புதன், ஜனவரி 01, 2014

ஸாரி பிரம்மா....

இந்த பிரம்மனுக்கு தலைக்கணம் அதிகம்
நான்கு தலைகள் இருப்பதனால் அல்ல
இவ்வளவு அழகாய் உன்னை படைத்ததினால்...!

*********

பிரம்மனின் ரெஸ்யூமேவை பார்த்தேன்

சாதனைப் பட்டியலில் உன்பெயர்...!
உன் பெயர் மட்டுந்தான்...!


********

இன்னும் அழுது கொண்டிருக்கிறான் பிரம்மன்...!

அழகாய் ஒருத்தியை படைக்க நினைத்து
எத்தனையோ தேவதைகளை படைத்தான்...!

யாரும் இல்லை
அவன் நினைத்த அழகில்...!

விண்ணிலேயே வைத்திருந்தான்
எல்லா தேவதைகளையும்

ஒருத்தியை மட்டும்
தெரியாமல் தொலைத்துவிட்டான்

நினைத்ததை படைத்தும்
தொலைத்தாதால்

இன்னும் அழுதுகொண்டிருக்கிறான் பிரம்மன்...!
 

வியாழன், அக்டோபர் 31, 2013

இந்தியாவின் முதல் பிரதமர்

  • பாரிஸ்டர் ஆக வேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்கான பணம் முழுவதையும் அவரே சம்பாதித்தார். ஆனால் அவர் அண்ணனுக்கும் அதே ஆசை. அதனால் தன் அண்ணனை அந்த பணத்தில் படிக்க வைத்தார். அதன் பின்னர் 38 வயதில் தான் தன் பாரிஸ்டர் கனவை நினைவாக்கினார்.
  • ஒருமுறை நண்பர்களுடன் சீட்டாட்டம் விளையாடிக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் காந்தி ஒரு கூட்டத்தில் உரையாடிக் கொண்டிருக்கிறார். நண்பர்கள் கூட்டத்திற்க்கு போகலாம் என்கிறார்கள். இவரோ ‘ஆட்டத்தை தொடருங்கள். பிரம்மச்சரியம், சிக்கனம், எளிமை என ஏதாவது பேசுவார். கோதுமையிலிருந்து கல் பொறுக்கத் தெரிந்தால் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று வீண் வார்த்தை பொழிவார். நீங்களே போய் கேளுங்கள். நான் வரவில்லை என்று கூறியவர். பின்னாளில் காந்தியின் சொல்லே வேதம் என கருதினார். காந்தியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் ஆனார்.
  • ஏரவடா சிறையில் காந்தியும், இவரும் ஒரே செல்லில் இருந்தனர். காந்தி சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். காந்திக்கு அருகில் இருந்து அனைத்து பணிவிடைகளும் செய்தார் இவர். தன் அண்ணன் வெளியில் இறந்த போதும் சிறையிலிருந்து பரோலில் வெளி வர மறுத்துவிட்டார்.
வழக்கறிஞகர் தொழில் செய்து நன்றாக சம்பாதித்தார். ஆனால் கதர் இயக்கத்திலும், மது-தீண்டமை ஒழிப்பு போரட்டத்திலும் ஈடுபட தடையாக இருந்ததால் அத்தொழிலையும் கைவிட்டார். காந்தி அதை மிகுந்த மனவேதனையுடன் தன் ‘சத்திய சோதனையில் பதிவு செய்துள்ளார்.
  • குஜராத்தில் வறுமையில் வடிய விவசாயிகளிடமும் ஆங்கில அரசு வரி வசுல் செய்தது. காந்தியின் அறிவுறுத்தல் பேரில் போரட்டத்தில் இறங்கினார். ஆயிரக்கனக்கானோர் கைது செய்துபட்டனர். இருந்தும் போராட்டத்தை தொடர்ந்தார். ஆங்கில அரசால் ஒன்னும் செய்ய முடியவில்லை. வரியை நீக்கியது. இவர் நாடறிந்த தலைவரானார்.
 
