செவ்வாய், ஜூலை 09, 2013

ராக்கெட்டின் பின்னால்



ஜப்பானின் ஓரிகாமி, நம் பண்டைய வில் வித்தை மற்றும் நவீன ராக்கெட் ஏவும் தொழில்நுட்பம் இவை அனைத்தையும் பயன்படுத்தி விடுவதுதான் நம் காகித ராக்கெட்.(கொஸ்டின் பேப்பெர்ல விடுர ராக்கெட் ரொம்ப தூரம் போனா நெறைய மார்க் வாங்குவோம்னு ஒரு செண்டிமெண்ட் வேற)

எப்படி தான் இந்த ராக்கெட் மேல போகுது. (அட நம்ம காகித ராக்கெட்டோ தீபாவளி ராக்கேட்டோ இல்லங்க.. இந்த இஸ்ரோ ராக்கெட்)
அதுக்கு முன்னாடி,
காற்று மிக மிக எடை குறைவு தான். ஆனா(ல்) வேகமாக செல்லும் பொருளின் மீது அதே காற்று செலுத்தும் விசை மிக மிக அதிகம்.
அதே சமயம் இந்த பூமி எதையும் அவ்வளவு சீக்கரம் விட்டுறாது.
காரணம் புவியீர்ப்பு விசை.
நம்ம ராக்கெட் பாவம். மாமியா, மருமக சண்டைல மாட்டிக்கிற கணவன்மார் போல. இந்த ரெண்டு விசையையும் சமாளிக்கனும்.
முக்கியமா செயற்க்கைகோள்கள் பல டன் எடையுடன் இருப்பதால், புவியீர்ப்பு விசைக்கு எதிராக செலுத்த அதிக வேகத்தில் செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில் மிக அதிக வேகத்தில்(11.2கி.மீ/விநாடிக்கு மேல்) செலுத்தினால் புவியை விட்டு தப்பி சென்று விடும்.
வேகத்தை குறைத்தால்  புவியீர்ப்பு விசைக்கு எதிராக செலுத்த முடியாது.
ராக்கெட் ஏவும் போது இந்த வேகத்தை தீர்மானிப்பது முக்கியமானது(பெரும்பாலும் எடை மற்றும் எவ்வளவு உயரத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதை பொறுத்து)
பூமியில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்திற்கு வளி மண்டலம் மிகவும் அடர்த்தியாக இருக்கும். அதனால் ராக்கெட் செங்குத்தாக செலுத்தப்படும்.
அதன்பின் அது சில கோணம் திருப்பப்படும். அவ்வாறு திருப்பப்படும் போது ராக்கெட்டின் தலைப்பகுதி கிழக்குப் பக்கமாக திருப்பப்படும்.(பூமி மேற்க்கிலிருந்து கிழக்காக சுற்றுவதால்)
மிக உயரத்தில் நிறுத்தப்படும் செயற்க்கைகோள்கள் நீண்ட ஆயுளை பெரும்.( காற்றினால் ஏற்படும் தடை குறைவு என்பதால்)

திங்கள், ஜூலை 08, 2013

ஒரு நாள்...ஒரு நொடி...



