பார்க்காதே... பார்க்காதே
ஐயையோ பார்க்காத...
நீ பார்த்தா
பறக்குரேன்... பாத மறக்குறேன்...
பேச்ச குறைக்கிறேன்
சட்டென்னு தான்....
இந்த ஒரு பார்வையால தானே பாழாகுறேன்..
இந்த ஒரு பார்வையால தானே பாழாகுறேன்..
பார்வையால பாழாகுறது
இருக்கட்டும்... பார்க்கும் போது எப்படி நம் கண்களுக்கு வண்ணங்கள் தெரிகிறது?
ஒரு பொருள் இயற்க்கையாக
எப்படி வண்ணம் பெறுகிறது?
உண்மையில் வண்ணங்கள்
என்று எதுவும் உண்டா?
பதிலுக்காக கொஞ்சம்
அலைவோமா.....
சூரியனின் மையப்பகுதியில் தொடர்ந்து ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்களை உருவாக்குகின்றன. இவ்வாறு நடைபெறும் அணுக்கரு இணைவு நிகழ்வின் போது மிக அதிகமான ஆற்றல் வெப்பமாக வெளியிடப்படுகிறது. இரு அணுக்கள் இணையும் போது உருவாகும் மூன்றாவது அணுவின் எடை முதல் இரு அணுக்களின் எடைகளின் கூடுதலாக இருக்காது. உதாரணமாக ஒரு ஹீலியம் அணுவின் எடை 1கிராம் என்றால் உருவாகும் ஹைட்ரஜனின் எடை 2கிராமுக்கு குறைவாக இருக்கும். இதில் ஏற்படும் எடை இழப்பு ஐன்ஸ்டினின் E=mc2 என்ற சமன்பாட்டின் படி ஆற்றலாக மாற்றப்படும். தோராயமாக 0.3% எடையிழப்பு ஏற்படுவதாக அறியப்படுகிறது.
அது சரி.... எப்படி இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை இணைக்க முடியும்?
இரு அணுக்களை பிணைக்கும்
விசை(Driving
Force) எங்கிருந்து கிடைக்கிறது?அதுவும் முழுதும்
நேர்மின் அணு.(எலக்ட்ரான் இருப்பதில்லை) இரு நேர்மின் அணுக்களுக்கு இடையே உள்ள
விலக்குவிசை மீறி பிணைக்கும் விசை யாது?
சூரியன் மையப்பகுதியில் மட்டுமே அணுக்கரு இணைவு நடைபெறும். மையப்பகுதியில் ஈர்ப்புவிசை அதிகம் என்பதால் நேர்மின் அணுக்களை இணைக்கும் விசை தாராளமாக கிடைக்கிறது.
1) முதலில் இரு புரோட்டானகள் இணைந்து ஒரு டியூட்ரியம் அணு உண்டாகிறது.
2) அந்த டியூட்ரியம் அணு
ஒரு புரோட்டான் அணுவுடன் இணைந்து ஹீலியம்-3(ஐசோடோப்பு) மற்றும் காமா கதிர்களை
வெளியிடுகிறது.
3) பின் இரு ஹீலியம்-3
அணுக்கள் இணைந்து ஹீலியம்-4 அணு உருவாகிறது.
உண்மையில் ஹைட்ரஜன்
அணுக்கள் மட்டும் இணைவதில்லை. சூரியனில் 85% ஆற்றல் இவ்வகையில் தான் உருவாகிறது.
மீதமுள்ள 15% ஆற்றல்
கீழ்க்கண்ட வினையின் மூலம் கிடைக்கிறது.
1) ஒரு ஹீலியம்-3 அணுவும், ஒரு ஹீலியம்-4 அணுவும் இணைந்து பெரிலியம்-7 அணு உண்டாகிறது.
2) ஒரு பெரிலியம்-7 அணு
எலக்ட்ரானுடன் இணைந்து லித்தியம்-7 அணு உருவாகிறது.
3) லித்தியம்-7
புரோட்டானுடன் இணைந்து இரு ஹீலியம்-4 அணு உருவாகிறது.
இவ்வாறு வெளிப்படும்
வெப்ப ஆற்றல் மின் காந்த அலைகளாக அண்டத்தில் பரவுகிறது.
சூரியன் வெளியிடும் இந்த
மின்காந்த அலைவரிசையில் மூன்று அடுக்குகள் உள்ளன. ஒரு அடுக்கில் புலனாகும்
அலைகற்றை இருக்கும். இதில் ஏழு நிறங்கள் உள்ளன(அதாவது அலைநீளம் 390nm முதல் 700nm வரை). இந்த
அடுக்கிற்கு முன்னால் குறைந்த அலைநீளம் கொண்ட ரேடியோ அலைகள், மைக்ரோ அலைகள், அகச்சிவப்பு
அலைகள் உள்ளன. பின்னால் புறஊதா கதிர்கள், காமா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள் உள்ளன.
