புதன், அக்டோபர் 23, 2013

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தான்




இன்று உலக ஆற்றல் தினம்(World Energy Day).

 ‘ஆற்றல் அழிவின்மை விதி என்ற விதி உண்டு அறிவியலில். அதன்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றலாம். ஆக ஆற்றலுக்கு அழிவே கிடையாது. இருந்தும் ஆற்றல் சேமிப்பு(Energy Saving) பற்றி உலகம் அலசி ஆராய்ந்தும், அலாரமடித்துக் கொண்டும் இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் நாம் சந்திக்கப் போகும் மிக மிக்கிய பிரச்சனையில் இது(வும்) முக்கியமானது.

கிட்டத்தட்ட அதன் முன்னோட்டத்தை நாம் பார்த்தும்விட்டோம். கடந்த 5 ஆண்டுகளில் நாம் சந்தித்த மின்வெட்டு தான் அது. மின்வெட்டு சரியானதும் சிந்திக்க மறந்துவிட்டோம். ஓரளவு அனைத்து வளங்களும்(நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள், தோரியம், யுரேனியம்) இருக்கும் போதே தட்டுப்பாடு நிலவுகிறது.
குண்டுபல்ப்பில் பயன்படுத்தும் மின்சாரத்தில் 80% டங்ஸ்டன் மின்னிழையை சூடுபடுத்தவே பயன்படுகிறது. மீதி 20% தான் ஒளியாக மாற்றப்படுகிறது. இவ்வாறு எவ்வளவோ ஆற்றலை கடந்த நூற்றாண்டில் வீணடித்துவிட்டோம்.

ஒரு கணக்கின்படி 3100டன் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்தை வெறும் 1கிலோ யுரேனியத்தை வைத்து தயாரித்துவிடலாம். ஆனால் இங்கு ஒரு அணுமின் உலையை தொடங்கவே பல புரட்சிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

மேலும் நிலக்கரியை எரிக்கும் போது வெளிப்படும் CO2 வளிமண்டலத்தில் பசுமையக விளைவை(Green House Effect) ஏற்படுத்துகிறது. ஆற்றலின் தேவை அதிகரித்தால் அதிக நிலக்கரி பயன்படுத்த வேண்டும். அதிக அளவு CO2 வெளிப்படும். ஆக நம்மிடம் இன்னும் பல வருடங்களுக்கு நிலக்கரி இருந்தாலும் கூட அதை பயன்படுத்தும் போது ஏற்படும் இந்த பாதிப்பையும் கவனத்தில் கொள்ளும்படிச் செய்கிறது.

ஒவ்வொரு நொடியும் பூமியின் மீது விழும் சூரிய ஒளி அந்நொடிக்கு பூமிக்கு தேவையான் ஆற்றலை விட அதிகம் தானாம். இருந்தும் இன்னும் தொழில்நுட்பங்கள் வளரவில்லை முழுமையாக பயன்படுத்த. உலகில் 20% க்கும் குறைவாக தான் சூரிய ஒளி ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக மிகப் பெரும் பிரச்சனையாக கவனத்தில் கொள்ள வேண்டியது அதிகமான வாகனங்களின் பயன்பாடு. பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு செல்ல கூட இன்று பைக் தேவைபடுகிறது. சைக்கிள் என்பது ஏதோ 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தான் என்றாகிவிட்டது.
2052ல் உலகில் உள்ள அத்தனை பெட்ரோல் வளங்களும் வறண்டுவிடும். அதற்குள் மாற்று வழி ஆற்றலை கண்டுபிடித்துவிடுவார்கள் தான். ஆனால் கவலை அதுவல்ல. அதீத பயன்பாட்டால் மிக வேகமாக பாழாகும் நம் சுற்றுச்சூழல் தான்.

முதலில் வரும் விமர்சனம் நான் ஒருவன் மட்டும் மாறினால் போதுமா? என்று தான் இருக்கும். 450கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த சிறு தூசிகள் இன்று பூமி, சூரியன், சந்திரன், மற்ற கிரகங்கள் எல்லாம். என்றோ பெய்த சிறுதூறல் தான் இன்றைய பெருங்கடல்கள்...


வியாழன், அக்டோபர் 17, 2013

ஜாலி பயணம்..



