பொது நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 08, 2014

சற்றுச்சூழல்

ஆம்...
சற்று தான் சூழ்ந்துள்ளது
சுற்றுச்சூழல்...

நம்மைச் சுற்றிச் சூழ்ந்த சுற்றுச்சூழல்
இன்று தொலைவில் தனியாய் சுருண்டு கிடக்கின்றதே....

அறிவை கொஞ்சம் வளர்த்ததில்
பசுமையும் மங்கலாய் தெரிகின்றதே...



கடவுளின் இரு கை இயற்றிய இயற்க்கையை
மனிதனின் செயற்க்கை சிதைக்கின்றதே....

சிறு அணுவிலிருந்து ஆயிரம் ஆற்றல்
எடுக்கத் தெரிந்த மனிதா...
சிறு விதையிலிருந்து ஆயிரம் காய் கனி மலர்களை
எடுக்கத் தெரியுமோ???

நம் விஞ்ஞான விரல் தீண்டியதில்
பனியும் நாணத்தில் உருகுகி
கடலுடன் கள்ளத் தொடர்பு கொள்கிறது...
பாவம் பனிக்கரடி...
பனியின்றி தனியாய் தவிக்கிறது...

10000 மைல்களுக்கு அப்பால் உருகும் பனிக்கட்டி
என் வீட்டு வாசலை நனைக்காது
என்ற மெத்தனம் சில ஆண்டுகள் வேண்டுமானால் பலிக்கலாம்.
...

வேலி பயிரை மேய்ந்தால் கூட பரவாயில்லை...
இங்கு பயிரே வேலியை மேய்கின்றதே...
ஓசோன்!!!




பருவம் மாறிய பருவநிலை
உருவம் மாறிய நீர்நிலை
தண்ணீருக்கும் விலை பெற்று தந்தது....

பாலிஎத்திலீன் பையை கண்டுபிடித்த
பாவிப்பையனை தேடுகின்றேன்...
மஞ்சப்பை என்றாலே நாகரீகமில்லாதவன் என
படம் வர அவனே முன்னோடி....

அனாதையாக குழந்தை வாழலாம்
ஆனால்
தனியாக மனிதால் வாழ முடியாது.
..

தமிழும், சுற்றுச்சூழலும் வெறும் தேர்ச்சி பெற தான்...
கணிதமும், அறிவியலும் தான்
மதிப்பை(¡) தரும் மதிப்பெண் பெற
என்றிருக்கும் கல்வி இருக்கும் வரை
பெயரவில் தொடரும்
சுற்றுச்சூழல் தினம் :-( :-( :-(

செவ்வாய், ஏப்ரல் 01, 2014

கட்டியணைத்து...முத்தமிட்டு...




கட்டியணைத்து
முத்தமிட்டு
கொஞ்சி விளையாடிய
தவழும் குழந்தை
எட்டி உதைத்து
மறந்துவிடுகிறது இந்த பூமியை...
நடக்க தெரிந்ததும்...

முன்னோக்கி நடந்தான் மனிதன்...
சற்றே வழுக்கியது இந்த பூமிக்கு...

குப்பைதொட்டி இல்லா தெரு இல்லை..
குப்பை உள்ள தொட்டியும் இல்லை...

தூசுவால் உருவான பூமி...
இன்று
மாசுவால் மயானமாகிறது...

மட்கா குப்பை(பாலீத்தின்) மண்ணையும்,
மட்கும் குப்பை(பணம்) மனதையும்
பாழ்படுத்தும் பண்பாட்டில் பயணிக்கின்றோம்...

சுற்றம் மட்டுமல்ல
சுற்றுச்சூழலும் தூரம் சென்றுவிட்டது
உலகை சுருக்கிய இந்த தொழில்நுட்ப யுகத்தில்...

பச்சை பட்டு உடுத்திய
இந்த பூமி
கற்பழிக்கபட்டு கொண்டே இருக்கிறது...
அதைக் கண்டு கண்ணீர் சிந்த
அந்த வானுக்கும் வற்றிவிட்டது...

கொஞ்சம் கொஞ்சமாக
இயற்க்கை எய்து கொண்டிருக்கிறது... இயற்க்கை
அதை காப்பாற்றுவது நம் கையில்...

