‘காந்தியா.. யார் அவர்?’
சத்தியமா இந்த கேள்விய
120கோடில பாதி பேர் கேட்டிருப்பாங்க...ஒருவேளை பணத்தில் காந்தியின் உருவம்
அச்சிடப்படாமால் இருந்திருந்தால்...
இல்ல இன்னும் சில
வருடங்களில் தேர்வுகளில் இந்த மாதிரி கேள்வி கூட கேட்கலாம்....’நம் ரூபாய் நோட்டில் இருக்கும் உருவம் யாருடையது?’
இதற்க்கும் பாதிக்கும்
மேலானோர் பதில் தெரியாமால் முழிக்கலாம்.
ஆக பணத்தின் மதிப்பு தான்
காந்தியின் மதிப்பை இன்னும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பணத்தின் மதிப்பை விட காந்தியின்
மதிப்பு குறைந்து கொண்டுவருகிறது கடந்த சில வருடங்களாக..
‘காந்தியின் அகிம்சையினால்
தான் நாம் சுதந்திரம் பெற பல காலம் ஆனது. ஆங்கிலேயரை எதிர்த்து சண்டையிட்டு இருந்தால்
1947க்கு முன்னரே விடுதலையை வாங்கியிருக்கலாம்’
‘ஆங்கிலேயர் காந்தியின் போரட்டத்திற்க்கு
பயந்து விடுதலை தரவில்லை. இதற்க்கும் மேலும் இந்தியாவை ஆள அவர்கள் விரும்பாமல் தான்
சுதந்திரம் அளித்தார்கள்’
‘காந்தியின் தனிமனித போரட்டத்திற்கு
கிடைத்த சுதந்திரம் அல்ல இது. எத்தனையோ தலைவர்கள் செய்த தியாகத்தின் பயன் தான் நம்
சுதந்திரம். காந்தியை மட்டும் தேசப்பிதா என்பது தவறு’
‘நாம் அடிமை பட்டிருக்கிறோம்.. நமக்கு விடுதலை தேவை’ என்பதை தெரியாமலே
தான் இருந்தனர் நம் மக்கள்.
மக்களை ஒருக்கிணைக்க, விழிக்கச் செய்ய எந்த அமைப்போ, தலைவர்களோ இல்லை சுமார்
150 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியில்.
1857ல் முதல் இந்திய சுதந்திர போர் என்று பாட புத்தகத்தில் படித்த நியாபகம். ஆனால்
அது சுதந்திர போரே அல்ல என்பது வரலாற்று அறிஞர்களின் வாதம். ஆம், அதில்
சுதந்திரம் என்ற குறிக்கோள் இல்லை. கொழுப்பு தடவிய தோட்டாவை உபயோக்க மறுத்து சிப்பாய்களும்,
துணைப்படை திட்டத்தின் கீழ் தன் நாட்டை இழந்த ஜான்சி ராணியும், தன் ஓய்வூதியம் வராததால்
வங்காள ஆட்சியாளரும் அவர்கள் பகுதிகளில் கிளச்சியில் ஈடுபட்டனர். ஆக ஆங்கிலேய
ஆட்சியை எதிர்த்து நடக்கவில்லை இந்த போர்(கிளர்ச்சி)..
1885ல் முதன்முதலில் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ்.
ஆரம்பித்தவர் ஒரு ஆங்கிலேய அதிகாரி. அதன் பின் இந்தியர்கள் அதில் முக்கிய
பொறுப்புகளை பெற்றனர்.
‘உயர் சாதி’ மாணவர்கள் ஆங்கில அரசில் பணிபுரிய, கல்லூரியில் சேர பரிந்துரை
கடிதம் வழங்குவது போன்ற வேலைகளை மட்டும் செய்துவந்தது.
சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு காங்கிரஸ் என்ற அமைப்பு இருப்பதே தெரியாது. காங்கிரஸில்
இருந்த அனைவரும் படித்த உயர்குடி இந்தியர்கள். ஆங்கில அரசிடமிருந்து உயர்குடி
மக்களுக்கு பல சலுகைகளை வாங்கிதந்தனர், ஏழை எளிய மக்களை பற்றி எந்த கவலையும்
படவில்லை.
1916ல் இந்தியா திரும்புகிறார் காந்தி. அவரும் படித்தவர் என்பதால் காங்கிரஸ்
பற்றி தெரிந்து கொள்கிறார். உறுப்பினர் ஆகிறார். பின் காங்கிரஸின் தலைவராகிறார்.
·
காங்கிரசில் சேர உறுப்பினர் கட்டணத்தை குறைக்கிறார்
·
மும்பையில் செயல்பட்டது காங்கிரஸ்.. நாட்டின் மூலை முடுக்கெல்லாம்
அலுவலகம் திறந்தார் காந்தி.
·
அனைத்து சாதி, மதத்தவரும் சேரலாம் என்றவிதியை
கொண்டுவந்தார்.
·
காங்கிரஸ் கூட்டம் எந்த பகுதியில் நடக்கின்றதோ, அப்பகுதி
மொழியில் தான் கூட்டம் நடைபெற வேண்டும் என அறிவித்தார்.(அதற்கு முன் ஹிந்தி தான்
இந்தியா முழுவதும்)
·
காங்கிரஸின் அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் மூலமே ஆட்கள்
தேர்ந்தேடுக்க ஆவன் செய்தார்.(அதற்கு முன் நியமித்தல் முறை தான்).
காந்தியின் இந்த நடவடிக்கைகள் தான் இந்திய மக்களை ஒரு
குடையின் கீழ் கொண்டுவந்தது. அனைத்து வேறுபாடுகளையும் மறந்து மக்கள் ஒற்றுமையாய் இயங்கினர்.
காங்கிரஸை சுதந்திரத்திற்க்காக மட்டும் பயன்படுத்தவில்லை
காந்தி.
1920ல் சுமார் 1000காங்கிரஸ் உறுப்பினர்களை(இளைஞகர்கள்) இந்தியா
முழுவதும் அனுப்பினார். முக்கியமாக கிராமபுறங்களுக்கு.
கீழ்கண்டவைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த.
·
தீண்டாமை & சாதி ஒழிப்பு
·
குடிப்பழக்கத்தின் தீமை
·
சுகாதாரத்தின் முக்கியத்துவம்
·
பெண்கள் முன்னேற்றம் & பெண் கல்வி
·
ஏழ்மை ஒழிப்பு
இவ்வாறு மக்களை முன்னேற்றி, ஆங்கிலேயர் முன்னால் நிறுத்தியவர் தான் காந்தி.
காந்தி வாங்கி தந்தது இரண்டு சுதந்திரம்.
1) ஆங்கிலேயரிடமிருந்து
2) அறியாமையிலிருந்து