ஞாயிறு, ஜூலை 20, 2014

உயிரே... உயிலே...



இம் மெய்யில்
இறைவன் எழுதிய உயிர் எழுத்து...
இரு சுருளில்
எனக்காக எழுதிய உயில் எழுத்து...
அம்மா போல் நிறம்
அப்பா போல் மூக்கு
தாத்தா போல் கோபம்
பாட்டி போல் அறிவு...
என என் பயோடேட்டாவில்
பாதியை அச்சடித்த அமிலம்...
இறக்க போகும் தந்தை எழுதும் உயில் அல்ல இது...
பிறக்க போகும் குழந்தைக்கு எழுதப்படும் உயில் இது...
DNA



எத்தனை முகங்கள், எத்தனை நிறங்கள், எத்தனை குணங்கள்...
எப்படி இவ்வளவு வித்தியாசங்கள்??? இந்த சிறு உடலில்...
ஒரே ஒரு இரு சுருள் டி.என்.ஏ தான் இது எல்லாற்றிற்க்கும் காரணம் என்னும் போது முற்றுப்புள்ளி இடமுடியாத ஆச்சர்யகுறியாய் தான் உள்ளது.
வெறும் 4 எழுத்துக்கள்(நியுக்ளியோடைடு) கொண்டு இவ்வளவு பில்லியன் கவிதைகள்(மக்கள்) எழுதியுள்ளான் அவன்!!!

அடினைன்(A)
சைட்டோசின்(
C)
குவானைன்(G)
தையமின்(T)

இந்த நான்கெழுத்து கவிதை தான் நான் அனைவரும்.
ஒவ்வொரு நியூக்ளியோடைடும் ஒரு முனையில் பாஸ்பேட்டையும், மறுமுனையில் சுகரையும் கொண்டிருக்கும்.
இரு நியூக்ளியோடைடுகள் இணையும் போது சுகர், பாஸ்பேட்டுடனும் : பாஸ்பேட் சுகருடனும் இணைகிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக இந்த நான்கு நியுக்ளியோடைடுகள் மாறி மாறி இணைவாதல் பலவித அமைப்புகள்(Pattern) தோன்றுகின்றன.

(இடையில் ஜீன், குரோமோசோம் போன்ற வார்த்தைகள் உங்களை இடைமறித்திருக்கலாம். குரோமோசோமின் ஒரு சிறு துண்டு ஜீன், டி.என்.ஏவின் ஒரு சிறு துண்டு குரோமோசோம்)

முக மற்றும் உடல் அமைப்பை புரதங்கள் தான் உருவாக்குகிறது.இந்த புரதங்கள் உருவாகுவதை டி.என்.ஏ தான் தீர்மானிக்கிறது. இந்த டி.என்.ஏ அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு புதிய தலைமுறையிலும் அந்த பண்புகள் அந்த டி.என்.ஏவால் தொடரப்படுகின்றன.


எவ்வாறு கடத்தப்படுகிறது?
‘மியோசிஸ் எனப்படும் நிகழ்ச்சி மூலம் நம் உடலில் உள்ள அனைத்து அசல் டி.என்.ஏக்களும் நகலெடுக்கப்படுகின்றன. இந்த நகல் இனப்பெருக்க செல்லை அடைந்து அடுத்த தலைமுறைக்கு கடப்படுகின்றன.
ஆக புரோட்டினை உருவாக்குவது மட்டுந்தான் டி.என்.ஏவின் வேலை.

புரோட்டினின் வகைகள்:
1) கட்டமைப்பு புரோட்டின் : மூளை முதல் நகம் வரை உருவாக்குவது இதன் பணி
2) கடத்தும் புரோட்டின் : உடலின் பல பகுதிகளுக்கு தேவையான பொருட்களை கடத்துகிறது(எ.கா: ஹிமோகுளோபின்)
3) சேமிப்பு புரோட்டின் : ஆற்றல் மற்றும் உயிர்சத்துக்களை சேமிக்க (எ.கா கல்லீரல்)
4) ஹார்மோன் : நம் உடலில் அனைத்து ஹார்மோங்களும் ஒரு வகையில் புரோட்டிங்களே.

டி.என்.ஏ நான்கு எழுத்து என்பது போல, புரதம் 20 எழுத்துக்கள்(அமினோ அமிலங்கள்).
இந்த 20 அமினோஅமிலங்கள் பல்வேறு முறைகளில் இணைந்து மேற்கண்ட புரோட்டின்களை உருவாக்குகிறது.
புரோட்டினை உருவாக்க பிறப்பிக்கபடும் ஆணையில் டி.என்.ஏவின் ஏதேனும் 3 நீயுக்ளியோடைடுகள் தான் இருக்கும்( ACG, ACT, TTG….) எனவே 4*4*4 என 64 வகையான ஆணைகளை பிறப்பிக்க முடியும்.

ஒரு புரோட்டின் உருவாக்க இது போல்100 முதல் 1000 ஆணைகள் வரை தேவைப்படும். இவ்வாறு 3 எழுத்து ஆணைகள் பல்வேறு வரிசைகளில் அடுக்கப்படும் போது (1000 * 1000 * 1000)^64 வகையான புரதங்கள் உருவாகின்றன.


உங்கள் டி.என்.ஏவிலும் சில நல்ல விஷயங்களை இணைத்துக் கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைக்கு அது அப்படியே கடத்தப்படலாம்...









விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...