புதன், அக்டோபர் 23, 2013

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தான்




இன்று உலக ஆற்றல் தினம்(World Energy Day).

 ‘ஆற்றல் அழிவின்மை விதி என்ற விதி உண்டு அறிவியலில். அதன்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றலாம். ஆக ஆற்றலுக்கு அழிவே கிடையாது. இருந்தும் ஆற்றல் சேமிப்பு(Energy Saving) பற்றி உலகம் அலசி ஆராய்ந்தும், அலாரமடித்துக் கொண்டும் இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் நாம் சந்திக்கப் போகும் மிக மிக்கிய பிரச்சனையில் இது(வும்) முக்கியமானது.

கிட்டத்தட்ட அதன் முன்னோட்டத்தை நாம் பார்த்தும்விட்டோம். கடந்த 5 ஆண்டுகளில் நாம் சந்தித்த மின்வெட்டு தான் அது. மின்வெட்டு சரியானதும் சிந்திக்க மறந்துவிட்டோம். ஓரளவு அனைத்து வளங்களும்(நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள், தோரியம், யுரேனியம்) இருக்கும் போதே தட்டுப்பாடு நிலவுகிறது.
குண்டுபல்ப்பில் பயன்படுத்தும் மின்சாரத்தில் 80% டங்ஸ்டன் மின்னிழையை சூடுபடுத்தவே பயன்படுகிறது. மீதி 20% தான் ஒளியாக மாற்றப்படுகிறது. இவ்வாறு எவ்வளவோ ஆற்றலை கடந்த நூற்றாண்டில் வீணடித்துவிட்டோம்.

ஒரு கணக்கின்படி 3100டன் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்தை வெறும் 1கிலோ யுரேனியத்தை வைத்து தயாரித்துவிடலாம். ஆனால் இங்கு ஒரு அணுமின் உலையை தொடங்கவே பல புரட்சிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

மேலும் நிலக்கரியை எரிக்கும் போது வெளிப்படும் CO2 வளிமண்டலத்தில் பசுமையக விளைவை(Green House Effect) ஏற்படுத்துகிறது. ஆற்றலின் தேவை அதிகரித்தால் அதிக நிலக்கரி பயன்படுத்த வேண்டும். அதிக அளவு CO2 வெளிப்படும். ஆக நம்மிடம் இன்னும் பல வருடங்களுக்கு நிலக்கரி இருந்தாலும் கூட அதை பயன்படுத்தும் போது ஏற்படும் இந்த பாதிப்பையும் கவனத்தில் கொள்ளும்படிச் செய்கிறது.

ஒவ்வொரு நொடியும் பூமியின் மீது விழும் சூரிய ஒளி அந்நொடிக்கு பூமிக்கு தேவையான் ஆற்றலை விட அதிகம் தானாம். இருந்தும் இன்னும் தொழில்நுட்பங்கள் வளரவில்லை முழுமையாக பயன்படுத்த. உலகில் 20% க்கும் குறைவாக தான் சூரிய ஒளி ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக மிகப் பெரும் பிரச்சனையாக கவனத்தில் கொள்ள வேண்டியது அதிகமான வாகனங்களின் பயன்பாடு. பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு செல்ல கூட இன்று பைக் தேவைபடுகிறது. சைக்கிள் என்பது ஏதோ 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தான் என்றாகிவிட்டது.
2052ல் உலகில் உள்ள அத்தனை பெட்ரோல் வளங்களும் வறண்டுவிடும். அதற்குள் மாற்று வழி ஆற்றலை கண்டுபிடித்துவிடுவார்கள் தான். ஆனால் கவலை அதுவல்ல. அதீத பயன்பாட்டால் மிக வேகமாக பாழாகும் நம் சுற்றுச்சூழல் தான்.

முதலில் வரும் விமர்சனம் நான் ஒருவன் மட்டும் மாறினால் போதுமா? என்று தான் இருக்கும். 450கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த சிறு தூசிகள் இன்று பூமி, சூரியன், சந்திரன், மற்ற கிரகங்கள் எல்லாம். என்றோ பெய்த சிறுதூறல் தான் இன்றைய பெருங்கடல்கள்...


வியாழன், அக்டோபர் 17, 2013

ஜாலி பயணம்..



விமானம் புறப்பட தயாராயிருந்தது.
கைபேசியை அனைத்து வைக்கும்மாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
இன்னும் சில நொடிகளில் தரைக்கு விடை கொடுத்து, வானில் பறக்கும் முனைப்புடன் இருந்தது.
நொடி நெருங்கியதும் பயணம் இனிதே தொடங்கியது.
சிலருக்கு பிரயாணம். பலருக்கு பிரமிப்பு..


சில நிமிடங்கள் வரை எல்லாம் சரியாக தான் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு சமவெளி பகுதியில் தரை மோதி வெடித்தது...
பயணித்த 156ல் 155 பேர் பலி. விமானி உட்பட.

பிழைத்தது ஒரே ஒரு உயிர். மிருகக்காட்சி சாலைக்கு அழைக்கப்பட்டு சென்ற குரங்கு தான் அது.
விசாரணை அதிகாரிகள் விபத்து நடந்த பகுதியில் இருந்த இந்த குரங்கை கைப்பற்றினர்.

அதிகாரி1 : கருப்பு பெட்டியும் கிடைக்கல. உயிரோட யாரும் இல்ல. எப்படி விபத்துக்கான் காரணத்த கண்டுபிடிக்க.

