செவ்வாய், ஜூலை 15, 2014

முழுமூச்சாய் இறுதிமூச்சு வரை



ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால்
அழகு தான்... அதிசயம் தான்...
ஆனால்
30000 பள்ளிகளை கட்டிய இவரைக் கண்டால்
அதிசயித்து தான் பார்ப்பான் அவனும்...

வெறும் சட்டை மட்டும் தான் துறந்தார் காந்தி...
குடும்பத்தையே சட்டைசெய்யாமல் துறந்தாஎ இவர்...

நாட்டை துறந்து காட்டுக்கு சென்றார் புத்தர்...
வீட்டை துறந்து நாட்டுக்கு வந்தார் இவர்...

சற்றே திகைத்து தான் போயிருப்பார்
அந்த கடவுளும்...
இரண்டு கோடி பேருக்கு
இவ்வளவு நன்மை செய்யனுமா???
என்னால் முடியாது என்று
பின்னால் போயிருப்பார் அவர்...
முடியும் என்று முன்னால் வந்தார் இவர்..
முழுமூச்சாய்
இறுதிமூச்சு வரை முயன்றார்...

வெள்ளை சட்டைக்குள் கருப்பு உடல்
கருப்பு உடலுக்குள் வெள்ளை மனம்...
அப்பழுக்கற்ற மனம்...
கரைபடியாத கைகள்..

உலகில் ஒவ்வொரு தினமும் ஒரு பக்கம்
ஒவ்வொரு நாளும் படித்து கொண்டிருந்தார்...
உலகம் ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருந்தது
அவர் வரலாற்றை....

சுத்தமாக படிக்காதவர் தான்...
பொறாமை ப(பு)டிக்காதவர்...
பேராசை ப(பு)டிக்காதவர்...
சுயநலம் ப(பு)டிக்காதவர்...
வன்சொல் ப(பு)டிக்காதவர்...
அதிகாரம் ப(பு)டிக்காதவர்...
பதவியாசை ப(பு)டிக்காதவர்...

ஏழைகளை அணைக்கத் தெரிந்தவர்
எளிமையாய் நடக்க தெரிந்தவர்
இந்த இரண்டும் மட்டுமே தெரிந்தவர்...

ஆட்சியில் சேர்த்த சொத்துக்கள் ஏராளம்
10க்கும் மேற்பட்ட அணைகள்...
100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்...
200 கல்லூரிகள்....
500 நூலகங்கள்...
30000 பள்ளிகள்...
மின் உற்பத்தி நிலையங்கள்....

சோஷியலிசம் பற்றி பேசி ரஷ்யாவில்
கைத்தட்டல் வாங்கினார் முதல் வாரம்....
சேற்றில் கால் வைத்து விவசாயி தோளில்
கைபோட்டு அன்பாக பேசினார் அடுத்த வாரம்...

ஆட்சிக்காக கட்சியில் சேர்பவர்கள் மத்தியில்
கட்சிக்காக ஆட்சியிலிருந்து விளகியவர்...

எதிர்கட்சியினரை பந்தாடும் ஆளுங்கட்சியின் மத்தியில்
எதிர்க்கட்சியினருக்கும் அமைச்சர் பதவி தந்தவர்....

கொஞ்சம் கோபக்காரர் தான்...
கொஞ்சம் நேரத்தில் மறையும் கோபம் தான்...

ஒரே ஒரு காமராசர்
தமிழ்நாடு
தொழிற்துறையில் 2ம் இடம்
கல்வியில் 4ம் இடம்
மின் உற்பத்தியில் 1ம் இடம்
விவசாய வளர்ச்சியில் 3ம் இடம்..
இன்று எத்தனையோ பேர்
அதை அழித்துக் கொண்டிருக்கின்றனர்..
அசைக்க கூட முடியாது
அவர் இட்ட அடித்தளத்தை...





விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...