விமானம் புறப்பட தயாராயிருந்தது.
கைபேசியை அனைத்து வைக்கும்மாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
இன்னும் சில நொடிகளில் தரைக்கு விடை கொடுத்து, வானில் பறக்கும் முனைப்புடன் இருந்தது.
நொடி நெருங்கியதும் பயணம் இனிதே தொடங்கியது.
சிலருக்கு பிரயாணம். பலருக்கு பிரமிப்பு..


சில நிமிடங்கள் வரை எல்லாம் சரியாக தான் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு சமவெளி பகுதியில் தரை மோதி வெடித்தது...
பயணித்த 156ல் 155 பேர் பலி. விமானி உட்பட.

பிழைத்தது ஒரே ஒரு உயிர். மிருகக்காட்சி சாலைக்கு அழைக்கப்பட்டு சென்ற குரங்கு தான் அது.
விசாரணை அதிகாரிகள் விபத்து நடந்த பகுதியில் இருந்த இந்த குரங்கை கைப்பற்றினர்.

அதிகாரி1 : கருப்பு பெட்டியும் கிடைக்கல. உயிரோட யாரும் இல்ல. எப்படி விபத்துக்கான் காரணத்த கண்டுபிடிக்க.

குரங்கு: உயிரோட தான் நான் இருக்கேன்ல.

அதிகாரி2 : ஐயா, குரங்கு பேசுது

அதிகாரி1: அட ஆமாயா.. பேசாம(பேசி தான்) இது கிட்டயே விசாரிக்கலாம் போல.

அதிகாரி2: நமக்கு வேற வழி இல்ல.

அ1: விமானம் கிளம்பும் போது பயணிகள் என்ன பண்ணுனாங்க

கு: சீட் பெல்ட் போட்டுகிட்டு இருந்தாங்க

அ1: விமான பணிப்பெண்?

கு: எல்லாருக்கும் குட்மார்னிங்க் சொல்லிகிட்டு இருந்தாங்க

அ2: அப்போ விமானி?

கு: புறப்பட எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டிருந்தனர்.

அ1: நீ?

கு: எல்லாறையும் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

அ1: விமானம் புறப்பட்ட பின் 30 நிமிடம் கழித்து பயணிகள் என்ன பண்ணுனாங்க?

கு: பாதி பேர் தூங்கிட்டாங்க. மீதி பேர் படிச்சுக்கிட்டு இருந்தாங்க

அ2: விமானபணிப்பெண்?

கு : மேக் அப் போட்டுகிட்டு இருந்தாங்க.

அ1: விமானி?

கு: விமானத்தை இயக்கி கொண்டிருந்தார்.

அ1 : நீ?

கு: இப்பவும் பார்த்துகிட்டுதான் இருந்தேன்..

அ1: விபத்து நடப்பதற்க்கு சற்று முன்னால், பயணிகள் என்ன பண்ணுனாங்க.. யாரும் கைல துப்பாக்கி வச்சிருந்தாங்கலா?

கு: யாரு கையிலயும் துப்பாக்கிலாம் இல்ல. அப்போ எல்லாரும் தூங்கிக்கிட்டு இருந்தாங்க.

அ2: விமான பணிப்பெண்?

கு: மேக் அப் போட்ட பின் எடுத்த போட்டவ பேஸ்புக்-ல அப்லோட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

அ1 : விமானி?

கு: அந்த போட்டோவுக்கு கமெண்ட் பண்ணிகிட்டு இருந்தார்.

அ1: நீ?

கு: விமானத்த இயக்கி கொண்டு இருந்தேன்...........

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

ஜின் ஜி து லி



சீடர்களே...

உங்கள் அனைவரையும் ஸ்ரீஸ்ரீ உதயானந்தாவின் ulaஅகில உலக தியான மையத்திற்கு வரவேற்கிறேன்.

இன்று நாம் பார்க்கப் போவது ஒரு எளிய பயிற்சி..

முதலில் பார்ப்பதற்க்கு பவர் ஸ்டார் போல சப்பையாக இருந்தாலும்
பள்ளிகூட வாத்தியார் போல உங்கள் முட்டியை கழற்றிவிடும்.

‘உங்கள் வயது என்ன என்று கேட்டால் ‘பாஸ் என்று அடுத்த கேள்விக்கு செல்லும் நடிகையின் வயதக் கூட இந்த பயிற்சி மூலம் கண்டுபிடிக்கலாம்.