Foolஏப்ரல்.1 முட்டாள்கள் தினம்(Fools Day) கொண்டாடுவதற்க்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன்.
இருந்தாலும் இன்று படிமநிலை எரிபொருள் தினம் (Fossil Fuels Day).
தோண்டி தோண்டி எடுக்கப்படும் நிலக்கரி, பெட்ரோலியம் என்றோ ஒரு நாள் கிடைக்காமல் நம்மளை முட்டாளாக்க போகிறது. அதற்க்காக கூட இந்த முட்டாள் தினம் கொண்டாடபடலாம்..

2000மெகாவாட் உற்பத்தி செய்யகூடிய ஒரு அனல் மின் நிலையம் ஒரு நாளைக்கு 20000டன் நிலக்கரியை எரிக்க வேண்டியுள்ளது. இந்த அளவுக்கு நிலக்கரியை எரிப்பதால் வெளிப்படும் சல்பர்-டை-ஆக்ஸைடும், நைட்ரஸ் ஆக்ஸைடும் எவ்வளவு  என்று கணக்கிட்டு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எரிப்பதால் மட்டும் அல்ல. நிலக்கரியை வெடியெடுக்கும் போதும், எரிந்த பின் சாம்பலை வெளியேற்றும் போதும் கூட பெருமளவு மாசுபடுகிறது.


அனுமின்சாரத்தை விட அனல்மின்சாரம் பாதுகாப்பானது. குறைவான மாசுபாடு தான் உடையது என்றாலும் இன்னும் சில வருடங்களுக்கு மட்டுமே போதுமான இருப்பு இருப்பதால் அதனை குறைவாக உபயோகபடுத்தலே நலம்.

நம் கையில் என்ன இருக்கிறது??

நிலக்கரியில் இருந்து முக்கியமாக பெறப்படுவது மின்சாரம்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தலின் மூலம் பர்ஸில் பணத்தையும், பூமியில் நிலக்கரியையும் சேமிக்கலாம்..

சன்னலை அடைத்து ஏசி காற்றில் இருப்பதை விட சன்னலை திறந்து ஓசி காற்றில் தென்றலுடன் கைகோர்த்து கவிதை கிறுக்கலாம்.

யார் மேலோ உள்ள கோபத்தை காட்ட நல்ல வாய்ப்பாக நம் துணியை அடித்து, கசக்கி, பிழிந்து துவைக்கலாம்.. , வாஷிங்க்மெஷின் இல்லாமலே..

களிமண்ணால் செய்யப்பட்ட பல பொம்மைகள் வைத்து கொலு கொண்டாடுவதை போல, ஒரு மட்பானை வாங்கி வைத்து குலு குலு என கொண்டாடலாம்....

மின்விளக்கு, மின்விசிறி போன்றவற்றை சொந்தக்காரர்கள் போல் வைத்திருக்க வேண்டும்.. தேவைப்படும் போது வைத்துக் கொண்டு தேவை இல்லாதபோது அணைத்து வைக்கலாம்...

மொத்ததுல பழைய கற்காலத்துக்கு போகனும்... அப்படித்தன சொல்ல வர...
அப்படினு கேட்க தன இந்த மானிட்டர் பக்கம் கோபமா வரிங்க...

எதையும் உபயோகப்படுத்த வேண்டாம் என்பது என் கருத்து அல்ல...
தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்துங்கள் என்பதே உங்கள் பாதம் தொட்ட என் அன்பான வேண்டுகோள்.....



புதன், அக்டோபர் 23, 2013

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தான்




இன்று உலக ஆற்றல் தினம்(World Energy Day).

 ‘ஆற்றல் அழிவின்மை விதி என்ற விதி உண்டு அறிவியலில். அதன்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றலாம். ஆக ஆற்றலுக்கு அழிவே கிடையாது. இருந்தும் ஆற்றல் சேமிப்பு(Energy Saving) பற்றி உலகம் அலசி ஆராய்ந்தும், அலாரமடித்துக் கொண்டும் இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் நாம் சந்திக்கப் போகும் மிக மிக்கிய பிரச்சனையில் இது(வும்) முக்கியமானது.

