விமானம் புறப்பட
தயாராயிருந்தது.
கைபேசியை அனைத்து
வைக்கும்மாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
இன்னும் சில நொடிகளில்
தரைக்கு விடை கொடுத்து, வானில் பறக்கும் முனைப்புடன் இருந்தது.
நொடி நெருங்கியதும் பயணம்
இனிதே தொடங்கியது.
சிலருக்கு பிரயாணம்.
பலருக்கு பிரமிப்பு..
சில நிமிடங்கள் வரை
எல்லாம் சரியாக தான் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு சமவெளி
பகுதியில் தரை மோதி வெடித்தது...
பயணித்த 156ல் 155 பேர்
பலி. விமானி உட்பட.
பிழைத்தது ஒரே ஒரு உயிர்.
மிருகக்காட்சி சாலைக்கு அழைக்கப்பட்டு சென்ற குரங்கு தான் அது.
விசாரணை அதிகாரிகள்
விபத்து நடந்த பகுதியில் இருந்த இந்த குரங்கை கைப்பற்றினர்.
அதிகாரி1 : கருப்பு
பெட்டியும் கிடைக்கல. உயிரோட யாரும் இல்ல. எப்படி விபத்துக்கான் காரணத்த
கண்டுபிடிக்க.
குரங்கு: உயிரோட தான்
நான் இருக்கேன்ல.
அதிகாரி2 : ஐயா, குரங்கு
பேசுது
அதிகாரி1: அட ஆமாயா..
பேசாம(பேசி தான்) இது கிட்டயே விசாரிக்கலாம் போல.
அதிகாரி2: நமக்கு வேற வழி
இல்ல.
அ1: விமானம் கிளம்பும்
போது பயணிகள் என்ன பண்ணுனாங்க
கு: சீட் பெல்ட்
போட்டுகிட்டு இருந்தாங்க
அ1: விமான பணிப்பெண்?
கு: எல்லாருக்கும்
குட்மார்னிங்க் சொல்லிகிட்டு இருந்தாங்க
அ2: அப்போ விமானி?
கு: புறப்பட
எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டிருந்தனர்.
அ1: நீ?
கு: எல்லாறையும்
பார்த்துக்கிட்டு இருந்தேன்.
அ1: விமானம் புறப்பட்ட
பின் 30 நிமிடம் கழித்து பயணிகள் என்ன பண்ணுனாங்க?
கு: பாதி பேர்
தூங்கிட்டாங்க. மீதி பேர் படிச்சுக்கிட்டு இருந்தாங்க
அ2: விமானபணிப்பெண்?
கு : மேக் அப்
போட்டுகிட்டு இருந்தாங்க.
அ1: விமானி?
கு: விமானத்தை இயக்கி
கொண்டிருந்தார்.
அ1 : நீ?
கு: இப்பவும்
பார்த்துகிட்டுதான் இருந்தேன்..
அ1: விபத்து நடப்பதற்க்கு
சற்று முன்னால், பயணிகள் என்ன பண்ணுனாங்க.. யாரும் கைல துப்பாக்கி
வச்சிருந்தாங்கலா?
கு: யாரு கையிலயும்
துப்பாக்கிலாம் இல்ல. அப்போ எல்லாரும் தூங்கிக்கிட்டு இருந்தாங்க.
அ2: விமான பணிப்பெண்?
கு: மேக் அப் போட்ட பின்
எடுத்த போட்டவ பேஸ்புக்-ல அப்லோட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.
அ1 : விமானி?
கு: அந்த போட்டோவுக்கு
கமெண்ட் பண்ணிகிட்டு இருந்தார்.
அ1: நீ?
கு: விமானத்த இயக்கி
கொண்டு இருந்தேன்...........