கண்களுக்கு இமை இருப்பதால் இழுத்துப் போர்த்திக் கொண்டு அடம் பிடிக்கின்றது...இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிகிறேனே என்று. காதுகளே.. நீங்கள் மட்டும் ஏன் சீக்கிரமே எந்திரிச்சிரிங்க. காலை(விடியல்) முதலில் தொடுவது செவியைத் தான் போல.
இரகசியமா ஒட்டு கேட்டிருக்கும் போல ஜன்னலோரம் விளையாடிக் கொண்டிருந்த சிட்டுக்குருவி ஜோடி ‘நாளைக்கு 6 மணிக்கெல்லாம் எந்திரிக்கனும்னு நான்  செல்பேசில பேசுனத. செல்பேசியினால் சிட்டுக்குருவிகளுக்கு ஆபத்து என சிட்டுக்குருவிகளின் உளவுத்துறையில் இருந்து அதற்கு தகவல் வந்திருக்கலாம். மறக்காமல் அதே ஜன்னலோரம் வந்து என்னை எழுப்பிவிட்டது அதன் தாய்மொழியில் ஜோடி சிட்டுக்குருவிகளில் ஒன்று மட்டும்.
7:30 மணி காட்டியது கடிகாரம் சாப்பிட உட்காரும் போது. மணியுடன் ஜன்னலோர அதே சிட்டுக்குருவியின் பிம்பத்தை பிரதிபலித்தது கடிகார கண்ணாடி. இக்கடிகாரத்தை பார்த்துதான் என்னை எழுப்பிவிட்டியானு அதன் தாய்மொழி தெரியாததால் என் தாய்மொழியில் எனக்கு நானே கேட்டுகொண்டேன் என் தாய்மொழி அதற்கு தெரியாது என்பதால்.
23.5டிகிரில் சாய்ந்து கொண்டே பயணிக்கும் பூமியைப்போல் கூட்டத்தால் ஒரு பக்கம் சாய்ந்தே வரும் பேருந்தில் தான் பயணிக்க வேண்டும் என்(கள்) கல்லூரிக்கு. சீட்டில் சுகமாக உட்கார்ந்து வரும் அவங்களுக்கும் அதே கட்டணம். கடைசி படியில் ஒரு காலின் நுனியும், ஜன்னலோர கம்பியை பிடித்திருக்கும் கைகளை தவிர பேருந்திற்கு வெளியே இருக்கும் எனக்கும் அதே கட்டணமா என கேட்க வாய் திறக்கும். ‘அதனால் என்ன? உன் புத்தகங்கள் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் அப்பெண்ணின் மடியில் பயணம் செய்கின்றதே என மனம் வாயை அடைத்துவிடும். உடம்பை படியில் தொங்க விட்டு மனம் எங்கோ பயணம் செய்யும் அப்பயணத்தில். இறங்கும் இடத்தில் மீண்டும் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளும்.
பொதுவாக நுழைவாயில் தான் தொடக்கம். ஆனால் இங்கு நுழைவாயில் தான் முடிவு... பிரமாண்டத்திற்கு, அழகிற்கு, சுத்ததிற்கு...
கணித ஆசிரியர். மனம் மூளையிடம் ஆலோசனை கேட்கிறது ‘இவரிடம் என்ன பொய் சொல்லலாம் என்று. போர்வீரனைப் போல தயாராக உள்ளது வாய்... பொய்க்காக. அவருக்கு தெரியும் எனக்கு இன்னைக்கு தேர்வு இல்லையென்று. அதனால் வீட்டில் சொன்ன அந்த பொய்யை இவரிடம் சொல்ல முடியாது. வலது மூளையும், இடது மூளையும் இணைந்து சட்டென்று சொல்லிக்கொடுத்தது உதடுகளுக்கு. உதடுகள் எதுவும் தெரியாத சிறு குழந்தை போல அப்படியே ஒப்பித்தது “நாளைக்கு பரிட்சைக்கு படிக்க வந்தேன் ஸார்
நானும் கண்களும் சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்தோம். மணி பார்க்க சொல்லி கண்களை அடித்தது மூளை. 9:57AM. இன்னும் மூன்று நிமிடங்கள் தான்... தேர்வு ஆரம்பிக்க. கால்கள் தரையில் பரந்தும் ஒரு நிமிடம் ஆனது தேர்வு நடைபெறும் வளாகத்தை அடைய.. இப்பொழுது கால்கள் பறப்பதை நிறுத்தி கண்கள் பறக்க ஆரம்பித்தன. பி.எஸ்சி(பிசிக்ஸ்) தேர்வு எண் 223192.
என் கண்களில் பட அரை நிமிடத்திற்க்கும் மேல் ஆயின.
முதல் தளம், புது வளாகம், அறை எண்:13
கண்களுக்கு முடிந்தது தேடல். இனி கால்களுக்கு தான்.
9:59AM,  புது வளாக நுழைவாயில். இன்னும் ஒரு நிமிடம் என்ற மகிழ்ச்சி அடுத்த நொடியே போனது.
“தம்பீ... பரீட்சை இருக்குறவங்க மட்டும் தான் உள்ள போகலாம். இல்லைனா போக கூடாது- காவலாளி

