- பாரிஸ்டர் ஆக வேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்கான பணம் முழுவதையும் அவரே சம்பாதித்தார். ஆனால் அவர் அண்ணனுக்கும் அதே ஆசை. அதனால் தன் அண்ணனை அந்த பணத்தில் படிக்க வைத்தார். அதன் பின்னர் 38 வயதில் தான் தன் பாரிஸ்டர் கனவை நினைவாக்கினார்.
- ஒருமுறை நண்பர்களுடன் சீட்டாட்டம் விளையாடிக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் காந்தி ஒரு கூட்டத்தில் உரையாடிக் கொண்டிருக்கிறார். நண்பர்கள் கூட்டத்திற்க்கு போகலாம் என்கிறார்கள். இவரோ ‘ஆட்டத்தை தொடருங்கள். பிரம்மச்சரியம், சிக்கனம், எளிமை என ஏதாவது பேசுவார். கோதுமையிலிருந்து கல் பொறுக்கத் தெரிந்தால் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று வீண் வார்த்தை பொழிவார். நீங்களே போய் கேளுங்கள். நான் வரவில்லை’ என்று கூறியவர். பின்னாளில் காந்தியின் சொல்லே வேதம் என கருதினார். காந்தியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் ஆனார்.
- ஏரவடா சிறையில் காந்தியும், இவரும் ஒரே செல்லில் இருந்தனர். காந்தி சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். காந்திக்கு அருகில் இருந்து அனைத்து பணிவிடைகளும் செய்தார் இவர். தன் அண்ணன் வெளியில் இறந்த போதும் சிறையிலிருந்து பரோலில் வெளி வர மறுத்துவிட்டார்.
வழக்கறிஞகர் தொழில் செய்து நன்றாக சம்பாதித்தார். ஆனால் கதர்
இயக்கத்திலும், மது-தீண்டமை ஒழிப்பு போரட்டத்திலும் ஈடுபட தடையாக இருந்ததால்
அத்தொழிலையும் கைவிட்டார். காந்தி அதை மிகுந்த மனவேதனையுடன் தன் ‘சத்திய சோதனை’யில் பதிவு
செய்துள்ளார்.
- குஜராத்தில் வறுமையில் வடிய விவசாயிகளிடமும் ஆங்கில அரசு வரி வசுல் செய்தது. காந்தியின் அறிவுறுத்தல் பேரில் போரட்டத்தில் இறங்கினார். ஆயிரக்கனக்கானோர் கைது செய்துபட்டனர். இருந்தும் போராட்டத்தை தொடர்ந்தார். ஆங்கில அரசால் ஒன்னும் செய்ய முடியவில்லை. வரியை நீக்கியது. இவர் நாடறிந்த தலைவரானார்.
- 1946ல் இடைக்கால அரசு அமைக்க 16 மாகணங்களில் 13 மாகணங்கள் இவரை பிரதமராக முன்மொழிந்தன. வெறும் 3 மாகணங்கள் தான் நேருவை முன்மொழிந்தனர். நேரு தான் மவுண்ட் பேட்டனுடன் பேச்சுவார்த்தையில் உள்ளார். ஒருவேளை நேரு பிரதமராகாவிட்டால் ஆங்கிலேய அரசு சுதந்திரம் தர தயங்கலாம் என பயந்தார் காந்தி. காந்தி கேட்டுக்கொண்டற்க்கு இணங்க பிரதமர் போட்டியிலிருந்து விலகினார். நேரு இந்தியாவின் முதல் பிரதமரானார்.
- அதற்க்கு பதிலாய் உள்துறை அமைச்சராக்கப்பட்டார். மிகவும் திறமையாக செயல்பட்டு சிதறிக்கிடந்த சுமார் 560 சமஸ்தானங்களை ‘இந்தியா’ என்ற நாடாக்கினார். இது மிகப்பெரும் வரலாற்றுச்சாதனை.
- இராணுவ நடவடிக்கையின் மூலம் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முயன்றார். ஆனால் நேரு அதற்க்கு அனுமதி மறுத்துவிட்டார்.
- மனமுடைந்த இவர் காந்தியை சந்தித்து பதவி விலக போவதை தெரிவித்தார். இவர் சந்தித்து சென்ற சில நிமிடங்களில் காந்தி கொல்லப்பட்டார். உள்துறை அமைச்சர் என்ற முறையில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வற்புறுத்தப்ப்ட்டார்.
- “இவர் பிரதமராக வந்திருந்தால் இன்று காஷ்மீர் பிரச்சனையே இருந்திருக்காது” – வரலாற்று ஆசிரியர்கள்
- “இவர் பிரமராக வந்திருந்தால் இந்தியாவில் இன்னும் சிறப்பான ஆட்சியை கண்டிருக்கலாம்”- இராஜேந்திர பிரசாத்(முதல் குடியரசு தலைவர்)
- இவரின் பிறந்ததினம் இன்று. இரும்பு மனிதர் தான். ஆனால் மென்மையான இதயம் கொண்டவர்.
- சர்தார் வல்லபாய் படேலின் புகழ் என்றும் ஓங்குக.