செவ்வாய், ஏப்ரல் 14, 2015

அதிகாரம் : அதிசயம்

1) நமக்கு கிடைத்தது மட்டும் ஆயிரத்து
    முன்னூற்று முப்பது பாக்கள்.

2) இவரையும் குறளையும் வாழ்த்த புலவர்பலர்
    இயற்றினர் திருவள்ளுவ மாலை.

3) தமிழில் உலகை எழுதினாலும் தமிழை
    எழுத வில்லை எங்கும்.

4) அ'வில் ஆரம்பித்து ன்'ல் முடித்து
    தமிழ் நீலகலம் அளந்தார்.

5)  ஐந்து குறளில் பேசினார் உதடுகளுக்கு
    இடையில் உரசல் இல்லாமல்.

6) நூற்றி நாற்ப்பதை தாண்ட வில்லையெந்த
    குறளும் டிவிட்டர் போல.

7) ஒரு நாட்டையோ மொழியையோ கூறாமல்
    உலகபொது மறையாக்கி தந்தார்.

8)  சண்டை போடுவது முதல் சமையல்வரை
     கற்றுதந்த சகலகலா வள்ளுவர்.

9) இரண்டடி ஏழு சீர் பத்து குறள்
    என் கட்டமைத்த வல்லுனர்.

10) அதிகாரமாக சொன்னாலும் அதிகாரமாய் சொல்லாமல்
     அன்பாக சொல்லிய அறிஞரவர்.

மட்காத தமிழ் நாள்காட்டி

பஞ்சாங்கம்-பஞ்ச்(ஐந்து)+அங்கம்
அந்த ஐந்து அங்கங்களாவன
1) கிழமை
2) திதி
3) நட்சத்திரம்
4) யோகம்
5) கரணம்

கிழமை
ஒரு சூரிய உதயத்திற்க்கும் அடுத்த சூரிய உதயத்திற்க்கும் இடைப்பட்ட காலம். இது முழுவதும் சூரியனை மட்டுமே வைத்து கணக்கிடப்படுவது. ஆங்கில காலாண்டர் போல இரவு 12 மணிக்கு புதிய கிழமை பிறப்பதில்லை. 365நாளுக்கும் சூரிய உதயம் கண்க்கிடப்பட்டிருக்கும். அதன்படி அந்த சூரிய உதயத்தில் தான் புதிய கிழமை பிறப்பதாக அர்த்தம்.

திதி

திதி முழுவதும் சந்திரனின் நிலையை வைத்து கணக்கிடப்படுகிறது(ஆங்கில காலாண்டர் சந்திரனை கண் எடுத்து பார்ப்பதில்லை) மொத்தம் 30 திதிகள் உள்ளன. சந்திரன் ஒரு முறை பூமியை சுற்றிவர 27 நாட்கள் எடுத்து கொள்கின்றன. ஒவ்வொரு திதியும் 19 முதல் 26 மணிநேரம் கொண்டிருக்கும். நிலவு சுற்றும் ஒவ்வொரு 12 டிகிரிக்கும் ஒரு திதி வரும். மேலும் வளர்பிறைக்கு 15 திதிகளும் தேய்பிறைக்கு அடுத்த 15 திதிகளும் வரும்.

நட்சத்திரம்
27 நட்சத்திரம் என நாம் அனைவரும் அறிந்ததே. நிலவின் ஒரு முழு சுழற்சிக்கு இந்த 27 நட்சத்திரங்களும் வரும். 13டிகிரி சுழற்சிக்கு ஒரு நட்சத்திரம்.

கரணம்
இது சூரியனையும் சந்திரனையும் சாந்தது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையேயான கோணம் 6டிகிரி அதிகமாக எடுத்துக்கொள்ளும் காலம். எனவே ஒரு திதியில் 2 கரணம் வரும். மொத்தம் 11 கரணங்கள் உள்ளன.

யோகம்
கரணம் சூரியன் நிலையாகவும் சந்திரன் அதனை சுற்றுவதாகவும் கொண்டு கணக்கிடப்படுவது.
ஆனால் யோகமோ சூரியனும் நிலவும் ஒரு ஒப்புமை இயக்கத்தில்(Reative motion) உள்ளதாக கொண்டு இரண்டும் மொத்தமாக 13டிகிரி 20நிமிடம்(நிமிடம் அளவு துல்லியமாக கணித்துள்ளார்கள்.) சுழல எடுத்துக் கொள்ள ஆகும் காலம். மொத்தம் 27 யோகங்கள் உள்ளன.

கணிணி, கால்குலேட்டர் கூட அல்ல... எளிதில் கணக்கிட்டு பார்க்க காகிதம் கூட இல்லாத காலத்திலேயே இவ்வளவு கணக்கு வழக்கு போட்டு பார்த்த முன்னோர்களை நினைத்தாலே வியப்பு தான்...

இன்று என்ன தேதி என்பதையே செல்பேசி எடுத்து பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது இன்றைய தலைமுறைக்கு..

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...