‘மது அருந்தும்
கணவன்மார்களும், அவர்களின் மனைவிகளும்’- நேற்றைய நீனா நானா.
அந்த நிகழ்ச்சி பார்த்தப்ப ஒரு கதை நியாபகம் வந்துச்சு.
இதுவரை யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத ஒருவன் காட்டுப்பாதையில் நடந்து
சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு பூதம்(அலாவுதீன் பூதம் இல்லைங்கோ. இது கொஞ்சம்
ஆபத்தான பூதம்) அவன் முன்னாடி வந்துச்சு.
“நீ இதுவரைக்கும் யாருக்கும் எந்த தீங்க்கும் செய்த்தது இல்லையாமே”
“ஆம் பூதமே”
“ஓஹோ.அப்படியா...இப்போ நீ இங்க ஒரு தீங்கான காரியம் செய்யனும். அப்போதான் இங்க
இருந்து போக முடியும். ஆனால் அது என்ன என்பதை நான் தரும் 3 தீங்கான காரியத்தில்
ஒன்றை தேர்வு செய்யனும்.
“சொல். என் வாழ்வில் செய்யும் முதல் மற்றும் கடைசி தீங்கு இதான்”
உடனே பூதம் தன்னுடைய கிராபிக்ஸ் திறமையை பயன்படுத்தி ஒரு அழகான இளம் பெண், ஒரு
கைக்குழந்தை, ஒரு மது பாட்டில் கொண்டுவந்தது.
“நீ இந்த இளம் அழகியை கற்**ழிக்க வேண்டும்.
இல்லை இந்த சிறு குழந்தையை கொல்ல வேண்டும்.
அதுவும் இல்லை இந்த ஒரு பாட்டில் மதுவை அருந்த வேண்டும்”
இவன் யோசித்தாம்.
‘இந்த பெண்ணைக் கற்**ழித்தால் அந்த பெண்ணின் வாழ்க்கையே பாழாகி விடும்.
இந்த குழந்தையை கொன்றால் அவர்கள் குடும்பம் மீளாத் துயரம் கொள்ளும்.
ஆனால் மது அது எனக்கு மட்டும் தான் கெடுதல். அதுவும் இன்று ஒரு நாள் மட்டும்
தானே’
அருந்தினான்.
போதையில் அந்த பெண்ணையும் கற்பழிக்கச் சென்றுவிட்டான். அப்போது அந்த குழந்தை
அழுதது. இடைஞ்சல் என கருதி அந்த குழந்தையையும் கொன்றுவிட்டான்.
இந்த கதையின் நீதியை நான் சொல்லித்தான் தெரியனும்னு இல்லை.
‘சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்றார் வள்ளுவர். அவர் மீதும் எனக்கு
கோபம் தான். பின்ன ‘மது என்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்று சொல்லாமல்
சென்றுவிட்டாரே.
புகையிலைக் கூட உடல் நலத்திற்க்கு தான் கேடு. மது நாட்டிற்க்கே கேடு. அதனால் தான் ‘குடி குடியை(யே) கெடுக்கும்’னு
எழுதிவச்சுருக்காங்க.
இன்று மருத்துவம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளது. அதுனால மது அருந்துவதால் உடல்
ரீதியா ஏற்படும் பிரச்சனைகள் ஒரு பிரச்சனையே அல்ல. உங்கள் ஆயுள் காலத்தில் எந்த குறைவும்
கூட ஏற்படாமல் இருக்கலாம்.
ஆனால் இந்த மானம். அது கப்பல் ஏறி போய்ருமே.
‘நான் எவ்வளவு குடிச்சாலும் ரொம்ப ஸ்ட்ராங் தெரியுமா?!’. உங்க மட்டும்
தான் தெரியல நீங்க எப்படி நடப்பிங்கனு. அதான் இந்த பேச்செல்லாம்.
‘எனக்கு மது அருந்துற
பழக்கம்லாம் இல்லைங்க.. ஏதோ பீர் மட்டும் சாப்பிடுவேங்க. அது உடம்புக்கு எந்த
கெடுதலும் இல்லைல’ அப்படினு
சொல்றவங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்க ஆச படுறேன். ‘எந்த மருந்து கடைல பீர்
விக்கிறாங்க. எந்த குளிபானக் கடைல பீர் விக்கிறாங்க’
பின்குறிப்பு:
இப்பதிவை படித்த 100% பேரும் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் என்று எனக்குத்
தெரியும்.
இனிமேலும் இப்படியே இருக்க வேண்டும் என்பதற்க்கே இந்த பதிவு.
வருங்காலத்தில் மதுக்கடைகள் இல்லா தமிழகம் படைக்க சூளுரை ஏற்ப்போம் நண்பர்களே.