புதன், செப்டம்பர் 25, 2013

வீக்கமும் விளக்கமும்...



“எல்லாரும் நாளைக்கு கட்டுரை நோட்டு கொண்டுவந்துருங்க. ‘நான் முதல்வரானால் தலைப்பில நாம ஒரு கட்டுரை எழுதனும். சரியா?

“சரி ஐயா

ராஜன் தான் கரும்பலகையில் கட்டுரையை எழுதி போடுவான், தமிழ் ஐயா கொடுக்கும் நோட்டைப் பார்த்து. அதை பார்த்து நாங்கள் எங்கள் நோட்டில் எழுதிக் கொள்வோம்.

முதல் மதிப்பெண் பெறும் ராஜன் தான் இந்த முதல்வர் பொறுப்பையும் தமிழ் ஐயாவிடமிருந்து ஏற்க்கப் போகிறான் என்பதால், பொறுப்பாய் கட்டுரை நோட்டை மட்டும் எடுத்துச் சென்றோம் அடுத்த நாள் பள்ளிக்கு.
ராஜன் எழுத எழுத நாங்களும் எழுதி கொண்டிருந்தோம்.


நடுவில் ஒரு வரி ‘வறுமையை ஒழிக்க நிறைய திட்டங்கள் வகுக்கப்படும்
நான் ஏதோ தவறு இருப்பதாய் நினைத்து ‘வறுமையை ஒழிக்க நிறைய பணங்கள் அச்சிடப்படும் என திருத்தி எழுதிக் கொண்டேன்.

அதன் பின்விளைவு(Feedback) அடுத்த நாள் தெரிந்தது. கட்டுரையை திருத்திய தமிழ் ஐயா நான் திருத்திய வரிகளை கண்டு கொஞ்சம் அதிகமாகவே கொந்தளித்துவிட்டார். திருத்திய என் கைகளுக்கு தமிழ் ஐயாவின் பிரம்பு தான் பதில் சொல்லியது.

அதன் பின்விளைவு(Again Feedback) அதற்க்கு அடுத்த நாள் தான் தெரிந்தது. கைகளில் நல்ல வீக்கம்.

என் 5ம் வகுப்பு ‘ஆ பிரிவின் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பக்கத்து வகுப்பு மாணவர்களுக்கும் விளக்கி கொண்டிருந்தேன் வீக்கத்திற்க்கான் விளக்கத்தை அடுத்த சில நாட்கள்.

பணவீக்கம் என்று செய்தித்தாள்களில் படிக்கும் போதெல்லாம் வந்து செல்லும் அந்த வீக்கம்.. நினைவுகளில்(கைகளில் அல்ல)
இப்போது புரிகிறது. இரண்டு வீக்கமும் கிட்டதட்ட ஒன்று தான் என்று. உண்மையில் எங்கள் தமிழ் ஐயா எனக்கு அன்று பதில் தான் அளித்துள்ளார்.

எப்படி என்று பார்ப்போம். முதலில் பணவீக்கம் என்றால் என்ன?
அதற்கு முன்னால் ‘வீக்கம் என்றால் என்ன?

நம் உடம்பில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பகுதி(Ex.எனக்கு கை) இயல்புக்கு மாறாய் அளவில் பெரிதானால் அதற்கு ‘வீக்கம் என்று பெயர்.

நான் திருத்தி எழுத்திய தீர்ப்பின் படி இஷ்டத்திற்க்கு பணத்தை அச்சு அடித்தால் பணமும் வீக்கமடையும்.. ஆம்

எல்லோருக்கும் பணம் தாராளமாக கிடைக்கும். கடின உழைப்பு இல்லாமல். நாட்டின் உற்பத்தி பாதிப்படையும். எழை மக்கள் முடிந்த வரை தங்கள் கடனை அடைப்பார்கள். வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பார்ப்பார்கள்.

ஆனால் பணக்காரர்கள் தங்களுக்கு ஏற்கனவே எல்லாம் இருப்பதால் கூடுதலாக கிடைத்த பணத்தை அளவில்லாமல் செலவு செய்வார்கள்.
ஏற்கனவே உற்பத்தி குறைவு மற்றும் அனைவரிடமும் தாராள பண புழக்கத்தால் வணிகர்கள் விலையை பன்மடங்காக உயர்த்துவர். அதனால் பணத்தின் மதிப்பு குறையும்.

பணத்தின் மதிப்பு எப்படி குறையும்னு யோசிக்கிரிங்களா....
முதல ரூ.3 க்கு வாங்குன ‘அதே வடைய ரூ.5 குடுத்து வாங்கவோம்.
அதே வடை தான். ஆனா அதுக்கு 3ரூபா பத்தாது..இன்னும் 2ரூபா குடுத்தா தான்..இல்ல ‘வட போச்சே’ தான்.


இப்போ பணத்தோட மதிப்பும் குறைச்சிருச்சு.. அதுனால இன்னும் அதிகமா பணம் அச்சிடனும். இதன் பணவீக்கம்..
நான் எழுதியதுனால் ‘கைவீக்கம்
அதை நடைமுறை படுத்தினால் ‘பணவீக்கம்

இதே நான் ஜிம்க்கு போயி வீக்கம்(SIX PACK) வந்துச்சுனா அப்போ வீக்கம் நல்லது.
இதே மாதிரி எல்லா மக்களும் நல்லா உழைத்து பணம் ஈட்டினால் அதன் பெயர் ‘வீக்கம் அல்ல... வளர்ச்சி..
வளர்ச்சி நல்லது......

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...