இவ்வுலகில் தனக்கு தானே
பெயர் வைத்துக் கொள்ளும் திறமையும், உரிமையும் ஒன்றிற்கு மட்டுமே உள்ளது....அது என்ன????
மிகவும் வியப்பாக தான்
இருந்தது... முதன்முதலில் இந்த கணினியின் சுட்டுவிரல்(அதன் சுட்டி)
பிடித்து கணக்கிடுகையில். இருபதாம் வாய்ப்பாடு வரை பல நூறு தடவை படித்தும்,
எழுதியும் பார்த்ததால் தான் சில நிமிடங்களில் கணக்கிட கற்றுகொண்டேன். வாயில்லா
இந்த கணினி எங்கு கற்றுக் கொண்டது மில்லிநொடியில்... மில்லியன் கணக்கிட. பதில்
தெரியாமல் பள்ளியில் பைத்தியம் பிடிக்க வைத்த கேள்வி...
கல்லூரியில் முதலாமாண்டு
தான் தெளி(ரி)ந்தது. நம் கணினிக்கும் சொல்லித்தான் குடுக்கிறார்கள்.. ப்ரோகிராம்(நிரல்)
என்ற பெயரில் புரிதலாக... அப்படியென்றால் நம் மூளையும் ப்ரோகிராம் செய்யப்பட்ட
ஒன்றாகதான இருக்க வேண்டும். சுற்றுபுறத்திலிருந்து இன்புட்(உள்ளீடு)
எடுத்துக்கொண்டு அதனை பிராசஸ்(பரிசீலனை) செய்து தேவையான கட்டளைகளை பிறப்பிக்கிறது.
இந்த ப்ரோகிராமின் பெரும்பகுதி ஜீன் என்னும் சிப்’பில் எழுதிவைக்கபட்டுள்ளது. மீதிபகுதியானது பேரண்டத்தில்
உள்ள நட்சத்திரங்களை விட அதிகமாக உள்ள நீயுரான்களில் நம்மால் எழுதப்படுகிறது. கணினியின்
நினைவானது அதில் உள்ள ட்ரான்சிஸ்டர்களை அடிப்படையாக கொண்டது. இந்த
டிரான்சிஸ்டர்களில் இரு வகையான ‘Gate’ உள்ளது.
1) Floating Gate
2) Control Gate
ஒரு Floating Gate ஆனது மற்றொரு floating gate உடன் control gate வழியாக இணைகிறது. நாம் கணிக்கு தரும் தரவுகள் அனைத்தும் இவ்வாறு இரு Floating Gate இணைவதின் மூலம் சேமிக்கப்படுகிறது. நாம் தரவுகளை
அழிக்கும்போது மீண்டும் இந்த இணைப்பானது பிரிக்கப்பட்டு வேறொரு நினைவிற்க்காக
ஒதுக்கிவைக்கப்படுகிறது.
இதேபோல் மூளையில் இரு
நீயுரான்கள் இணையும் போது அங்கே தகவல்கள் சேமிக்கபடுகிறது. அந்த இரு நீயுரான்கள் ‘டைவர்ஸ்’ வாங்கும் போது நம் நினைவில் இருந்து அந்த தகவல்கள்
அழிக்கப்படுகிறது.
இந்த மூளை தகவல்களை
சேமிக்கும் விதம் மிகவும் வியப்பானது.
உதாரணமாக ‘தண்ணீர்’ என்ற வார்த்தையை நாம் நினைத்தவுடன் அதன் நிறம் நம் கண்
முன்னே வந்து செல்லும். இது மூளையின் பின் பகுதியில் சேமிக்கபட்டிருக்கும். அதன்
சுவையை நினைக்கும் போது மூளையின் முன் பகுதி அதை பற்றிய தகவலை தரும். தண்ணீரை
தொடும்போது வரும் குளிர்ச்சியை நினைத்தால் மூளையின் பக்கவாட்டு பகுதி இப்படி தான்
ஜில்லென்று இருக்கும் என சொல்லும்.
இந்த தகவல்கள் எல்லாம்
முன் எப்பொழுதோ பல்வேறு புலன் உறுப்புகளால்(கண், மூக்கு, தோல்) மூளைக்கு அனுப்பபட்ட
தகவல்கள். இந்த புலன் உறுப்புகள் மூளையின் எந்த பகுதியில் இணைக்கபட்டு இருக்கிறதோ,
அந்த பகுதியில் தான் சேகரித்த தகவல்களை சேமித்து வைக்கிறது. சுருங்க கூறின்
மூளைக்கும் பல்வேறு துறை சார்ந்த மந்திரிகள் உண்டு.
எத்தனை மந்திரிகள்
இருந்தாலும் பிரதம மந்திரியாக ‘ஹிப்போகெம்பஸ்’ செயல்படுகிறது. தண்ணீரை பற்றிய மேற்கூறிய அனைத்து
தகவல்களையும் ஒருங்கிணைத்து ‘இது தான் தண்ணீர்’ என சேமித்து வைக்கிறது(தண்ணீரை அல்ல....
தகவலை!!!)
கணினியில் ‘0’ & ‘1’ என பதியப்படும் தகவல்கள் மூளையில் எவ்வாறு பதியப்படுகின்றன???
முதலில் கொஞ்சம் ‘கெமிஸ்ட்ரி’ ஒர்க் அவுட் ஆகனும். நரம்பு செல்களுக்கும்(நீயுரான்கள்),
சாதாரண செல்களுக்கும் இடையில். இவ்விரு செல்களும் இணையும் இடத்திற்கு ‘ஸினாப்ஸ்’ என்று பெயர்.
இவ்விரு செல்களும் உரசி செல்லும் போது வேதியியல் மின்சாரவியலாகிறது. நரம்பு செல் ‘மின்சாரம்
என்மீது பாய்கின்றதே’ என பாடிக்கொண்டே அந்த தகவலை மூளைக்கு எடுத்துச் செல்லும்
சாதாரணசெல் உரசிய மயக்கத்தில்...
பின் அந்த மின்தூண்டல் மீண்டும் ஒரு ‘கெமிஸ்ட்ரி’ ஒர்க் அவுட்
செய்து இரு நீயுரான்களை இணையச் செய்து நினைவாக சேமிக்கிறது.
உங்கள் மூளையின் சில மில்லியன் நீயுரான்களுக்கு முடிச்சு போட நேரம்
ஒதுக்கியதற்க்கு நன்றி...
மீண்டும் சந்திப்போம்....