ஆனால் 50% புலனாகும் அலைகற்றையும், 40% ரேடியோ அலைகற்றையும், வெறும் 10%
புறஊதாகதிர்களும் அடங்கியுள்ளன(தப்பிச்சோம்)...
அலையும், வண்ணமும்:
ரொம்ப
அலைஞ்சிட்டிங்களா.... கொஞ்சம் கலர்புல்லா பார்ப்போமா??
அலைநீளம் 390nm முதல் 700nm வரை உள்ள மின்காந்த
அலைகள் பூமியை அடைந்து ஏதேனும் ஒரு பொருளின் மீது படும்பொழுது, எல்லா அலைநீள
கதிர்களையும் உட்கவர்ந்து(Adsorb) ஏதேனும் ஒரு அலைநீள
கதிரை மட்டும் எதிரொளிக்கிறது(Reflect).
இதனால் அப்பொருள்
எதிரொளிக்கப்பட்ட அலைநீளத்தின் வண்ணத்தில் தெரிகிறது. எல்லா அலைநீளத்தையும்
எதிரொளிக்கும் பொருள் வெள்ளை நிறத்திலும், எல்லா அலைநீளத்தையும் உட்கவரும் பொருள்
கருமை நிறத்திலும் காட்சியளிக்கும். ஆக இயற்க்கையில் எல்லா பொருட்களும்
கருப்பே(வண்ணமற்றவை)..ஆப்பிள் உண்மையில் சிவப்பு அல்ல... மரங்கள் உண்மயில் பச்சை
அல்ல.. நம் ஹீரோயின்கள் உண்மையில் இவ்வளவு நிறம் அல்ல..... ‘எல்லாம் மாயையே’
சூரியன், பொருளிலிருந்து
அடுத்ததாக கண்களுக்கு பயணத்தை தொடருவோம்.. எப்படி இந்த கால் இஞ்ச் கண்கள்
கலர்புல்லாக காண உதவுகிறது???
கண்கள்:
பல மில்லியன் குச்சி
செல்கள், கூம்பு செல்கள் நிறைந்தது நம் கண்கள்.
ஏற்கனவே ஒரு பொருள் ஒரு
அலைநீளத்தை மட்டும் தான் எதிரொளிக்கும் என பார்த்தோம் அல்லவா.. அந்த அலைநீள ஒளி
மட்டும் நம் கண்ணின் விளித்திரையை அடையும்.
குச்சி, கூம்பு
செலகளில் S, M, L என பல வகைகள் உள்ளன. மஞ்சள் அல்லது பச்சை நிற ஒளி விழுன் பொழுது L, M வகை கூம்பு செலகள் அதிகமாகவும், S கூம்பு செல்கள் மிக் குறைவாகவும் தூண்டப்படுகிறது,
சிகப்பு நிற ஒளி L வகை கூம்பு செல்களை அதிகமாகவும், M, sS வகை கூம்பு
செல்களை குறைவாகவும் தூண்டுகிறது.
அனைத்து கூம்பு, குச்சி
செல்களும் புரதம்(ஸ்காட்டாப்சின்) மற்றும் வைட்டமின்-ஏ னால் ஆனது. ஒளியானது இந்த
செல்களில் விழும்பொழுது வேதிவினை நடைபெறுகிறது(ஏனென்றால் ஒளி தன்னுள் ஆற்றலை
கொண்டுள்ளது. அந்த ஆற்றலால் வேதிவினை நடைபெறுகிறது).
வேதிவினையில் உருவாகும்
மெடரோடாப்சின்-2 மின்காந்த தூண்டலை ஏற்படுத்துகிறது(ஆக்ஸிஜன் ஒடுக்க வினையினால்). இது
பார்வை நரம்பின் மூலம் மூளைக்கு கடத்தப்படுகிறது. இந்த பார்வை நரம்பு மூளையின்
பின்புறம் ஆக்ஸிபட்டல் என்ற பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும்.
கண், காது, மூக்கு, தோல்
என அனைத்து உணர் உறுப்புகள் மூலம் பெறப்படும் செய்திகள் மூளைக்கு மின்காந்த
தூண்டலாகவே அனுப்பபடுகிறது. மூளை இதை எப்படி உணருகிறது???
அடுத்த பகுதியில்.....