சனி, அக்டோபர் 26, 2013

எல்லாம் நேரம்



செல்போனில் நேரம் மாற்றும் அமைப்பில்(Time Settings) Daylight Saving Time(DST) என்ற விருப்பம் இருக்கும். அதை இயக்கியபின் நேரத்தை பார்த்தீர்களானால் உங்கள் செல்பேசியின் நேரம் ஒரு மணி குறைவாக காட்டும். இதையே மார்ச் மாதத்திற்குப்பின் செய்து பார்த்தீர்களானால் நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அதாவது அக்-மார்ச் வரை ஒரு மணிநேரம் குறையும். மார்ச்-அக் மாற்றமேதும் இருக்காது.

ஏன் இந்த மாற்றம்?
குளிர்காலத்தில் மாலைநேரங்களில் மிக விரைவாக இருள் வந்துவிடும். அதே போல் கோடை காலத்தில் மிக நீண்ட நேரம் கதிரவனின் கதிர்கள் பூமியை ஆக்கிரமிக்கும். இருட்டும் வரை தான் வேலை நேரம் என்ற எண்ணம் பரவலாக உலகில் எல்லா பகுதி மக்களிடமும் உள்ளது. இன்றைய கார்ப்பரேட் உலகில் 10 முதல் 6 வரை என வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டாலும் இன்றும் பலருக்கு சூரியன் மறையும் நேரமே வேலை முடியும் நேரமாக உள்ளது.

உதாரணமாக 10 முதல் 6 வரை வேலை நேரம் என கொள்வோம். குள்ர்காலத்தில் 5மணிக்கெல்லாம் இருள் சூழ ஆரம்பித்துவிடும். இருளை கண்டவுடன் மக்களுக்கு வேலையில் கவனம் குறையும். எப்போது கிளப்புவோம் என்ற எண்ணம் தோன்றும். மேலும் அவர்கள் வேலை செய்ய வெளிச்சம் மற்றும் அதற்க்கு மின்சாரம் தேவை.

இதே கோடைகாலத்தில் 6மணிவரை நல்ல வெளிச்சம் இருக்கும். மக்கள் எந்த மனச்சலனமும் இல்லாமல் வேலை செய்துகொண்டிருப்பர். விரைவாக விளக்குகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
குளிர்காலத்தில்(அக்-மார்) ஒரு மணிநேரம் முன்னதாக வைப்பதால் மக்கள் விரைவாக துயிலெழுந்து விரைவாக வேலைய முடிப்பர். அதாவது கடிகாரம் 6PM என காட்டும். ஆனால் மணி 5PM தான் இருக்கும். சூரிய வெளிச்சத்திலேயே வேலையை முடித்தாயிற்று. மக்களும் மனதளவில் எந்த உளைச்சலும் இல்லாமல் இருப்பர்.

நடைமுறைச்சிக்கல்:
இதை நடைமுறைப்படுத்தும் போது முன்பு திட்டமிடப்பட்ட சந்திப்பு, பயணங்கள், நிகழ்ச்சி போன்றவை சிரமங்களை சந்திக்கலாம். 2007ல் நடத்தப்பட்ட ஒரு சர்வேயின் படி வெறும் 0.7% மின்சாரமே இதன் மூலம் சேமிக்கப்படுகிறதாம். ஆனால் மேலே சொன்ன சிரமங்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதைவிட அதிகம். அனலாக் கடிகாரங்களில் நாமாக தான் மாற்றியமைக்க வேண்டும். ஆனால் டிஜிட்டல் & கணினி கடிகாரங்களில் புரோகிராம் தானாக மாற்றியமைத்துக் கொள்ளும். இது சில நேரங்களில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது.



எப்பொழுது?
27/10/13(நாளை) அதிகாலை 3 மணிக்கு எல்லோரும் தங்கள் கடிகாரத்தை 2 மணியாக மாற்றிக்கொள்வார்கள்.(டிஜிட்டலில் அதுவாகவே மறிவிடும். (DST ஆன் செய்யப்பெற்றிருந்தால்) மீண்டும் 31/03/14ல் தங்கள் கடிகார நேரத்தை ஒரு மணிநேரம் பின்னோக்கி அமைத்துக்கொள்வார்கள். இதை ஐரோப்பியர்கள் மட்டுமே செய்வார்கள். அமெரிக்கர்கள்(வட அமெரிக்கர்கள் மட்டும்) 2மணியிலிருந்து 1 மணியாக குறைத்துகொள்வார்கள். 31/03/14ல் மீண்டும் பழைய நேரத்திற்கு திரும்புவார்கள். நமக்கு இந்த இரண்டுமே இல்லை.


விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...