கணித ஆசிரியரிடம் சொன்ன பொய் பொய்யானது. சொன்னது உண்மையானது. புத்தகம் எடுத்தேன். கனிம வேதியியல். பொழுது போக்கினேன்.
12:58PM.. எல்லோரும் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.
1:05PM… இன்னும் பார்க்கவில்லை. புது வளாகம் காலியானது என்னை தவிர.
கல்லூரி பேருந்துகள் அணிவகுத்து நின்றன... கிளம்புவதற்கு.
முதல் பேருந்து அருகில் நான்.
ஏழாவது பேருந்தில் ஏறினாள் அவள்.
அவளை கண்ட அந்த ஒரு நொடி தான்.... என் அன்றைய ஒரு நாள்

வெள்ளி, ஜூலை 05, 2013

மூன்றெழுத்தில்



யாரெல்லாம் 3 எழுத்துனோனே ‘காதல்னு நெனசிங்க. கைய தூக்குங்க... பார்ப்போம்

Now Hands down.




E=mc2
இந்த 3 எழுத்து தான் நான் சொல்ல வந்தது.
அறிவியல்ல அன,ஆவன(ஓகே..அ,ஆ) தெரியாதவங்ககலுகு கூட பரிச்சயம்.
ஆன(ஆனால்) அதன் பயன்பாடு?????.
சூரியனின் இருப்பு பற்றி சொல்வது இந்த 3 எழுத்து தான்...
Bid Bang Thoryயின் பின்னால் இருப்பதும் இந்த 3 எழுத்து தான்.....
கார்பன் கொண்டு வயது கண்டு அறியும் சோதனையில்  முழு பொறுப்பும் 3 எழுத்து தான்.....
முப்பரிமான ஸ்கேன்ல் இருப்பதும் இந்த 3 எழுத்து தான்.....
இவ்வளவு ஏன்.. நம்ம எலெக்ட்ரிக் ஹீட்டர்ல கூட இந்த 3 எழுத்து தான்.....
விண்மீன் ஆராய்ச்சிலும் இந்த 3 எழுத்து தான்.....
முக்கியமாக அனுக்கரு உலைகளில்....
போதும்னு சொல்றிங்களா... ஓகே. உங்களுக்காக STOP பண்ணிகிறேன்.
லிஸ்ட்ட விட்டு கொஞ்சம் விளக்க(குழப்ப) வரேன்.
E=ஆற்றல், m=நிறை,  c=ஒளியின் திசைவேகம்
இப்போ நிறை= 1கிலோனு வச்சிகுவோம்.
E= 1*(3 × 108)2 =90000000000000000joules
அப்போ ஒரு கிலோ நிறைல இவ்வளவு ஆற்றல் இருக்குதுனு நம்புறிங்களா???
நம்மனும்... நம்பித்தான் ஆகனும்.
நம்பிக்கை... அதானே எல்லாம்(பிரபு ஸார் வாய்ஸ்)
அப்போ சில கிலோக்கள் போதுமே உலக ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய??(இப்போ உங்க மைண்ட் வாய்ஸ்)
கரெக்ட் தான். ஆனா எல்லா பொருட்களுக்கும் இந்த பண்பு இல்லை(இருந்திருக்க கூடாதா)
எளிதில் சிதைவடையும் பொருட்கள்(Radio Active Material) மட்டும் மிக அதிகமான ஆற்றலை வெளிப்படுத்தும்.(எ.கா. யுரேனியம்)

புதன், ஜூலை 03, 2013

பாழாய்ப்போன பழமொழிகள்



‘ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு

எனக்கு ரொம்ப நாளாவே இந்த பழமொழி மட்டும் புரியாத புதிராவே இருந்ததுசுங்க.
என்னடா இது ஆற்றுல தான் போடுரோம். அப்போ கண்டிப்பா தேவையில்லாததான் போடுவாம். அத ஏன் அளந்து போடனும். எவ்வளவு வேணும்னாலும் போடலாம்ல. ஏ(ன்) அளக்க சொல்லாறாய்ங்க.
இல்ல அளக்குற அளவுக்கு மதிப்பானதுனா எதுக்கு ஆற்றுல போடுறாய்ங்க.
இத தெரின்சிக்க கூகுல்ள களம் எறங்குனேன். கடைசியா கண்டுபிடிசிடேன்.(பின்ன கூகுள்க்கு தெரியாத விஷயமா)
ஷாக் ஆகாதிங்க... உண்மையான பழமொழி
‘வயிற்றிலே போட்டாலும் அளந்து போடு
சாப்பிடுறது நல்லது தான். அதுக்காக அதிகமா சாப்பிடக்கூடாதுனு தான் இந்த பழமொழியே சொல்லிருக்காங்க. அத எப்படிலாம் மாத்திருக்காங்க......  

