரியனையும் சந்திரனையும் சாந்தது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையேயான கோணம் 6டிகிரி அதிகமாக எடுத்துக்கொள்ளும் காலம். எனவே ஒரு திதியில் 2 கரணம் வரும். மொத்தம் 11 கரணங்கள் உள்ளன.

யோகம்
கரணம் சூரியன் நிலையாகவும் சந்திரன் அதனை சுற்றுவதாகவும் கொண்டு கணக்கிடப்படுவது.
ஆனால் யோகமோ சூரியனும் நிலவும் ஒரு ஒப்புமை இயக்கத்தில்(Reative motion) உள்ளதாக கொண்டு இரண்டும் மொத்தமாக 13டிகிரி 20நிமிடம்(நிமிடம் அளவு துல்லியமாக கணித்துள்ளார்கள்.) சுழல எடுத்துக் கொள்ள ஆகும் காலம். மொத்தம் 27 யோகங்கள் உள்ளன.

கணிணி, கால்குலேட்டர் கூட அல்ல... எளிதில் கணக்கிட்டு பார்க்க காகிதம் கூட இல்லாத காலத்திலேயே இவ்வளவு கணக்கு வழக்கு போட்டு பார்த்த முன்னோர்களை நினைத்தாலே வியப்பு தான்...

இன்று என்ன தேதி என்பதையே செல்பேசி எடுத்து பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது இன்றைய தலைமுறைக்கு..

ஞாயிறு, மார்ச் 08, 2015

தம் இதழ் மொழி = தமிழ் மொழி.

  • மனிதன் முதன் முதலில் தன் இதழ் திறந்து பேசிய மொழி நம் தமிழ் மொழி தானாம். அதனால் தான் 'தம் இதழ் மொழி' எனப் பெயரிட்டான். கால வெள்ளத்தில் மூழ்கிய சில எழுத்துக்களால் இன்று 'தமிழ்' என்று தலை நிமிர்ந்து நிற்க்கிறது.

  • பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தில் மனிதன் பெரும்பாலும் ஆற்றுப் பகுதிக்கு அருகே தான் வசித்து வந்தான். காரணம் தேவையான நீர், வேளாண்மை மற்றும் தண்ணீர் குடிக்க வரும் மிருகங்களை வேட்டையாட. ஆனால் மழைக்காலங்களில் ஆற்றுக்கு அருகில் வசிக்க முடியாது என்பதால் ஆற்றை விட்டு சற்று நகர்ந்து குடில்களை அமைப்பார்கள். இவ்வாறு 'ஊர்ந்து' கொண்டே இருப்பதால் 'ஊர்' எனப் பெயரிட்டான். அதே நேரத்தில் வளர்ச்சியடந்த சில பகுதிகள் 'நகர்ந்து' தொலைவில் சென்றுவிட்டன. அதனால் 'நகர்' என பெயரிட்டான். (ஊர்தல்- அங்கும் இங்க்கும் செல்லுதல், நகர்தல்-தொலைவிற்கு செல்லுதல்)

  • 'பேரன், பேத்தி' என்று தவறாகவே அழைக்கின்றனர் கொஞ்சம் தமிழ் பேசும் நம் தாத்தா, பாட்டிகளும். ஆம், மேலை நாடுகளில் தன் குழந்தைக்கு பெற்றோரின் முதல் பெயரே கடைசியாக சேர்க்கப்படும்(Last name). ஆனால் நம் கலாச்சாரத்தில் அப்படி இல்லை(இனிசியல் மட்டும் தான், தமிழன் தன் தந்தையின் பெயரை முன்னே வைத்தான். பின்னே வைக்கவில்லை)
     ஆனால் தங்கள் குழ்ந்தைக்கு தன் பெற்றோரின் பெயரை வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. எனவே தன் பெயரை கொண்டவன்(ள்) என்னும் வகையில் 'பெயரன், பெயர்த்தி' என அழைக்கப்பட்டனர் முன் ஒரு காலத்தில்.

  • கணி(கணக்கிடு)+பொறி(இயந்திரம்)

  • புற்றுநோய்- எறும்பு புற்றை போல் தேவையில்லாத திசுக்களை இந்நோய் ஏற்படுத்தும் ஆதலால்.

  • உள்+அகம்=உலகம் (பிரபஞ்சத்தின் உள் பகுதி)

  • சுடர்(ஒளி பொருந்திய பொருள்) - இதுவே பின்னர் ஆங்கிலத்தில் 'ஸ்டார்' என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல்லாய் அமைந்தது.

  • ஆரத்தீ(ஆரம்+தீ) - வட்டமாக(ஆரம்) தீயை(கற்பூரம்) சுற்றுவது.

  • சீர் - சீர் செய்தல்(நல்ல நிலமைக்கு கொண்டுவருதல்) சீரகம்- அகததை(உள் உறுப்புகளை) சீர் செய்வதால்

கதை(அல்ல நிஜம்) - பல வலை தளங்கள்.
திரைக்கதை               - உதய குமாரன்

திங்கள், ஜனவரி 13, 2014

தொட்டில் பழக்கம்




‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள்...
ஆனால் இன்றோ தொட்டில் (கட்டும்) பழக்கமே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

தொட்டில்-
குழந்தைக்கு கிடைத்த
இரண்டாம் கருவறை’.


