வியாழன், ஜூலை 11, 2013

டாலரும்.... ரூபாயும்



1 US $=59.78 indian rupee (11/07/13 3:54pm, அதாவது இத கட்டுரை எழுத ஆரம்பிக்கும்பொழுது)


இடம்: டீக்கடை
எவனோ: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 ஆக உயர்ந்தது.(செய்திதாளில் வாசிக்கிறார்)
யாரோ: அட... அடுத்த பக்கம் திருப்புங்க அண்ணே. விளையாட்டுச் செய்தி பார்போம். நேத்து யாரு மேட்ச் வின் பண்ணிருக்காங்கனு பார்போம். 61 ஆன என்ன 91ஆனா நமக்கு என்ன!!
எவனோ: அட.. உன்னோட பர்ஸ்ஸ பாதிக்கிற விஷயம்பா இது. அதவிட அந்த மேட்ச் தான் உனக்கு முக்கியமாப்பா.
யாரோ: அண்ணே.. என் கையில(கழுத்துலயும்) எந்த டாலரும் இல்ல. நான் வெளிநாட்டுல எந்த பிசினஸ்ம் பண்ண்ல. வேலையும் செய்யல. பங்குசந்தைல எனக்கு எந்த பங்கும் இல்ல. அப்பறம் எதுக்கு அண்ணே நா(ன்) இத பத்தி கவலைபடனும்.
எவனோ: நீ டெய்லி செலவு பண்றேல அதுவே போதும்.. இது உன்ன பாதிக்க.
யாரோ: நான் டாலர்ல செலவலிக்கல. இந்திய ரூபாயில தான் பொருள் வாங்குறேன். அப்பறம் எப்படி இந்த டாலருக்கு நிகரான இந்திய ருபாயின் மதிப்பு என்னை பாதிக்கும்.
எவனோ: (செய்திதாளை பெஞ்ச் மேல வச்சித்து) இந்தியாவோட மக்கள் தொகை எவ்வளவு?
யாரோ: கணக்கு எடுத்தப்ப 128கோடி.(இப்போ எவ்வளவோ!!!!!)
எவனோ: இந்த 128 கோடி பேருக்கு தேவையான அன்றாட நுகர்பொருட்கள் முழுக்க முழுக்க நாமலே உற்ப்பத்தி செய்றதில்ல. தேயிலை, சர்க்கரல இருந்து தங்கம், வெள்ளி என எல்லாமே இறக்குமதி செய்றோம்.(அரிசி கூட) இப்படி மத்த நாட்ல இருந்து வாங்குற(இறக்குமதி செய்ற) பணம் டாலராதான் கொடுக்குறாங்க. (கிட்டதட்ட எல்லா நாடுகளும் பிற நாடுகளுடனான வர்த்தகத்தில் டாலரை தான் பயன்படுத்துகின்றன)
இப்போ இந்தியா(இறக்குமதியாளர்கள்) ஒரு பொருள 5 டாலர்க்கு வாங்குறதுக்கு ஒப்ப்ந்தம் பண்ணிருக்காங்கனு வச்சிகுவோம். டாலர் 50ரூபானு இருந்தப்ப (5*50) 250ரூபாய் குடுத்து வாங்குவோம்.
இப்ப 60ரூபா ஆன பிறகு அதே பொருள (5*60) 300ரூபா குடுத்து வாங்கனும். இப்போ இந்த 50ரூபா நஷ்டத்த இந்த வாங்குற நுகர்வோர்(நாமலே தான்) தலைல தான் கட்டுவாங்க.
இதுல முக்கியமா ஏறுறது பெட்ரோல் விலை தான்(கச்சா எண்ணெய் வில ஏறலைனாலும்)
தங்கம் விலை உயரும்(நேத்து ரொம்ப நாள் கழித்து 16 ரூபா கூடிருக்கு)
சில இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் கடன் வாங்கிருக்காங்க(அங்கே வட்டி ரொம்ப ரொம்ப கம்மியாம்). மாத வட்டி 2லட்சம் டாலர்னு வச்சிகுவோம். அப்போ 50ரூபாய இருந்தப்ப(50*200000) விட இப்போ(60*200000) வட்டி அதிகமா வரும். வட்டி மட்டுமில்ல. அசல் கூட அதிகமா வரும். உதாரணமா 2011ல வாங்குன 50கோடி டாலர் கடன்(50கோடி*50) இன்று (50கோடி*60) இந்த அதிகமான அசலுக்கு வேற வட்டி கூடும். இந்த நஷ்டத்த நுகர்வோர்(நாமலே தான்) தலைல தான் கட்டுவாங்க இந்த கம்பேனிக.

நம்ம நாட்டோட பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பது தான் இந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சி. அதாவது நம்ம ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது தான் இந்த 50லிருந்து 60க்குச் சென்றது. (முத 50ரூபா போதும் ஒரு டாலர் வாங்க. இப்போ 60ரூபா கொடுக்கனும்)
யாரோ: ம்ம்ம்... அப்போ இந்த 50, 60து யாரு பிக்ஸ் பண்றது அண்ணே.
எவனோ: உலக சந்தை தான். ஆனா சீனாக்கு மட்டும் அந்த நாட்டு ரிசர்வ் வங்கி.
யாரோ: ம்ம்ம்ம்ம்...
1 US $=59.55 indian rupee (11/07/13 4:45pm, அதாவது இத கட்டுரை எழுதி முடிக்கும் பொழுது)

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...