பாஸ்(கரன்) மாதிரி அரியர்ஸ் எழுதிக் கொண்டே இருக்கும் பாய்ஸ் கூட இதை செய்தால் பாஸ் பண்ணலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு இனிப்பான பயிற்சி. ஆம்.. ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் செய்தால் போதும்.

இனி ஆரம்பிப்போமா...
சீடர்களே..
அனைவரும் உங்கள் கண்களை மூட ஆழ்ந்த தியானத்திற்கு செல்லவும்...(ஹாலோ இப்ப இல்ல.. இத முழுசா படித்த பின்)

அப்படியே கண்னை மூடிய படியே எழுந்து நிற்க்கவும்..
அப்படியே நின்று கொண்டே ஒரு காலை 90டிகிரி மடக்கவும்(கண்களை மூடியபடியே)

இப்பொழுது உங்கள் முழு உடல் எடையும் ஒரு காலில் தாங்கும்படி நிற்ப்பீர்கள்.

உங்களால் 10 நொடிகள் வரை கூட நிற்க்க முடியவில்லை என்றால் நீங்கள் உடலால் 60 அல்லது 70 வயதை அடைந்துவிட்டீர்கள் என்று பொருள்.

கண்களை மூடவில்லை என்றால் உங்களால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிற்க இயலும்.
ஆனால் கண்களை மூடிய நிலையில் 5நொடிகள் கூட நிற்க முடியாது..

இதன் பெயர் ‘ஜின் ஜி து லி
இது ஒரு சீன மருத்துவம்..
முக்கியமாக ‘மிகை இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ஞாபக மறதி, கழுத்து வலி, முதுகு தண்டு வலி உள்ளோருக்கு பரிந்துரைக்கப் படுகிறது.
மேலும் இதை எல்லோரும் தினமும் ஒரு நிமிடம் செய்தால் இந்நோய்கள் வராமல் தடுக்கலாம்.

முதலில் கண்களை முழுதும் மூடி செய்தல் கடினமாக இருக்கலாம்.
ஆரம்பத்தில் சிறிது திறந்தபடி செய்து பயிற்சி செய்யலாம்..
பழக பழக கண்களை முழுவதும் மூடியபடி செய்யலாம்..

இடையில் இஷ்க்கு இஷ்க்கு என்றெல்லாம் கேட்கலையே....




செவ்வாய், அக்டோபர் 01, 2013

காந்தியா.. யார் அவர்?


‘காந்தியா.. யார் அவர்?
சத்தியமா இந்த கேள்விய 120கோடில பாதி பேர் கேட்டிருப்பாங்க...ஒருவேளை பணத்தில் காந்தியின் உருவம் அச்சிடப்படாமால் இருந்திருந்தால்...

இல்ல இன்னும் சில வருடங்களில் தேர்வுகளில் இந்த மாதிரி கேள்வி கூட கேட்கலாம்....நம் ரூபாய் நோட்டில் இருக்கும் உருவம் யாருடையது?
இதற்க்கும் பாதிக்கும் மேலானோர் பதில் தெரியாமால் முழிக்கலாம்.

ஆக பணத்தின் மதிப்பு தான் காந்தியின் மதிப்பை இன்னும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பணத்தின் மதிப்பை விட காந்தியின் மதிப்பு குறைந்து கொண்டுவருகிறது கடந்த சில வருடங்களாக..

‘காந்தியின் அகிம்சையினால் தான் நாம் சுதந்திரம் பெற பல காலம் ஆனது. ஆங்கிலேயரை எதிர்த்து சண்டையிட்டு இருந்தால் 1947க்கு முன்னரே விடுதலையை வாங்கியிருக்கலாம்

‘ஆங்கிலேயர் காந்தியின் போரட்டத்திற்க்கு பயந்து விடுதலை தரவில்லை. இதற்க்கும் மேலும் இந்தியாவை ஆள அவர்கள் விரும்பாமல் தான் சுதந்திரம் அளித்தார்கள்

‘காந்தியின் தனிமனித போரட்டத்திற்கு கிடைத்த சுதந்திரம் அல்ல இது. எத்தனையோ தலைவர்கள் செய்த தியாகத்தின் பயன் தான் நம் சுதந்திரம். காந்தியை மட்டும் தேசப்பிதா என்பது தவறு

‘நாம் அடிமை பட்டிருக்கிறோம்.. நமக்கு விடுதலை தேவை என்பதை தெரியாமலே தான் இருந்தனர் நம் மக்கள்.
மக்களை ஒருக்கிணைக்க, விழிக்கச் செய்ய எந்த அமைப்போ, தலைவர்களோ இல்லை சுமார் 150 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியில்.