  • 1946ல் இடைக்கால அரசு அமைக்க 16 மாகணங்களில் 13 மாகணங்கள் இவரை பிரதமராக முன்மொழிந்தன. வெறும் 3 மாகணங்கள் தான் நேருவை முன்மொழிந்தனர். நேரு தான் மவுண்ட் பேட்டனுடன் பேச்சுவார்த்தையில் உள்ளார். ஒருவேளை நேரு பிரதமராகாவிட்டால் ஆங்கிலேய அரசு சுதந்திரம் தர தயங்கலாம் என பயந்தார் காந்தி. காந்தி கேட்டுக்கொண்டற்க்கு இணங்க பிரதமர் போட்டியிலிருந்து விலகினார். நேரு இந்தியாவின் முதல் பிரதமரானார்.
  • அதற்க்கு பதிலாய் உள்துறை அமைச்சராக்கப்பட்டார். மிகவும் திறமையாக செயல்பட்டு சிதறிக்கிடந்த சுமார் 560 சமஸ்தானங்களை ‘இந்தியா என்ற நாடாக்கினார். இது மிகப்பெரும் வரலாற்றுச்சாதனை.
  • இராணுவ நடவடிக்கையின் மூலம் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முயன்றார். ஆனால் நேரு அதற்க்கு அனுமதி மறுத்துவிட்டார்.
  • மனமுடைந்த இவர் காந்தியை சந்தித்து பதவி விலக போவதை தெரிவித்தார். இவர் சந்தித்து சென்ற சில நிமிடங்களில் காந்தி கொல்லப்பட்டார். உள்துறை அமைச்சர் என்ற முறையில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வற்புறுத்தப்ப்ட்டார்.
  • “இவர் பிரதமராக வந்திருந்தால் இன்று காஷ்மீர் பிரச்சனையே இருந்திருக்காது – வரலாற்று ஆசிரியர்கள்
  • “இவர் பிரமராக வந்திருந்தால் இந்தியாவில் இன்னும் சிறப்பான ஆட்சியை கண்டிருக்கலாம்- இராஜேந்திர பிரசாத்(முதல் குடியரசு தலைவர்)
  • இவரின் பிறந்ததினம் இன்று. இரும்பு மனிதர் தான். ஆனால் மென்மையான இதயம் கொண்டவர்.
  • சர்தார் வல்லபாய் படேலின் புகழ் என்றும் ஓங்குக.
 

சனி, அக்டோபர் 26, 2013

எல்லாம் நேரம்



செல்போனில் நேரம் மாற்றும் அமைப்பில்(Time Settings) Daylight Saving Time(DST) என்ற விருப்பம் இருக்கும். அதை இயக்கியபின் நேரத்தை பார்த்தீர்களானால் உங்கள் செல்பேசியின் நேரம் ஒரு மணி குறைவாக காட்டும். இதையே மார்ச் மாதத்திற்குப்பின் செய்து பார்த்தீர்களானால் நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அதாவது அக்-மார்ச் வரை ஒரு மணிநேரம் குறையும். மார்ச்-அக் மாற்றமேதும் இருக்காது.

ஏன் இந்த மாற்றம்?
குளிர்காலத்தில் மாலைநேரங்களில் மிக விரைவாக இருள் வந்துவிடும். அதே போல் கோடை காலத்தில் மிக நீண்ட நேரம் கதிரவனின் கதிர்கள் பூமியை ஆக்கிரமிக்கும். இருட்டும் வரை தான் வேலை நேரம் என்ற எண்ணம் பரவலாக உலகில் எல்லா பகுதி மக்களிடமும் உள்ளது. இன்றைய கார்ப்பரேட் உலகில் 10 முதல் 6 வரை என வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டாலும் இன்றும் பலருக்கு சூரியன் மறையும் நேரமே வேலை முடியும் நேரமாக உள்ளது.

உதாரணமாக 10 முதல் 6 வரை வேலை நேரம் என கொள்வோம். குள்ர்காலத்தில் 5மணிக்கெல்லாம் இருள் சூழ ஆரம்பித்துவிடும். இருளை கண்டவுடன் மக்களுக்கு வேலையில் கவனம் குறையும். எப்போது கிளப்புவோம் என்ற எண்ணம் தோன்றும். மேலும் அவர்கள் வேலை செய்ய வெளிச்சம் மற்றும் அதற்க்கு மின்சாரம் தேவை.

இதே கோடைகாலத்தில் 6மணிவரை நல்ல வெளிச்சம் இருக்கும். மக்கள் எந்த மனச்சலனமும் இல்லாமல் வேலை செய்துகொண்டிருப்பர். விரைவாக விளக்குகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
குளிர்காலத்தில்(அக்-மார்) ஒரு மணிநேரம் முன்னதாக வைப்பதால் மக்கள் விரைவாக துயிலெழுந்து விரைவாக வேலைய முடிப்பர். அதாவது கடிகாரம் 6PM என காட்டும். ஆனால் மணி 5PM தான் இருக்கும். சூரிய வெளிச்சத்திலேயே வேலையை முடித்தாயிற்று. மக்களும் மனதளவில் எந்த உளைச்சலும் இல்லாமல் இருப்பர்.

நடைமுறைச்சிக்கல்:
இதை நடைமுறைப்படுத்தும் போது முன்பு திட்டமிடப்பட்ட சந்திப்பு, பயணங்கள், நிகழ்ச்சி போன்றவை சிரமங்களை சந்திக்கலாம். 2007ல் நடத்தப்பட்ட ஒரு சர்வேயின் படி வெறும் 0.7% மின்சாரமே இதன் மூலம் சேமிக்கப்படுகிறதாம். ஆனால் மேலே சொன்ன சிரமங்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதைவிட அதிகம். அனலாக் கடிகாரங்களில் நாமாக தான் மாற்றியமைக்க வேண்டும். ஆனால் டிஜிட்டல் & கணினி கடிகாரங்களில் புரோகிராம் தானாக மாற்றியமைத்துக் கொள்ளும். இது சில நேரங்களில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது.