கிட்டத்தட்ட அதன் முன்னோட்டத்தை நாம் பார்த்தும்விட்டோம். கடந்த 5 ஆண்டுகளில் நாம் சந்தித்த மின்வெட்டு தான் அது. மின்வெட்டு சரியானதும் சிந்திக்க மறந்துவிட்டோம். ஓரளவு அனைத்து வளங்களும்(நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள், தோரியம், யுரேனியம்) இருக்கும் போதே தட்டுப்பாடு நிலவுகிறது.
குண்டுபல்ப்பில் பயன்படுத்தும் மின்சாரத்தில் 80% டங்ஸ்டன் மின்னிழையை சூடுபடுத்தவே பயன்படுகிறது. மீதி 20% தான் ஒளியாக மாற்றப்படுகிறது. இவ்வாறு எவ்வளவோ ஆற்றலை கடந்த நூற்றாண்டில் வீணடித்துவிட்டோம்.

ஒரு கணக்கின்படி 3100டன் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்தை வெறும் 1கிலோ யுரேனியத்தை வைத்து தயாரித்துவிடலாம். ஆனால் இங்கு ஒரு அணுமின் உலையை தொடங்கவே பல புரட்சிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

மேலும் நிலக்கரியை எரிக்கும் போது வெளிப்படும் CO2 வளிமண்டலத்தில் பசுமையக விளைவை(Green House Effect) ஏற்படுத்துகிறது. ஆற்றலின் தேவை அதிகரித்தால் அதிக நிலக்கரி பயன்படுத்த வேண்டும். அதிக அளவு CO2 வெளிப்படும். ஆக நம்மிடம் இன்னும் பல வருடங்களுக்கு நிலக்கரி இருந்தாலும் கூட அதை பயன்படுத்தும் போது ஏற்படும் இந்த பாதிப்பையும் கவனத்தில் கொள்ளும்படிச் செய்கிறது.

ஒவ்வொரு நொடியும் பூமியின் மீது விழும் சூரிய ஒளி அந்நொடிக்கு பூமிக்கு தேவையான் ஆற்றலை விட அதிகம் தானாம். இருந்தும் இன்னும் தொழில்நுட்பங்கள் வளரவில்லை முழுமையாக பயன்படுத்த. உலகில் 20% க்கும் குறைவாக தான் சூரிய ஒளி ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக மிகப் பெரும் பிரச்சனையாக கவனத்தில் கொள்ள வேண்டியது அதிகமான வாகனங்களின் பயன்பாடு. பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு செல்ல கூட இன்று பைக் தேவைபடுகிறது. சைக்கிள் என்பது ஏதோ 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தான் என்றாகிவிட்டது.
2052ல் உலகில் உள்ள அத்தனை பெட்ரோல் வளங்களும் வறண்டுவிடும். அதற்குள் மாற்று வழி ஆற்றலை கண்டுபிடித்துவிடுவார்கள் தான். ஆனால் கவலை அதுவல்ல. அதீத பயன்பாட்டால் மிக வேகமாக பாழாகும் நம் சுற்றுச்சூழல் தான்.

முதலில் வரும் விமர்சனம் நான் ஒருவன் மட்டும் மாறினால் போதுமா? என்று தான் இருக்கும். 450கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த சிறு தூசிகள் இன்று பூமி, சூரியன், சந்திரன், மற்ற கிரகங்கள் எல்லாம். என்றோ பெய்த சிறுதூறல் தான் இன்றைய பெருங்கடல்கள்...


திங்கள், ஜூலை 29, 2013

ஆபத்தான பூதம்


‘மது அருந்தும் கணவன்மார்களும், அவர்களின் மனைவிகளும்- நேற்றைய நீனா நானா.
அந்த நிகழ்ச்சி பார்த்தப்ப ஒரு கதை நியாபகம் வந்துச்சு.

இதுவரை யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத ஒருவன் காட்டுப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு பூதம்(அலாவுதீன் பூதம் இல்லைங்கோ. இது கொஞ்சம் ஆபத்தான பூதம்) அவன் முன்னாடி வந்துச்சு.

