சீடர்களே...
உங்கள் அனைவரையும்
ஸ்ரீஸ்ரீ உதயானந்தாவின் ulaஅகில உலக தியான மையத்திற்கு வரவேற்கிறேன்.
இன்று நாம் பார்க்கப் போவது
ஒரு எளிய பயிற்சி..
முதலில் பார்ப்பதற்க்கு பவர்
ஸ்டார் போல சப்பையாக இருந்தாலும்
பள்ளிகூட வாத்தியார் போல
உங்கள் முட்டியை கழற்றிவிடும்.
‘உங்கள் வயது என்ன’ என்று கேட்டால் ‘பாஸ்’ என்று அடுத்த கேள்விக்கு செல்லும் நடிகையின் வயதக் கூட
இந்த பயிற்சி மூலம் கண்டுபிடிக்கலாம்.
பாஸ்(கரன்) மாதிரி அரியர்ஸ்
எழுதிக் கொண்டே இருக்கும் பாய்ஸ் கூட இதை செய்தால் பாஸ் பண்ணலாம்.
சர்க்கரை நோய்
உள்ளவர்களுக்கு இது ஒரு இனிப்பான பயிற்சி. ஆம்.. ஒரு நாளைக்கு ஒரு நிமிடம்
செய்தால் போதும்.
இனி ஆரம்பிப்போமா...
சீடர்களே..
அனைவரும் உங்கள் கண்களை
மூட ஆழ்ந்த தியானத்திற்கு செல்லவும்...(ஹாலோ இப்ப இல்ல.. இத முழுசா படித்த பின்)
அப்படியே கண்னை மூடிய
படியே எழுந்து நிற்க்கவும்..
அப்படியே நின்று கொண்டே
ஒரு காலை 90டிகிரி மடக்கவும்(கண்களை மூடியபடியே)
இப்பொழுது உங்கள் முழு
உடல் எடையும் ஒரு காலில் தாங்கும்படி நிற்ப்பீர்கள்.
உங்களால் 10 நொடிகள் வரை
கூட நிற்க்க முடியவில்லை என்றால் நீங்கள் உடலால் 60 அல்லது 70 வயதை
அடைந்துவிட்டீர்கள் என்று பொருள்.
கண்களை மூடவில்லை என்றால்
உங்களால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிற்க இயலும்.
ஆனால் கண்களை மூடிய
நிலையில் 5நொடிகள் கூட நிற்க முடியாது..
இதன் பெயர் ‘ஜின் ஜி து
லி’
இது ஒரு சீன மருத்துவம்..
முக்கியமாக ‘மிகை இரத்த
அழுத்தம், நீரிழிவு நோய், ஞாபக மறதி, கழுத்து வலி, முதுகு தண்டு வலி’ உள்ளோருக்கு பரிந்துரைக்கப் படுகிறது.
மேலும் இதை எல்லோரும் தினமும்
ஒரு நிமிடம் செய்தால் இந்நோய்கள் வராமல் தடுக்கலாம்.
முதலில் கண்களை முழுதும்
மூடி செய்தல் கடினமாக இருக்கலாம்.
ஆரம்பத்தில் சிறிது
திறந்தபடி செய்து பயிற்சி செய்யலாம்..
பழக பழக கண்களை முழுவதும்
மூடியபடி செய்யலாம்..
இடையில் இஷ்க்கு இஷ்க்கு
என்றெல்லாம் கேட்கலையே....