திங்கள், ஜூலை 29, 2013

ஆபத்தான பூதம்


‘மது அருந்தும் கணவன்மார்களும், அவர்களின் மனைவிகளும்- நேற்றைய நீனா நானா.
அந்த நிகழ்ச்சி பார்த்தப்ப ஒரு கதை நியாபகம் வந்துச்சு.

இதுவரை யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத ஒருவன் காட்டுப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு பூதம்(அலாவுதீன் பூதம் இல்லைங்கோ. இது கொஞ்சம் ஆபத்தான பூதம்) அவன் முன்னாடி வந்துச்சு.

“நீ இதுவரைக்கும் யாருக்கும் எந்த தீங்க்கும் செய்த்தது இல்லையாமே

“ஆம் பூதமே
“ஓஹோ.அப்படியா...இப்போ நீ இங்க ஒரு தீங்கான காரியம் செய்யனும். அப்போதான் இங்க இருந்து போக முடியும். ஆனால் அது என்ன என்பதை நான் தரும் 3 தீங்கான காரியத்தில் ஒன்றை தேர்வு செய்யனும்.

“சொல். என் வாழ்வில் செய்யும் முதல் மற்றும் கடைசி தீங்கு இதான்

உடனே பூதம் தன்னுடைய கிராபிக்ஸ் திறமையை பயன்படுத்தி ஒரு அழகான இளம் பெண், ஒரு கைக்குழந்தை, ஒரு மது பாட்டில் கொண்டுவந்தது.

“நீ இந்த இளம் அழகியை கற்**ழிக்க வேண்டும்.
இல்லை இந்த சிறு குழந்தையை கொல்ல வேண்டும்.
அதுவும் இல்லை இந்த ஒரு பாட்டில் மதுவை அருந்த வேண்டும்
இவன் யோசித்தாம்.

‘இந்த பெண்ணைக் கற்**ழித்தால் அந்த பெண்ணின் வாழ்க்கையே பாழாகி விடும்.
இந்த குழந்தையை கொன்றால் அவர்கள் குடும்பம் மீளாத் துயரம் கொள்ளும்.
ஆனால் மது அது எனக்கு மட்டும் தான் கெடுதல். அதுவும் இன்று ஒரு நாள் மட்டும் தானே


“யேய் பூதமே. நான் இந்த மதுவை அருந்திகிறேன்


அருந்தினான்.
போதையில் அந்த பெண்ணையும் கற்பழிக்கச் சென்றுவிட்டான். அப்போது அந்த குழந்தை அழுதது. இடைஞ்சல் என கருதி அந்த குழந்தையையும் கொன்றுவிட்டான்.



இந்த கதையின் நீதியை நான் சொல்லித்தான் தெரியனும்னு இல்லை.

‘சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்றார் வள்ளுவர். அவர் மீதும் எனக்கு கோபம் தான். பின்ன ‘மது என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்று சொல்லாமல் சென்றுவிட்டாரே.


புகையிலைக் கூட உடல் நலத்திற்க்கு தான் கேடு. மது நாட்டிற்க்கே கேடு. அதனால் தான் ‘குடி குடியை(யே) கெடுக்கும்னு எழுதிவச்சுருக்காங்க.


இன்று மருத்துவம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளது. அதுனால மது அருந்துவதால் உடல் ரீதியா ஏற்படும் பிரச்சனைகள் ஒரு பிரச்சனையே அல்ல. உங்கள் ஆயுள் காலத்தில் எந்த குறைவும் கூட ஏற்படாமல் இருக்கலாம்.
ஆனால் இந்த மானம். அது கப்பல் ஏறி போய்ருமே.

‘நான் எவ்வளவு குடிச்சாலும் ரொம்ப ஸ்ட்ராங் தெரியுமா?!. உங்க மட்டும் தான் தெரியல நீங்க எப்படி நடப்பிங்கனு. அதான் இந்த பேச்செல்லாம்.


‘எனக்கு மது அருந்துற பழக்கம்லாம் இல்லைங்க.. ஏதோ பீர் மட்டும் சாப்பிடுவேங்க. அது உடம்புக்கு எந்த கெடுதலும் இல்லைல அப்படினு சொல்றவங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்க ஆச படுறேன். ‘எந்த மருந்து கடைல பீர் விக்கிறாங்க. எந்த குளிபானக் கடைல பீர் விக்கிறாங்க

பின்குறிப்பு:
இப்பதிவை படித்த 100% பேரும் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் என்று எனக்குத் தெரியும்.
இனிமேலும் இப்படியே இருக்க வேண்டும் என்பதற்க்கே இந்த பதிவு.
வருங்காலத்தில் மதுக்கடைகள் இல்லா தமிழகம் படைக்க சூளுரை ஏற்ப்போம் நண்பர்களே.