எப்பொழுது?
27/10/13(நாளை) அதிகாலை 3 மணிக்கு எல்லோரும் தங்கள் கடிகாரத்தை 2 மணியாக மாற்றிக்கொள்வார்கள்.(டிஜிட்டலில் அதுவாகவே மறிவிடும். (DST ஆன் செய்யப்பெற்றிருந்தால்) மீண்டும் 31/03/14ல் தங்கள் கடிகார நேரத்தை ஒரு மணிநேரம் பின்னோக்கி அமைத்துக்கொள்வார்கள். இதை ஐரோப்பியர்கள் மட்டுமே செய்வார்கள். அமெரிக்கர்கள்(வட அமெரிக்கர்கள் மட்டும்) 2மணியிலிருந்து 1 மணியாக குறைத்துகொள்வார்கள். 31/03/14ல் மீண்டும் பழைய நேரத்திற்கு திரும்புவார்கள். நமக்கு இந்த இரண்டுமே இல்லை.


புதன், அக்டோபர் 23, 2013

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தான்




இன்று உலக ஆற்றல் தினம்(World Energy Day).

 ‘ஆற்றல் அழிவின்மை விதி என்ற விதி உண்டு அறிவியலில். அதன்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றலாம். ஆக ஆற்றலுக்கு அழிவே கிடையாது. இருந்தும் ஆற்றல் சேமிப்பு(Energy Saving) பற்றி உலகம் அலசி ஆராய்ந்தும், அலாரமடித்துக் கொண்டும் இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் நாம் சந்திக்கப் போகும் மிக மிக்கிய பிரச்சனையில் இது(வும்) முக்கியமானது.

கிட்டத்தட்ட அதன் முன்னோட்டத்தை நாம் பார்த்தும்விட்டோம். கடந்த 5 ஆண்டுகளில் நாம் சந்தித்த மின்வெட்டு தான் அது. மின்வெட்டு சரியானதும் சிந்திக்க மறந்துவிட்டோம். ஓரளவு அனைத்து வளங்களும்(நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள், தோரியம், யுரேனியம்) இருக்கும் போதே தட்டுப்பாடு நிலவுகிறது.
குண்டுபல்ப்பில் பயன்படுத்தும் மின்சாரத்தில் 80% டங்ஸ்டன் மின்னிழையை சூடுபடுத்தவே பயன்படுகிறது. மீதி 20% தான் ஒளியாக மாற்றப்படுகிறது. இவ்வாறு எவ்வளவோ ஆற்றலை கடந்த நூற்றாண்டில் வீணடித்துவிட்டோம்.

ஒரு கணக்கின்படி 3100டன் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்தை வெறும் 1கிலோ யுரேனியத்தை வைத்து தயாரித்துவிடலாம். ஆனால் இங்கு ஒரு அணுமின் உலையை தொடங்கவே பல புரட்சிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

மேலும் நிலக்கரியை எரிக்கும் போது வெளிப்படும் CO2 வளிமண்டலத்தில் பசுமையக விளைவை(Green House Effect) ஏற்படுத்துகிறது. ஆற்றலின் தேவை அதிகரித்தால் அதிக நிலக்கரி பயன்படுத்த வேண்டும். அதிக அளவு CO2 வெளிப்படும். ஆக நம்மிடம் இன்னும் பல வருடங்களுக்கு நிலக்கரி இருந்தாலும் கூட அதை பயன்படுத்தும் போது ஏற்படும் இந்த பாதிப்பையும் கவனத்தில் கொள்ளும்படிச் செய்கிறது.

ஒவ்வொரு நொடியும் பூமியின் மீது விழும் சூரிய ஒளி அந்நொடிக்கு பூமிக்கு தேவையான் ஆற்றலை விட அதிகம் தானாம். இருந்தும் இன்னும் தொழில்நுட்பங்கள் வளரவில்லை முழுமையாக பயன்படுத்த. உலகில் 20% க்கும் குறைவாக தான் சூரிய ஒளி ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக மிகப் பெரும் பிரச்சனையாக கவனத்தில் கொள்ள வேண்டியது அதிகமான வாகனங்களின் பயன்பாடு. பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு செல்ல கூட இன்று பைக் தேவைபடுகிறது. சைக்கிள் என்பது ஏதோ 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தான் என்றாகிவிட்டது.
2052ல் உலகில் உள்ள அத்தனை பெட்ரோல் வளங்களும் வறண்டுவிடும். அதற்குள் மாற்று வழி ஆற்றலை கண்டுபிடித்துவிடுவார்கள் தான். ஆனால் கவலை அதுவல்ல. அதீத பயன்பாட்டால் மிக வேகமாக பாழாகும் நம் சுற்றுச்சூழல் தான்.

முதலில் வரும் விமர்சனம் நான் ஒருவன் மட்டும் மாறினால் போதுமா? என்று தான் இருக்கும். 450கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த சிறு தூசிகள் இன்று பூமி, சூரியன், சந்திரன், மற்ற கிரகங்கள் எல்லாம். என்றோ பெய்த சிறுதூறல் தான் இன்றைய பெருங்கடல்கள்...


விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...