“நீ இதுவரைக்கும் யாருக்கும் எந்த தீங்க்கும் செய்த்தது இல்லையாமே

“ஆம் பூதமே
“ஓஹோ.அப்படியா...இப்போ நீ இங்க ஒரு தீங்கான காரியம் செய்யனும். அப்போதான் இங்க இருந்து போக முடியும். ஆனால் அது என்ன என்பதை நான் தரும் 3 தீங்கான காரியத்தில் ஒன்றை தேர்வு செய்யனும்.

“சொல். என் வாழ்வில் செய்யும் முதல் மற்றும் கடைசி தீங்கு இதான்

உடனே பூதம் தன்னுடைய கிராபிக்ஸ் திறமையை பயன்படுத்தி ஒரு அழகான இளம் பெண், ஒரு கைக்குழந்தை, ஒரு மது பாட்டில் கொண்டுவந்தது.

“நீ இந்த இளம் அழகியை கற்**ழிக்க வேண்டும்.
இல்லை இந்த சிறு குழந்தையை கொல்ல வேண்டும்.
அதுவும் இல்லை இந்த ஒரு பாட்டில் மதுவை அருந்த வேண்டும்
இவன் யோசித்தாம்.

‘இந்த பெண்ணைக் கற்**ழித்தால் அந்த பெண்ணின் வாழ்க்கையே பாழாகி விடும்.
இந்த குழந்தையை கொன்றால் அவர்கள் குடும்பம் மீளாத் துயரம் கொள்ளும்.
ஆனால் மது அது எனக்கு மட்டும் தான் கெடுதல். அதுவும் இன்று ஒரு நாள் மட்டும் தானே


“யேய் பூதமே. நான் இந்த மதுவை அருந்திகிறேன்


அருந்தினான்.
போதையில் அந்த பெண்ணையும் கற்பழிக்கச் சென்றுவிட்டான். அப்போது அந்த குழந்தை அழுதது. இடைஞ்சல் என கருதி அந்த குழந்தையையும் கொன்றுவிட்டான்.



இந்த கதையின் நீதியை நான் சொல்லித்தான் தெரியனும்னு இல்லை.

‘சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்றார் வள்ளுவர். அவர் மீதும் எனக்கு கோபம் தான். பின்ன ‘மது என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்று சொல்லாமல் சென்றுவிட்டாரே.


புகையிலைக் கூட உடல் நலத்திற்க்கு தான் கேடு. மது நாட்டிற்க்கே கேடு. அதனால் தான் ‘குடி குடியை(யே) கெடுக்கும்னு எழுதிவச்சுருக்காங்க.


இன்று மருத்துவம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளது. அதுனால மது அருந்துவதால் உடல் ரீதியா ஏற்படும் பிரச்சனைகள் ஒரு பிரச்சனையே அல்ல. உங்கள் ஆயுள் காலத்தில் எந்த குறைவும் கூட ஏற்படாமல் இருக்கலாம்.
ஆனால் இந்த மானம். அது கப்பல் ஏறி போய்ருமே.

‘நான் எவ்வளவு குடிச்சாலும் ரொம்ப ஸ்ட்ராங் தெரியுமா?!. உங்க மட்டும் தான் தெரியல நீங்க எப்படி நடப்பிங்கனு. அதான் இந்த பேச்செல்லாம்.


‘எனக்கு மது அருந்துற பழக்கம்லாம் இல்லைங்க.. ஏதோ பீர் மட்டும் சாப்பிடுவேங்க. அது உடம்புக்கு எந்த கெடுதலும் இல்லைல அப்படினு சொல்றவங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்க ஆச படுறேன். ‘எந்த மருந்து கடைல பீர் விக்கிறாங்க. எந்த குளிபானக் கடைல பீர் விக்கிறாங்க

பின்குறிப்பு:
இப்பதிவை படித்த 100% பேரும் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் என்று எனக்குத் தெரியும்.
இனிமேலும் இப்படியே இருக்க வேண்டும் என்பதற்க்கே இந்த பதிவு.
வருங்காலத்தில் மதுக்கடைகள் இல்லா தமிழகம் படைக்க சூளுரை ஏற்ப்போம் நண்பர்களே.




விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...