சனி, ஜூலை 27, 2013

மரம் மாதிரி...



உயிர் மட்டும் தான் தந்தாள் தாய்
உயிர்மூச்சு தந்து கொண்டிருக்கிறாய் நீ


காகிதம் தந்தாய்
எழுதினோம் "மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்"
"காடுகளை காப்போம். நாட்டை காப்போம்" என்றெல்லாம்
மதிப்பெண்கள் பெற்றோம்
மதி மட்டும் மாறலையே

நிழல் தந்தாய்
நிழலை மட்டும் பெற்றுக் கொண்டோம் நாங்கள்
நிஜமாகிய உன்னை மறந்து விட்டு

நாங்கள் வாழ நீ வேண்டும்
நீ வாழ நாங்கள் மாற வேண்டும்
உன் நண்பனாக...!


சின்ன வயசில இருந்தே மரம் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜன தருதுனு மட்டும் சொல்லியே ஏமாத்திதாங்க. ஆமாங்க மரம் நாம் சுவாசிக்க இந்த ஒரு வேலைய மட்டும் செய்யல. மரம் ஒரு வடிகட்டியாகவும் செயல்படுகிறது. காற்றிலுள்ள சிறிய துகள்கள், ஓசோன், NO2, SO2,அம்மோனியா என அனைத்தையும் எடுத்துக்கொள்கிறது.
தரைக்கு மேல காற்ற வடிகட்டுதுனு பார்த்த தரைக்கு கீழேயும் வேல செய்யுது இந்த மரம். மரத்தின் அசுத்த நீரையும் வடிகட்டுகிறது. நீர் மாசுபாட்டையும் குறைக்கிறது.
இப்படி நின்னுகிட்டே காற்று, நீர் என இரண்டையும் சுத்தமாக்கிறது இந்த மரம். (ஆனா நாம கொஞ்ச நேரம் நின்டா, ஏன்டா மரம் மாதிரி நிக்கிரனு கேக்குராங்க
·         வெறும் 4 மரங்கள் சுமார் 50கிலோ மாசுத்துகள்களை அழிக்கிறதாம் ஒரு வருடத்தில்
·         வெறும் 400 மரங்கள் ஒரு வருடத்தில் 530லி மழைநீரை சேமிக்கிறது.
·         வெறும் 4000 மரங்கள் போதும் ஒரு வருடத்தில் வெள்ளத்தினால் ஏற்ப்படும் சேதங்களில் 70கோடியை மிச்சப்ப்டுத்த.
·         கடைகளுக்கு அருகில் மரங்கள் இருந்தால் பொருட்கள் வாங்குபவர்கள் 11% அதிகமாக செலவு செய்வார்களாம்(அவர்கள் மனம் மகிழ்ச்சியாய் இருப்பதால்)
·         கரண்ட் பில்லில் வருடத்திற்க்கு 3000ரூபாய் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது.
·         உங்கள் வீட்டின் மதிப்பு ஒரு 15% அதிகமாகும் மரங்கள் சூல இருந்தால்
·          மரம் கேட்டால் நீங்கள் வருடத்திற்க்கு 31000ரூபாய் கட்ட வேண்டியிருக்கும. அது தரும் ஆக்ஸிஜனின் மதிப்பு.
·         சுத்தம் செய்யும் வேலைக்கு தனியாக 62000ரூபாய் தர வேண்டியிருக்கும்


2.காதல் ஓட்டம்...

இதற்கு முன்



அந்த நொடி தான் அவளைக் கண்ட கடைசி நொடி என எனக்குத் தெரியும். இறுதியாண்டின் இறுதித் தேர்வை எழுதிவிட்டுச் செல்கிறாள் அவள். இன்னும் ஒரே ஒரு தேர்வுக்காக காத்திருக்கிறேன் நான். ஆனால் இப்போது காத்திருப்பதோ அந்த ஏழாவது பேருந்து என்னைக் கடக்கும் அந்த நொடிக்காக.
ஆறாவதாக வந்த பேருந்து. ‘பின்னால் ஒரு இளவரசி வருகிறாள்.. ஒதுங்கி நில் என்று அரண்மனை ஊழியர்கள் சொல்வது போல கண்ணில் புழுதியை வாரி இறைத்துச் சென்றது. கண்களை கசக்கினேன். கண்ணீர் வந்தது. தூசி விழுந்ததால் மட்டும் அல்ல என்று தெரிந்தது. ஒரு வழியாக கண்களை சரியாக திறந்து பார்க்கும் போது நுழைவாயிலிடம் விடைபெற்று சென்றுகொண்டிருந்தது அந்த ஏழாவது பேருந்து.
கல்லூரிக்கு உள்ளே கல்லூரிப் பேருந்து காத்திருக்கும் – மாணவர்களுக்கு
கல்லூரிக்கு வெளியெ நகரப் பேருந்துக்கு காத்திருக்கும் – மாண்வர்கள்
நான் காத்திருப்போன் பட்டியலில். நாளை மீண்டும்(மட்டும்) திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அமர்ந்தேன். இந்த பேருந்து நிறுத்தம் தான் நான் அவளைக் கண்ட முதல் இடம். இங்கிருந்துதான் ஆரம்ப்பித்தது என் காதல் ஓட்டம். ஆரம்ப்பித்து மூன்றாம் ஆண்டைத் தொடப் போகிறது. இன்று வரை நான் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறேன்.... ஒரு வழிப்பாதையில்.
இந்த மூன்று ஆண்டுகளில் ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை அவளிடம். என் பெயர் அவளுக்கு தெரியுமா என்று கூட தெரியாது. நான் இந்த கல்லூரி தான் என்று அவளுக்கு தெரியுமா என்றும் தெரியாது. என் பிம்பம் ஒரு முறையாவது அவள் கருவிழியில் பட்டதுண்டா என்றும் தெரியவில்லை.
முதலாம் ஆண்டின் முதல் வாரமே பழிகியது பேருந்து நிறுத்தமிடமும், அருகிலுள்ள கடையுடனும் தான். இன்னொரு நண்பன் வந்ததும் சேர்ந்து போகலாம் என்று பேருந்து நிறுத்தத்திலேயே அமர்ந்திருந்தேன் நான். 