குரங்கு: உயிரோட தான் நான் இருக்கேன்ல.

அதிகாரி2 : ஐயா, குரங்கு பேசுது

அதிகாரி1: அட ஆமாயா.. பேசாம(பேசி தான்) இது கிட்டயே விசாரிக்கலாம் போல.

அதிகாரி2: நமக்கு வேற வழி இல்ல.

அ1: விமானம் கிளம்பும் போது பயணிகள் என்ன பண்ணுனாங்க

கு: சீட் பெல்ட் போட்டுகிட்டு இருந்தாங்க

அ1: விமான பணிப்பெண்?

கு: எல்லாருக்கும் குட்மார்னிங்க் சொல்லிகிட்டு இருந்தாங்க

அ2: அப்போ விமானி?

கு: புறப்பட எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டிருந்தனர்.

அ1: நீ?

கு: எல்லாறையும் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

அ1: விமானம் புறப்பட்ட பின் 30 நிமிடம் கழித்து பயணிகள் என்ன பண்ணுனாங்க?

கு: பாதி பேர் தூங்கிட்டாங்க. மீதி பேர் படிச்சுக்கிட்டு இருந்தாங்க

அ2: விமானபணிப்பெண்?

கு : மேக் அப் போட்டுகிட்டு இருந்தாங்க.

அ1: விமானி?

கு: விமானத்தை இயக்கி கொண்டிருந்தார்.

அ1 : நீ?

கு: இப்பவும் பார்த்துகிட்டுதான் இருந்தேன்..

அ1: விபத்து நடப்பதற்க்கு சற்று முன்னால், பயணிகள் என்ன பண்ணுனாங்க.. யாரும் கைல துப்பாக்கி வச்சிருந்தாங்கலா?

கு: யாரு கையிலயும் துப்பாக்கிலாம் இல்ல. அப்போ எல்லாரும் தூங்கிக்கிட்டு இருந்தாங்க.

அ2: விமான பணிப்பெண்?

கு: மேக் அப் போட்ட பின் எடுத்த போட்டவ பேஸ்புக்-ல அப்லோட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

அ1 : விமானி?

கு: அந்த போட்டோவுக்கு கமெண்ட் பண்ணிகிட்டு இருந்தார்.

அ1: நீ?

கு: விமானத்த இயக்கி கொண்டு இருந்தேன்...........

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

ஜின் ஜி து லி



சீடர்களே...

உங்கள் அனைவரையும் ஸ்ரீஸ்ரீ உதயானந்தாவின் ulaஅகில உலக தியான மையத்திற்கு வரவேற்கிறேன்.

இன்று நாம் பார்க்கப் போவது ஒரு எளிய பயிற்சி..

முதலில் பார்ப்பதற்க்கு பவர் ஸ்டார் போல சப்பையாக இருந்தாலும்
பள்ளிகூட வாத்தியார் போல உங்கள் முட்டியை கழற்றிவிடும்.

‘உங்கள் வயது என்ன என்று கேட்டால் ‘பாஸ் என்று அடுத்த கேள்விக்கு செல்லும் நடிகையின் வயதக் கூட இந்த பயிற்சி மூலம் கண்டுபிடிக்கலாம்.

பாஸ்(கரன்) மாதிரி அரியர்ஸ் எழுதிக் கொண்டே இருக்கும் பாய்ஸ் கூட இதை செய்தால் பாஸ் பண்ணலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு இனிப்பான பயிற்சி. ஆம்.. ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் செய்தால் போதும்.

இனி ஆரம்பிப்போமா...
சீடர்களே..
அனைவரும் உங்கள் கண்களை மூட ஆழ்ந்த தியானத்திற்கு செல்லவும்...(ஹாலோ இப்ப இல்ல.. இத முழுசா படித்த பின்)

அப்படியே கண்னை மூடிய படியே எழுந்து நிற்க்கவும்..
அப்படியே நின்று கொண்டே ஒரு காலை 90டிகிரி மடக்கவும்(கண்களை மூடியபடியே)

இப்பொழுது உங்கள் முழு உடல் எடையும் ஒரு காலில் தாங்கும்படி நிற்ப்பீர்கள்.

உங்களால் 10 நொடிகள் வரை கூட நிற்க்க முடியவில்லை என்றால் நீங்கள் உடலால் 60 அல்லது 70 வயதை அடைந்துவிட்டீர்கள் என்று பொருள்.

கண்களை மூடவில்லை என்றால் உங்களால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிற்க இயலும்.
ஆனால் கண்களை மூடிய நிலையில் 5நொடிகள் கூட நிற்க முடியாது..

இதன் பெயர் ‘ஜின் ஜி து லி
இது ஒரு சீன மருத்துவம்..
முக்கியமாக ‘மிகை இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ஞாபக மறதி, கழுத்து வலி, முதுகு தண்டு வலி உள்ளோருக்கு பரிந்துரைக்கப் படுகிறது.
மேலும் இதை எல்லோரும் தினமும் ஒரு நிமிடம் செய்தால் இந்நோய்கள் வராமல் தடுக்கலாம்.

முதலில் கண்களை முழுதும் மூடி செய்தல் கடினமாக இருக்கலாம்.
ஆரம்பத்தில் சிறிது திறந்தபடி செய்து பயிற்சி செய்யலாம்..
பழக பழக கண்களை முழுவதும் மூடியபடி செய்யலாம்..

இடையில் இஷ்க்கு இஷ்க்கு என்றெல்லாம் கேட்கலையே....




விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...