1857ல் முதல் இந்திய சுதந்திர போர் என்று பாட புத்தகத்தில் படித்த நியாபகம். ஆனால் அது சுதந்திர போரே அல்ல என்பது வரலாற்று அறிஞர்களின் வாதம். ஆம், அதில் சுதந்திரம் என்ற குறிக்கோள் இல்லை. கொழுப்பு தடவிய தோட்டாவை உபயோக்க மறுத்து சிப்பாய்களும், துணைப்படை திட்டத்தின் கீழ் தன் நாட்டை இழந்த ஜான்சி ராணியும், தன் ஓய்வூதியம் வராததால் வங்காள ஆட்சியாளரும் அவர்கள் பகுதிகளில் கிளச்சியில் ஈடுபட்டனர். ஆக ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நடக்கவில்லை இந்த போர்(கிளர்ச்சி)..

1885ல் முதன்முதலில் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ். ஆரம்பித்தவர் ஒரு ஆங்கிலேய அதிகாரி. அதன் பின் இந்தியர்கள் அதில் முக்கிய பொறுப்புகளை பெற்றனர்.
‘உயர் சாதி மாணவர்கள் ஆங்கில அரசில் பணிபுரிய, கல்லூரியில் சேர பரிந்துரை கடிதம் வழங்குவது போன்ற வேலைகளை மட்டும் செய்துவந்தது.

சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு காங்கிரஸ் என்ற அமைப்பு இருப்பதே தெரியாது. காங்கிரஸில் இருந்த அனைவரும் படித்த உயர்குடி இந்தியர்கள். ஆங்கில அரசிடமிருந்து உயர்குடி மக்களுக்கு பல சலுகைகளை வாங்கிதந்தனர், ஏழை எளிய மக்களை பற்றி எந்த கவலையும் படவில்லை.



1916ல் இந்தியா திரும்புகிறார் காந்தி. அவரும் படித்தவர் என்பதால் காங்கிரஸ் பற்றி தெரிந்து கொள்கிறார். உறுப்பினர் ஆகிறார். பின் காங்கிரஸின் தலைவராகிறார்.
·         காங்கிரசில் சேர உறுப்பினர் கட்டணத்தை குறைக்கிறார்
·         மும்பையில் செயல்பட்டது காங்கிரஸ்.. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அலுவலகம் திறந்தார் காந்தி.
·         அனைத்து சாதி, மதத்தவரும் சேரலாம் என்றவிதியை கொண்டுவந்தார்.
·         காங்கிரஸ் கூட்டம் எந்த பகுதியில் நடக்கின்றதோ, அப்பகுதி மொழியில் தான் கூட்டம் நடைபெற வேண்டும் என அறிவித்தார்.(அதற்கு முன் ஹிந்தி தான் இந்தியா முழுவதும்)
·         காங்கிரஸின் அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் மூலமே ஆட்கள் தேர்ந்தேடுக்க ஆவன் செய்தார்.(அதற்கு முன் நியமித்தல் முறை தான்).
காந்தியின் இந்த நடவடிக்கைகள் தான் இந்திய மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தது. அனைத்து வேறுபாடுகளையும் மறந்து மக்கள் ஒற்றுமையாய் இயங்கினர்.

காங்கிரஸை சுதந்திரத்திற்க்காக மட்டும் பயன்படுத்தவில்லை காந்தி.
1920ல் சுமார் 1000காங்கிரஸ் உறுப்பினர்களை(இளைஞகர்கள்) இந்தியா முழுவதும் அனுப்பினார். முக்கியமாக கிராமபுறங்களுக்கு.
கீழ்கண்டவைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த.
·         தீண்டாமை & சாதி ஒழிப்பு
·         குடிப்பழக்கத்தின் தீமை
·         சுகாதாரத்தின் முக்கியத்துவம்
·         பெண்கள் முன்னேற்றம் & பெண் கல்வி
·         ஏழ்மை ஒழிப்பு

இவ்வாறு மக்களை முன்னேற்றி, ஆங்கிலேயர் முன்னால் நிறுத்தியவர் தான் காந்தி.

காந்தி வாங்கி தந்தது இரண்டு சுதந்திரம்.
1) ஆங்கிலேயரிடமிருந்து
2) அறியாமையிலிருந்து
  


  

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...