அவள் வந்தால் நகரப் பேருந்தில். அது தான் அவளைக் கண்ட முதல் நாள். பேருந்திலிருந்து இறங்கினாள் அவள். அமர்ந்திருந்த நான் எழுந்தேன். அனிச்சையாய் மரியாதை அந்த அழ(கி)குக்கு. அவளை வர்ணிக்க அப்பொழுது வார்த்தை தெரியவில்லை. அவள் மட்டுமே தெரிந்ததால்.
அவள் இறங்கியவுடன் பேருந்து நகர்ந்தது. நுழைவாயிலை நோக்கி நடந்தாள் அவள். நான் மட்டும் அசையவில்லை. அவள் தந்த போதையில் திடமாய் நின்று கொண்டிருந்தேன். திடிரென்று ஒரு பயம் நெஞ்சைக் கவ்வியது.
இவள் இன்று இங்கு நடக்கும் வங்கித் தேர்வை எழுத வந்த பெண்ணாக இருந்துவிட்டால். சட்டென்று போதை தெளிந்து நுழைவாயிலை நானும் அடைந்தேன். காவலாளியின் அறிவுறுத்தலின் பேரில் அடையாள அட்டை அணிந்தாள். அப்போது தான் உயிரே வந்தது. இவளும் இந்த கல்லூரி தான். இவளும் முதலாமாண்டு தான். இருந்தாலும் நெஞ்சைக் க்வ்விய பயம் இன்னும் சிறிது கவ்வி தான் இருந்தது. எந்த துறையில் படிப்பவள் இவளோ என்று.
இருவரும் கல்லூரிக்குள் நுழைந்தோம். ஒரு வாரம் ஆனாலும் புதிதாய் தெரிந்தது கல்லூரி அன்று மீண்டும். அவள் ஒவ்வொரு அடியாய் முன்னே நடந்து செல்ல செல்ல என் நெஞ்சைக் கவ்விய பயத்தின் இறுக்கமும் அதிகமானது.
கணிதவியல் துறை. அவள் நுழையவில்லை.
இறுக்கம் சற்று தளர்ந்தது.
கணினிஅறிவியல் துறை. அவள் கடந்து சென்றாள்.
இறுக்கம் இன்னும் சற்று தளர்ந்தது.
அடுத்ததுத்து இரண்டு துறைகள். அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
 இறுக்கம் மேலும் மேலும் தளர்ந்தது.
அடுத்து வேதியியல் துறை. என் துறை. அவள் நுழையமாட்டாளா. மூச்சு முட்டியது. இறுக்கம் மேலும் அதிகமானது.
பல நாட்கள் பழகிய பின் பிரிந்து சென்றதைப் போல் வலியைத் தந்தது அவள் இயற்பியல் துறைக்குள் நுழைந்தது.

(-தொடரும்)

வியாழன், ஜூலை 25, 2013

ஆங்கிரி பேர்டாம்...