செவ்வாய், ஜூலை 02, 2013

என்னமோ ஜீடிபியாம்ல... அப்படின என்ன ஸார்?

இது கூட தெரியாதா.. கிராஸ் டொமஸ்டிக் ப்ராடக்ட்(GDP)னு  சொல்ற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது.
அப்போ என்னோட அடுத்த கேள்வி 'கிராஸ் டொமஸ்டிக் ப்ராடக்ட்' னா என்ன?????
"கூந்தல் இருக்குற மகராசி அள்ளி முடியலாம்"னு ஒரு பழமொழி இருக்கு.
இருக்கட்டும்...அது எதுக்கு இப்போ????(அகெய்ன் உங்க மைண்ட் வாய்ஸ்)
வெல்.. எல்லாத்துக்குமே ஒரு அளவுகோல் வேணும்(உன் இம்சைக்கு அளவு இல்லையா கேட்காதிங்க ப்ளீஸ்)

பொருளாதாரத்தை அளவிடும் ஒரு அளவீடு தான் GDP.(யாரடி நீ மோகினி GDல கூட ஒரு பொன்னு சொல்லும்ல,"india's current GDP rate is 3.5%")

இந்த GDP ய 2 வகைல சொல்லுவாங்க.
1)GDP in amount
2)GDP Growth Rate(in Percentege,அந்த பொன்னு சொன்னது இதான்)

GDP in amount

ஒரு நாட்ல ஒரு வருடம்(சில சமங்களில் அரையாண்டு,காலாண்டு கூட) உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பின் மொத்த மதிப்பே GDP.
இதுல இந்தியால எங்கயோ ஒரு மூலைல உற்பத்தி ஆகுற சின்ன குண்டூசில இருந்து நாம விடுற ராக்கெட் வரை அவற்றின் சந்தை மதிப்பு கணக்கிடப்படுகிறது.
சேவை என்பதில் நம்ம வீட்டுக்கு பக்கதில அயர்ன் பண்ணுறவங்களுக்கு கொடுக்குற 5ரூபால இருந்து ஐடி நிறுவனங்கள் பெறும் லட்சம் கோடி வரை அடங்கும்.
ஒரு வருடத்திற்க்கு அப்படி கணக்கு பார்த்த அந்த நம்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எவ்வளவு வரும்னு தான யோசிக்கிறிங்க.
2012ல நம்ம GDP வந்து 1,947,000 மில்லியன் டாலர்(நாம 10வது இடம் உலகத்துல)

10வது இடம்னு சந்தோஷபடாதிங்க பாஸ்.
இது நம்ம நாட்டோட நெலம தான்(ஓ.கே..முன்னெற்றம் தான்)
இந்த GDPய 128கோடியால(நம்ம மக்கள் தொகையே தான்)வகுக்கனும்..இப்ப கிடைக்கிறது தனிநபர் GDP.
இதுல இந்தியா 143வது இடம்.(Rich get Richer.Poor get Poorer)

GDP Growth Rate
இப்போ அந்த பொண்ண பார்போம்...சாரி, அந்த பொண்ணு சொன்ன GDP Growth Rate ன என்னானு பார்போம்.
2011ல GDP 1897608மில்லியன் டாலர்
2012ல GDP 1947000மில்லியன் டாலர்
2011ல விட 2012ல் எவ்வளவு சதவிகதம் GDP(in amt) உயர்ந்து(சில சமயம் குறைந்து) இருக்கோ அதான் GDP Growth rate.

இப்போ அந்த பழமொழிக்கு வரென்."கூந்தல் இருக்குற மகராசி அள்ளி முடியலாம்"ங்கர மாதிரி GDP அதிகமா இருக்கு நாடு நெரைய கடன் வாங்கலாம். அதன் நாம நெரைய கடன் வாங்குரோம்.
இந்தியாவால கடன திருப்பி செலுத்த முடியும்.
( திருப்பி செலுத்த முடியும். அதுக்குகாக கடன் வாங்கலாமா..... அடுத்த பதிவில்)

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...