மாறிவரும் நாகரிகமாக்கல் பல குழந்தைகளின் இரண்டாம் கருவறையை கலைத்துவிட்டது. தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டாலும், தொட்டிலில் தொடரும் தாய் சேய் உறவு. பொதுவாக தொட்டிலை தாயின் தன் சேலையில் தான் கட்டுவாள். அதனால் இந்த புதிய உலகத்திலும் குழந்தை தன் தாயின் பரிசத்தையும், வெப்பத்தையும் உணர முடியும். தொட்டில் பொதுவாக 6 பக்கங்களில் அலைவுறும் தன்மை கொண்டது. அவ்வாறு தொட்டிலை ஆட்டும் போது குழந்தைக்கு ஆகாயத்தில் பறக்கும் உணர்வை கொடுக்கும். இது குழந்தையின் பய உணர்வை இது குறைக்கிறது. தொட்டிலில் போடப்படும் குழந்தை சில நிமிடங்களில் உறங்கும் இரகசியம் இதுவரை யாரும் அறியார்.  அதிலும் மரத்தடியில் கட்டப்படும் தொட்டில் சொர்க்கத்திற்கும் ஒரு அடி மேலே. எந்தவொரு கவலையும் இல்லாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கலாம் தாய். பொதுவாக தொட்டில் குழந்தையின் முகத்தை மூடி மூச்சி விட சிரமப்பட கூடாது என்பதற்காக நடுவில் ‘தொட்டில் கட்டை என்ற ஒன்றும் இருக்கும். இது பொதுவாக தாய்மாமனின் சீராக இருக்கும். அந்த தொட்டில் கட்டையில் சில விளையாட்டு பொம்மைகள் தொங்கவிட பட்டிருக்கும். இன்று ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைக்கப்பெருகின்றது அந்த ‘தொட்டில் கட்டை. அதுவும் மரத்தினால் செய்யப்பட்ட கட்டை கிடைப்பது அரிதிலும் அரிது.

சமீபகாலமாக தொட்டில்களை பார்க்க முடிந்தது இரயில் பயணங்களில் தான்.
இரண்டு பெர்த்களின் நடுவில் கட்டப்படும் தொட்டிலில் உறங்க்கும் குழந்தைக்கு, அந்த இரயிலே தாலாட்டு பாடி ஆட்டிவிடும்.
அமெரிக்காரன் இதை கண்டுபிடித்தான், ஜப்பான்காரன் கடலில் இரயில் விட்டான் என பொறாமைபடும் நாம் ஏன் குழந்தைக்கு பாதுகாப்பான, சுகாதாரமான, இயற்க்கையான ஒரு படு(இரு)க்கையை கண்டுபிடித்தோம் என பெருமைபட தவறிவிடுகிறோம்?
தொட்டில் மட்டுமல்ல. தொட்டிலுடன் கூடிய தாலாட்டும் தலைமறைவாகி வருகிறது.
தாலாட்டு-1
ஆரரோ அரிரோ அராரோ அரிரரோ
யார் அடிச்சா நீ அழுர,
அத்தை அடிச்சாலோ, அரளி பூச்செண்டால,
சித்தி அடிச்சாலோ செம்பந்தி பூச்செண்டால,
மாமா அடிச்சாரோ மல்லிகை பூச்செண்டால,
தாத்தா அடிச்சாரோ தாமரை பூச்செண்டால,
கண்ணம் சிவக்குதடா... கண்ணீரு பெருக்குதடா...
யாரடிச்சி நீ அழுறா... கண்ணே நீ கண்ணுறங்கு....”
தாலாட்டு-2
ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!
தாலாட்டு-3
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மானே மரகதமே - என் கண்ணே
மாசிலாக் கண்மணியே!
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அப்பா வருவாரே என் கண்ணே
ஆசமுத்தம் தருவாரே!
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மாமன் வருவாரே என் கண்ணே
மாங்கனிகள் தருவாரே!
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அத்த வந்தாக்கா என் கண்ணே
அல்லிப்பூ தருவாளே!

இன்னும் பல சொந்தங்களை இணைத்து தாலாட்டு பாடுவர். என் காதை அடைந்தவை இவை மட்டுமே. இவ்வாறு சொந்தபந்தங்களை தாலாட்டியே தன் குழந்தைக்கு அறிமுகபடுத்தி வைப்பாள் அன்னை.
இன்றோ ஸ்கைப்பிலும், வைப்பரிலும் தான் உறவுகளை அறிமுகம் செய்துவைக்க வேண்டியுள்ளது.
தமிழர்திருநாளான இந்த தைத்திருநாளில் நாம் தமிழர்களின் சிறப்பை கொஞ்சம் திரும்பி பார்போம். முன்னேறிச் செல்லும் இந்த தொழில்நுட்பத்துடன் நாமும் வீரநடை போடுவோம். அதே நேரம் நம் தமிழ் மரபில் உள்ள நல்ல விஷயங்களையும் தூசி தட்டி கையில் எடுத்துச் செல்வோம்...

அனைவருக்கும் இனிய தமிழர் தின வாழ்த்துக்கள்........







விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...