புதன், அக்டோபர் 23, 2013

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தான்




இன்று உலக ஆற்றல் தினம்(World Energy Day).

 ‘ஆற்றல் அழிவின்மை விதி என்ற விதி உண்டு அறிவியலில். அதன்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றலாம். ஆக ஆற்றலுக்கு அழிவே கிடையாது. இருந்தும் ஆற்றல் சேமிப்பு(Energy Saving) பற்றி உலகம் அலசி ஆராய்ந்தும், அலாரமடித்துக் கொண்டும் இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் நாம் சந்திக்கப் போகும் மிக மிக்கிய பிரச்சனையில் இது(வும்) முக்கியமானது.

கிட்டத்தட்ட அதன் முன்னோட்டத்தை நாம் பார்த்தும்விட்டோம். கடந்த 5 ஆண்டுகளில் நாம் சந்தித்த மின்வெட்டு தான் அது. மின்வெட்டு சரியானதும் சிந்திக்க மறந்துவிட்டோம். ஓரளவு அனைத்து வளங்களும்(நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள், தோரியம், யுரேனியம்) இருக்கும் போதே தட்டுப்பாடு நிலவுகிறது.
குண்டுபல்ப்பில் பயன்படுத்தும் மின்சாரத்தில் 80% டங்ஸ்டன் மின்னிழையை சூடுபடுத்தவே பயன்படுகிறது. மீதி 20% தான் ஒளியாக மாற்றப்படுகிறது. இவ்வாறு எவ்வளவோ ஆற்றலை கடந்த நூற்றாண்டில் வீணடித்துவிட்டோம்.

ஒரு கணக்கின்படி 3100டன் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்தை வெறும் 1கிலோ யுரேனியத்தை வைத்து தயாரித்துவிடலாம். ஆனால் இங்கு ஒரு அணுமின் உலையை தொடங்கவே பல புரட்சிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

மேலும் நிலக்கரியை எரிக்கும் போது வெளிப்படும் CO2 வளிமண்டலத்தில் பசுமையக விளைவை(Green House Effect) ஏற்படுத்துகிறது. ஆற்றலின் தேவை அதிகரித்தால் அதிக நிலக்கரி பயன்படுத்த வேண்டும். அதிக அளவு CO2 வெளிப்படும். ஆக நம்மிடம் இன்னும் பல வருடங்களுக்கு நிலக்கரி இருந்தாலும் கூட அதை பயன்படுத்தும் போது ஏற்படும் இந்த பாதிப்பையும் கவனத்தில் கொள்ளும்படிச் செய்கிறது.

ஒவ்வொரு நொடியும் பூமியின் மீது விழும் சூரிய ஒளி அந்நொடிக்கு பூமிக்கு தேவையான் ஆற்றலை விட அதிகம் தானாம். இருந்தும் இன்னும் தொழில்நுட்பங்கள் வளரவில்லை முழுமையாக பயன்படுத்த. உலகில் 20% க்கும் குறைவாக தான் சூரிய ஒளி ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக மிகப் பெரும் பிரச்சனையாக கவனத்தில் கொள்ள வேண்டியது அதிகமான வாகனங்களின் பயன்பாடு. பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு செல்ல கூட இன்று பைக் தேவைபடுகிறது. சைக்கிள் என்பது ஏதோ 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தான் என்றாகிவிட்டது.
2052ல் உலகில் உள்ள அத்தனை பெட்ரோல் வளங்களும் வறண்டுவிடும். அதற்குள் மாற்று வழி ஆற்றலை கண்டுபிடித்துவிடுவார்கள் தான். ஆனால் கவலை அதுவல்ல. அதீத பயன்பாட்டால் மிக வேகமாக பாழாகும் நம் சுற்றுச்சூழல் தான்.

முதலில் வரும் விமர்சனம் நான் ஒருவன் மட்டும் மாறினால் போதுமா? என்று தான் இருக்கும். 450கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த சிறு தூசிகள் இன்று பூமி, சூரியன், சந்திரன், மற்ற கிரகங்கள் எல்லாம். என்றோ பெய்த சிறுதூறல் தான் இன்றைய பெருங்கடல்கள்...


விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...