 
தரையில் விளையாடிய காலம் போய்
திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம்
பம்பரம்
கோலிக்குண்டு
கிட்டிப்பிள்ளை
தட்டாங்கல்
பல்லாங்குழி
தாயம்
என அத்தனையும் இரையானது
இந்த சின்னஞ்சிறு செல்லிடப் பேசின் கோரப்பசிக்கு
கையளவு திரையில் காரே ஓட்டலாம்
கைவிரலை தவிர வேறெதும் ஓடலையே
ஆங்கிரி பேர்டாம்...
மோதினால் கட்டிடமே இடியுமாம்
எப்படியெல்லாம் விளையாடிராங்க!!!
சில நிமிட பேருந்து பயணங்களில்
சில நிமிட காத்திருப்புகளில்
வேலையேதும் இல்லாத வேளைகளில்
எல்லாம் விளையாடுகிறோம்
-விளையாடுகிறோம் என்னும் பேரில்
போன தலைமுறை
விளையாடியது....மறந்தது
வரும் தலைமுறை
அறியாது....வருந்தாது
இந்த தலைமுறை
விளையாடியது....விளையாட முடியாமல் போனது
அதான் இந்த ஏக்கமும் வருத்தமும்...!

வெள்ளி, ஜூலை 19, 2013

இமாலய இமயம்...



‘உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இதன் உயரம் 8850மீட்டர். இது நேபால் மற்றும் சீனா எல்லையில் அமைந்துள்ளது
(பின்ன 16.13லட்சம் பேர் மேல பொறாமைப்பட்டு, போட்டிக்கு 125ரூபாய் கட்டி குருப்4 எக்ஸாமுக்கு ப்ரிப்பரேசன்.)
B.E வரைக்கும் படிச்சிட்டு(போய்ட்டு) மீண்டும் 6வருடங்கள் பின்னோக்கி...
என் தம்பி புத்தகத்தை சண்டை போட்டு வாங்கி ப(பு)டிச்சிக்கிட்டு இருக்கேன்.
B.E ல ஒரு லேப். ஒரு ஒயர் விட்டத்தை அளக்கனும். இதுக்கு 5 ரீடிங் எடுக்கனும். 3 மணி நேரம் இதுக்கு மட்டும்.
இவிங்க எப்படி இவ்வளவு பெரிய மலை உச்சியின் உயரத்தை இவ்வளவு கரக்ட அளந்துருப்பாங்ய்க..

200 வருடங்கள் பின்னோக்கி.........
கி.பி.1802. இந்த பிரிட்டிஷ்காரங்களுக்கு ஒரு ஆச. உயரத்திலேயே உயரமான இடம் எதுனு கண்டுபிடிக்க.
உயரமான இடம் நாளே கண்டிப்பா மலை தான். அதனால உலகத்தில இருக்குற மலைகளின் உயரத்தை அள்க்க ஒரு குழுவ அனுப்புனாங்க.
நியாபகம் இருக்கட்டும்.. நாம இருப்பது 1802(கதையோட மூழ்கித்திங்கனா)
1802ல செயற்க்கைகோள் இல்ல. கணினி இல்ல. GPS, Google Map இப்படி எதுவும் இல்ல.
அளப்பதும் நாம தான்... கணக்குகளும் நாம் தான் போட வேண்டும்...
அளப்பதற்க்கு அவர்கள் பயன்படுத்தியது இயந்திர உபகரணங்களே.
அதன் எடை சுமார் 500கிலோ.. இதை மலையின் உச்சிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். (அதற்க்கு மட்டும் 12 பேர் கொண்ட குழு. பின்னர் அளவிடுதல், கணக்கிடுதலுக்கு தனித்தனி குழு.)
அவர்கள் பயன்படுத்தியது நாம் 8ம் வகுப்பில் படித்த சாதாரன முக்கோணவியல் தான்..
இந்தியாவில அவங்க ஆரம்பிச்சது முதல்ல தென்னிந்தியால தான்.
1830ல தான் இமாலயதுக்கு போனாங்க(நாமலும் இப்ப தான் போக போரோம்)
ஆனா நேபால் அந்த குழுவ அனுமதிக்கல.
பல ஆண்டுகளுக்கு பிறகு தான் அனுமதி தந்தாங்க. இருந்தாலும் ஒரு அதிகாரி மலேரியாவால இறந்துத்தாறு.. 2பேரு ரிட்டையர் ஆயிட்டாங்க.
அப்புறம் மறுபடியும் ஒரு புது குழுவ அனுப்பி 1857 தான் முடிவிக்கு வந்தாங்க. பீக்XVxvxv தான் உலகிலேயே உயரமான சிகரம்.. அதன் உயரம் 8840மீட்டர். பின்னர் அதில் பணியாற்றிய உயர் அதிகாரியான எவெரெஸ்ட் என்பதையே அதற்க்கு சூட்டினர்..

கிட்ட 1999 தான் அமெரிக்கா அது 8850மீட்டர் என உறுதி செய்தது... satellite, GPS  போன்ற நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன்...
ஆனால் எதுவும் இல்லாமல் 200 ஆண்டுகளுக்கு முன்னரே கிட்டதட்ட சரியாக கணித்துள்ளனர்... 
அவர்களின் சாதனையும் இமயம் போல் உயர்ந்தது தான்.....

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...